முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

பயணத்தின் இறுதி நாள். சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த பொன்னரையும் சங்கரையும் தேடி பயணப்பட்டோம். அண்ணன்மார் கதையின் ஆரம்பம் மதுக்கரையில் இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல். கலைஞர் எழுதிய காவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதாகவும், அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதையும் என் சிற்றன்னை குறிப்பிட்டார். கதையை அறியாமல் இடத்தின் மகிமையை அறிய இயலாது அதனால், மூன்று தலைமுறை கதையை எளிமையாக இங்கு சொடுக்கி படித்துவிட்டு வாருங்கள்.

என்ன கதை தெரிந்துவிட்டதா?. இனி பயணத்தினை தொடர்வோம். கரூர் நகரிலிருந்து வீரப்பூர் செல்ல அரைமணி நேரம் ஆனது. முதலில் பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு சென்றோம். இந்த அம்மன் தான் தங்கை அருக்காணிக்கு ஓமதீர்த்தம் தந்ததாக சொல்கின்றார்கள். கோவிலின் முன் திருவிழாக் கடைகள் நிரந்திரமாக இருக்கின்றன. அதைவிட பிச்சைக்காரர்களும் இருக்கின்றார்கள். குலதெய்வக்கோவில்களில் முதன் முதலாக பிச்சைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன்.

நாள்தோறும் வருகின்ற கூட்டத்திடம் கொஞ்சம் பணம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கின்றார்கள். இவர்களாவது தேவலாம் என்றிருந்தது, உள்ளே பூசாரிகள் அடிக்கும் கொள்ளை. தீபாராதனை காட்டுவார் ஒருவர், அர்ச்சனை செய்வார் ஒருவர், சந்தனப் பொட்டு வைக்கிறார் ஒருவர். ஆனால் எல்லோரும் காசு காசு என பிய்த்து எடுக்கின்றார்கள். கொஞ்சம் ஏமாந்தால் மொட்டை அடித்துவிடுவார்கள். கோவிலை சுற்றி வருகையில் கூட இரண்டு மூன்றுபேர் நிற்கின்றார்கள். தீர்த்தம் தெளிப்பதற்கு கூட தனியாக வசூல். ஆச்சிரியம் என்னவென்றால் பூசாரிகளெல்லாம் தங்கள் பணத்தினை தனித்தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள, பிச்சைக்காரர்கள் ஒற்றுமையாக ஒருவரிடம் கொடுத்துவிட்டு போங்கள் நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

அடுத்து சங்கரை பொன்னர் அடைத்துவைத்தாக சொல்லப்படுகின்ற இடத்திற்கு சென்றோம். அங்கே கன்னிமார்களும், பொன்னர், சங்கர், அருக்காணிக்கும் சிலை வைத்திருக்கின்றார்கள். ஒரு திருவிழா கூட்டமே அங்கிருந்தது. நாங்கள் செல்லும் போது, ஒரு பணக்காரப் குடும்பம் சமையல் செய்து கொண்டிருந்தது. அவர்களின் அருகே இருந்த சுமோவில் தி.மு.க பிரமுகரின் பெயர் கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ஆச்சரியமாக ஒத்துக்கொண்டார்கள். அந்த இடத்திற்கு அருகே மகாமுனியின் சிலை இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த காவல்தெய்வமாக அதை கொண்டாடுகின்றார்கள்.

அதன்பிறகு காலம்காலமாக மர்மமாகவே இருக்கும் படுகளம் பகுதிக்குச் சென்றோம். பெரிய மைதானம் போல இருந்தது படுகளம். சுற்றிலும் மதில் சுவர் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்குள் பொன்னர், சங்கர் தற்கொலை செய்து கொள்வது, வீரபத்திரன் முறசு கொட்டுவது என பல சிலைகள் சிமென்டால் செய்யப்பட்டிருக்கின்றன. மைதானத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும், மறுத்துவிட்டார்கள். அதற்காக விட்டுவிட இயலுமா. பொன்னரும் சங்கரும் மனைவிகளுடன் இருந்ததை படம்பிடித்து கொண்டேன்.

இந்னும் இரண்டு இடங்கள் மீதம் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று போரில் சிந்தப்பட்ட ரத்தம் கற்களாக இருக்கும் பகுதி, மற்றொன்று பெரியக்கா தபசு என்கிற இடம். படுகளம் பகுதிக்கு அருகிலேயே போர் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடமும் இருக்கிறது. அந்தப்பகுதிக்கு சம்மந்தம் இல்லாத கற்கள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில் கரிய நிற கற்களின் பரவலுக்கு மேல், ஒரு குடிசை தெரிகிறது. அதற்குள் வழக்கம் போல, பொன்னர் சங்கரின் சிலைகள். அங்கிருக்கும் கற்களை ரத்தம் என்று நம்ப முடியவில்லை. மற்ற கற்களைக் காட்டிலும் அந்தக் கற்கள் எடை குறைவாக இருந்தன. அங்கிருக்கும் பூசாரி ஒரு பெரிய கல்லை வைத்துக்கொண்டு இதுதான் உண்மையான ரத்தக் கல் என்று வருவோரின் தலையில் வைத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கல்லின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வளவு ரத்தம் வந்திருந்தால் நிச்சயம் மனிதன் பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை எந்பது வேறுவிசயம். இவைகளையெல்லாம் பார்ப்பதற்குள்ளவே மாலை நேரம் நெருங்கி விட்டது. அடுத்த முறை வந்தால், பெரியக்கா தபசை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய பள்ளித் தோழியின் குலதெய்வம் பொன்னர் சங்கர். அவள் டியூசன் நேரத்தில் அந்தக் கதையை கூறுவாள். நமக்குதான் கதைகள் என்றாலே கொள்ளைப் பிரியமாயிற்றே. பட்ப்பை விட்டுவிட்டு நாள்தோரும் கதைகள் கேட்டுக்கொண்டே பொழுது போனது. வீரப்பூரின் ஒவ்வொறு இடங்களுக்கு செல்லுகையிலும் அவள் சொன்ன கதைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இன்று அவள் எங்கிருக்கிறாள் என தெரியாது. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை அவள் குடும்பத்துடன் வந்துபோகும் இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பெரியசாமி கோவிலுக்கு போகும் போதெல்லாம் என்னுடைய பாட்டாவின் பெயர் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதை பெருமையாக பார்த்துவிட்டு வருவேன். என்னுடைய எத்தனை தலைமுறைகள் அங்கே கால்தடம் பதித்திருக்கின்றன என எண்ணும் போதே, ஒரு இனம் புரியாத சினேகம் வருகிறது. காலம் காலமாக இந்தக் கதைகள் நம்மிடைய ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதன் சாட்சியாக வீரப்பூர் போன்ற ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கும் இந்த வாய்ப்பை தருவதே மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களைத் தேடி புறப்பட்ட எங்கள் முதல் பயணம் இனிதே நிறைவுற்றது. ஆனால் இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்றே தோன்றுகிறது.

18 comments on “முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

 1. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

  யப்பா மிகவும் எதிபார்த்த பதிவு படிச்சாச்சு
  இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்பது உண்மைதான்.

  உங்களுக்கு வேலை பளு இல்லாத நாட்களில் அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் (ஜெயங்கொண்டம் அருகில் உள்ளது )சென்று அதன் அனுபத்தை எங்களுக்கு எங்களுக்கு வழங்கவேண்டும்

  இது தொல்லியல் மாற்றும் சிறந்த சுற்றுலா தளம் இதனை உலகறிய செய்வீர்களா

 2. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

  கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய தகவல்கள் உள்ள முகவரியை தரமுடியுமா

 3. படைப்பாளி சொல்கிறார்:

  நீங்க குல தெய்வங்களைப் பத்தி புத்தகம் போடுங்க நண்பா..எவ்ளோ தகவல்கள்..சூப்பர்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அதற்காக ஒரு பதிப்பகம் முன்வந்தது, ஆனால் அவர்கள் சடங்குகளையும் எதிர்ப்பார்க்கின்றனர். முன்னோர்களின் கதைகளை மட்டுமே நான் தேடுவதால், சடங்குகளை சேகரிக்க தவறிவிட்டேன். எல்லாம் கிடைக்கும் பட்சத்தில் புத்தகம் சாத்தியமாகும்.

   நன்றி நண்பரே@

 4. question சொல்கிறார்:

  Please do not promote castism

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இந்த இடுகையில் சாதியைப் பற்றி நான் குறிப்பிடவே இல்லையே. நீங்கள் கண் மருத்துவரை சந்திப்பது நல்லது.

   முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் சொன்னால், அதற்கு பதில் இதோ. சாதியின் வீ்ச்சம் இல்லாமல் முன்னோர்களைப் பற்றி எழுத முடியாது. என்னுடைய தாத்தவின் பெயரை சாதியில்லாமல் சொல்லவே முடியாது. அப்படியிருக்க உங்கள் கோரிக்கை நிறைவேற்றுவது இயலாத காரியம். புரிந்து கொள்ளுங்கள் என்பதே.

 5. question சொல்கிறார்:

  “பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன்…”

  புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டீர், சரி அதை இன்டர்நெட்டில் போட அனுமதி கேட்டீரா?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   கேள்வி கேட்பதற்காகவே வந்திருக்கின்றீர்கள் போல.

   எல்லா பூசாரிகளும் சொல்வது புகைப்படம் எடுத்து வீட்டில் வைக்காதீர்கள் என்பதே. கோவிலுக்கு வருகின்றவர்களின் கூட்டம் அதனால் குறையும் என்ற அச்சமே இதற்கு காரணம். சில பிரபல கோவில்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் விற்பனை செய்வதற்காக, பக்தர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கின்றார்கள். இணையத்தில் வெளியிடுவதற்கோ, புத்தகத்தில் வெளியிடவோ அவர்கள் மறுப்பு கூறவில்லை. மேலும் இது ஒரு பிரட்சனையே இல்லை. அதெல்லாம் சரி அனுமதியில்லாமல் புகைப்படம் வெளியி்ட்டிருந்தால் ஏதாவது செய்வதாக உத்தேசமா நண்பரே!.

   • question சொல்கிறார்:

    “சில பிரபல கோவில்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் விற்பனை செய்வதற்காக, பக்தர்கள் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கின்றார்கள்…”

    Very big mistake in the way you think! Banning photography is not for selling their own, but to maintain the pureness of the Kovil.

 6. ஆர்.கே.சதீஷ்குமார் சொல்கிறார்:

  ரொம்ப பரவசமா திருப்தியா இருந்தது கதை.குல தெய்வ வழிபாடு பற்றி சுஜாதா வும் சிலாகித்து எழுதி இருக்கார்.அதாவது முன்னோர்கல் வழிபட்ட கடவூளை தானும் வழிபடும் போடு அவர்களின் ஆத்மாவை வணங்குவது போன்ற உனர்வு உண்டாவது உண்மை

 7. ravindran சொல்கிறார்:

  பெரியகாண்டியம்மன் படம் உள்ளதா? கூகிள் தேடல் பல முறை செய்துவிட்டேன் ஆனாலும் கிடைக்கவில்லை !!!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   கருவறைக்குள் இருக்கும் அம்மனை எளிதாக புகைப்படம் பிடிக்க அனுமதியில்லை. பெரியகாண்டியம்மன் கோவிலின் பின்புறம் இருக்கும் மரத்தடையில் சில சாமிகளை படம்எடுத்தேன். அதில் பெரியகாண்டியம்மன் இருந்தால் தளத்தில் கொடுக்கிறேன் நண்பரே.

   நன்றி.

 8. Sara Durai சொல்கிறார்:

  தயவு செய்து காசுக்கு சண்டை போடுகிறார்கள் என்பதை நீக்கவும்.. ஒரு எட்டனா கீழ கெடந்த அத நீங்க எடுக்காம போவீங்களா.. இரத்தக் கல் கட்டுகதையாகவே இருக்கட்டும் உங்களுக்கு என்ன வலிக்குது.. நீங்க வலது கையில சாப்பிட சொல்லி கொடுத்தது உங்க கம்ப்யூட்டரில்ல உங்க பாட்டன்.அத நம்பி வலது கையில் சோறு உங்கவும் இடது கையில் — கழுவவும் செய்கிறோம்

 9. Sara Durai சொல்கிறார்:

  சாதி பற்றி பேசாதேன்னு ஒருத்தன் சொல்றான்.. டேய் நாங்க ஒன்னும் உன்ற முப்பாட்டன் திருட வந்த கதைய சொல்லலை ..எங்க முப்பாட்டனாரின் வீர வாழ்க்கைய சொல்றோம்.வலிச்சுதுன்னா இத ஏன் பார்க்குற

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s