தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்

கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவிலைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அறிய பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து. அங்கிருக்கும் சிற்பங்களை கண்டறிந்து, சிற்பங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தால் அதை அழகாக வரைந்து, அதன் புராணத்தினை கண்டறிந்து மக்களுக்கு கல்லிலே கலைவண்ணம் கண்டோம் என்ற இணையதளம் சொல்லுகிறது. அங்கு சென்றால் போதும்.

விழுகின்ற நிழல் –

தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன. அதுவும் எது உண்மை என காலம்காலமாக நம்பும் அளவிற்கு. கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்று நானும் நம்பிக்கொண்டிருந்தேன். நீங்களும் நம்பிக்கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். அது பொய் என்று படம் பிடித்து விளக்கியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்குங்கள்.

யாளி வீரர்கள் –

இந்த யாளியில் வீரர்கள் படையெடுத்து செல்வதை பார்த்தீர்களா. இதைப் போன்ற ஏகப்பட்ட வீரர்கள் தங்கள் யாளியுடன் கிளம்பிச் செல்கிறார்கள். இவர்களை தஞ்சைக் கோவிலில் பார்த்திருக்கின்றீர்களா?. இல்லையா ?. இத்தனை யாளிகள் எப்படி உங்கள் கண்களிலிருந்து தப்பின?. தெரிந்து கொள்ள ஆசையா அடுத்த சிற்பத்தினை பாருங்கள். ஒரு பேனா மூடியை வைத்து அந்த சிற்பம் எத்தனை சிறியதாக இருக்கிறதென சொல்லியிருக்கின்றார்கள். பெரிய கோவிலில் இத்தனை சிறிய சிற்பங்கள் கண்களில் படுபவது ஆச்சிரியமானதுதானே. மேலும் இதைப் பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்.

மோனோலிசாவை மிஞ்சும் சிவன் –

டாவின்சியின் மோனோலிசாவை எத்தனை உச்சத்தில் வைத்துப் போற்றுகிறோம் நாம். அவள் சோகமாக இருக்கிறாள், அதே சமயம் மர்மப் புன்னகையையும் வீசுகிறாள் என்று அவளின் அழகை போற்றுகிறோம். ஆனால் இங்கே நம் தஞ்சையில் அப்படி ஒரு சிற்பம் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா. உண்மைதான். இந்த சிற்பத்தில் கோபம் இருப்பதை போன்று அன்பான பக்கமும் இருக்கிறது. கோபமும், புன்னகையும் கொண்ட இந்த சிற்பத்தினை பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்.

பெரிய நந்தி??? –


கோவிலின் முன்னால் இருக்கும் நந்தி வளர்ந்து கொண்டே இருந்தது. அதன் பிறகு அதன் தலையில் ஆணி அடித்து அது வளர்வதை தடுத்து நிறுத்தினார்கள் என்று சிறுவயதில் கதை கேட்டிருப்போம். நாமக்கல் ஆஞ்சிநேயர் சிலைக்கு கூட இதுபோல ஒரு கதை உண்டு. மிகப்பெரிய நந்தியை சிற்பமாக வடித்திருப்பதை நம்ப இயலாமல் சுவாரசியத்திற்காக சொன்ன கதைகள் இவை. ஆனால் உண்மையில் இந்த நந்தி சிற்பம் கோபுரத்தில் உள்ளது. அது எத்தனை உயரமானது என்பதை அழகாக மனிதனை வைத்து நமக்கு காட்டியிருக்கின்றார்கள். இதைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்குங்கள்.

துவாரபாலகர்கள் –

சரி, குட்டி குட்டி சிற்பங்களையெல்லாம் கண்டு கொள்வது கஸ்டம் தான். ஆனால் ஒரு யானை அளவிற்கு பெரிய சிற்பங்களையே நாம் கோட்டை விட்டிருக்கிறோம் தெரியுமா. பொதுவாக சிற்பத்தின் அளவை நமக்கு காட்ட அவர்கள் பேனாவின் மூடியை, கைப்பேசியை அருகே வைத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்த சிற்பத்தின் பிரம்மாண்டத்தினைக் காட்ட யானையை உபயோகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சிற்பத்தின் மகத்துவம் அறிய இங்கு சொடுக்குங்கள்.

பெரிய கோவிலைப் பற்றிய இடுகைகள் –
பத்து நூற்றாண்டைக் கடந்த பயணம்
பெரிய கோவிலின் சிறப்புக்கள்

42 comments on “தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்

 1. கோகிலா சொல்கிறார்:

  நிழல் விழுவதை இப்போதுதான் அறிகிறேன். இத்தனை காலம் நம்பியதை பொய் எனும் போது கொஞ்சம் வருத்தம் வருகிறது. இருந்தாலும் பெருமை கொள்ள யானையை விட பெரிய சிற்பங்கள். எறும்பின் அளவு இருந்தாலும் அழகினை வெளிப்படுத்தும் கலைகள் ஏகம் இருப்பதை பார்த்த பின்பு, தஞ்சை பெரிய கோவிலின் பெருமைகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நானும் வருத்தம் கொண்டேன். நிழல் விழும் உண்மையை நம் தலைமுறையினர் அறிய வேண்டும். அதைவிட நீங்கள் சொன்னது போல உண்மையான அதிசயங்கள் இருக்கும் போது எதற்கு பொய்யான ஒன்றினை புகழென பரப்ப வேண்டும். நன்றி.

  • durairaj சொல்கிறார்:

   Naan onrai thelivupadutha vizhaiginren. Koil gopurathin nizhal vizhaadhu yenru solla villai, gopurathin meedhu ulla vimanathin nizhal vizhadhu enru thann solli irukkerargal. Kalapokkil nizhal vizhathu yenru podhuvaaga kuripittathal intha kuzhappam. Koil Gopura vimanathin nizhal tharaiyil vizhathu aanal andha gopurathin meedhey vizhum ithudhaan unmail.

 2. adhithakarikalan சொல்கிறார்:

  இந்து இடுக்கிளெல்லாம் புகுந்து ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க நண்பரே… நல்ல இடுகை..

 3. சரவணன் தஞ்சை சொல்கிறார்:

  தஞ்சை கோவிலைப் பற்றிய பல உண்மைகளோடு, சில பொய்களும் கலந்திருக்கின்றன என்ற உண்மையை ஒருசில வரிகளோடு நிறுத்திவிட்டு ,பின்னர் அதன் பெருமைகளையும் ,அதனுடைய விளக்கங்களும் அருமை.

  தஞ்சை மன்னர் ராஜராஜ சோழனின்,உழைப்பும் அவனது கட்டிட தொழில் நுட்பமும் இன்றும் உலக அளவில் நம்மை தலை நிமிர செய்திருக்கின்றன என்பதே உண்மை. ஆயிரம் ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கடைசியில் சிவா பக்தரான நீங்கள் ஒருவரி போற்றி வாழ்தியுருக்கலாம்..

  சரி விடுங்கள் இருக்கவே இருக்கிறது முன்னோர்களின் தேடல் .ஆமாம் நண்பா எப்போ தஞ்சை வரீங்க…………

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   விரைவில் அதுவும் குடும்பத்துடன் அனுஅனுவாய் காணவேண்டுமல்லவா?.

   //ஆயிரம் ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கடைசியில் சிவா பக்தரான நீங்கள் ஒருவரி போற்றி வாழ்தியுருக்கலாம்//

   கோவிலை வாழ்த்தாது குறித்து இத்தனை கோபமா. அதனுடைய பெருமைகளை தனியாக விவரித்திருந்தும் உங்கள் மனதினை நிறைவு செய்யவில்லை என்றால், எப்படி போற்றி வாழ்த்துவது என சொல்லுங்கள். செய்துவிடுவோம். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்னவென்று சொல்லுங்கள்.

 4. virutcham சொல்கிறார்:

  When I went seeing the shadow of the Gopuram, we were discussing among us. One of the vistor told us during noon the doom shadow will not fall. Reason is the basement of doom is big enough to hold the shadow of the doom on its base itself. Thats why it wont fall in the ground. That seems reasonable. What do you say?

 5. vijay சொல்கிறார்:

  ஒரு கன்னிப்பெண் மல்லாந்து படுத்து இருந்தால் மார்பின் நிழல் அவளது உடம்பிற்குள்ளே விழுந்து விடும். இதனடிப்படையில் கட்டியதாக எங்கோ படித்த ஞாபகம்.

  முன்னோர்களின் நுண்ணறிவிர்க்கு ஒரு வணக்கம்

  வாழ்த்துக்கள்

  விஜய்

 6. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல நல்ல தகவல்கள்…தெளிவான செய்திகள்..தேடல்..அருமை நண்பா..

 7. Ganesh.K.T.P சொல்கிறார்:

  அருமையான வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

 8. செல்வகுமார் சொல்கிறார்:

  அருண்மொழிதேவன் என்ற மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய பெருவடையார் கோயில் இன்றளவும் கம்பீரமாய் நிலைத்து அவர் பெயரையம் நம் முன்னோரின் கட்டடக்கலையின் சிறப்பையும் இந்த உலகுக்கு பறைசாற்றுகிறது. ஒரு மன்னன் எப்படி மக்கள் ஆட்சி நடத்தினான் என்பதற்கு பல நூறு கல்வெட்டுகளே சாட்சி. மாமன்னன் ராஜராஜன் பக்தியோடும், நிர்வாக திறமையோடும் நல்லாட்சி புரிந்ததை பெருவுடையார் கோயிலே நமக்கு சொல்லும். ஒரு மன்னன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு மாமன்னன் ராஜராஜன் ஆட்சியே சாட்சி. ஆயிரம் ஆண்டுகள் என்ன ஆயிரம் கோடி ஆண்டுகள் நிலைத்திருக்க எல்லாம் வல்ல சிவனும், மாமன்னன் ராஜராஜன் ஆன்மாவும் அருள் புரியட்டும்….

 9. தமிழன்பன் அமிர்தன் சொல்கிறார்:

  உண்மை சொல்ல வேண்டுமானால், அன்று அந்த சுமை தூக்குபவர்களிடம் இருந்த மகிழ்ச்சி இன்று லகரங்கள் சம்பாதிப்பவர்களிடம் இல்லை… மும்மாரி பெய்த காலம், பசுமை, செழிப்பு, குளிர்ச்சி, கலாசாரம், நட்பு, உறவு, நம்பிக்கை அனைத்தும் வீடுதோறும் கொட்டிக்கிடந்த காலம்… நினைத்தாலே கண்ணீர் வரவைக்கிறது… காமராஜர் ஆட்சியையும் வேண்டாம் , காரல் மார்க்ஸ் ஆட்சியையும் வேண்டாம் , மீண்டும் சோழர்களே வந்தால் வாழ்வு செழிக்கும் அல்லவோ..? நம் சந்ததியினர் பாவம் செய்து விட்டோம், சுத்தமான குடிநீர் கூட நமக்கு கிடைக்காது… இறைவா காலத்தின் கடிகாரத்தை பின்னோக்கி சுற்றி எங்களை சோழனிடம் கொண்டு செல்வாயோ?…

 10. jayachar சொல்கிறார்:

  உண்மையிலேயே அருமையான, இதுவரை அறியாத
  தகவல்கள். நல்ல விளக்கங்கள். வாழ்க நண்பரே. வாழ்க வளமுடன்.

 11. tamilselvan சொல்கிறார்:

  nanbar ranjangam sonnathu pola antha cholargal meendum vandal englukku jegatheswaran vendum thanks

 12. chandran சொல்கிறார்:

  mr jedesh neenkal oru sinna kovilai katty parkaavom chandran covai

 13. vairamuthu சொல்கிறார்:

  theriyatha arumaiyana thagavalkal. nantri nanbare…

 14. Raavi சொல்கிறார்:

  friend i need to know how the great raja raja cholan died?

 15. Banu சொல்கிறார்:

  😦 nizhal vilundha enna? ellam nalla than iruku ponga………….

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நிழல் விழாது என்பது தஞ்சைக் கோவிலின் கட்டிடக் கலை வல்லமைக்காக கூறப்படும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தி. ஆனால் உண்மையில் கலையார்வம் மிக்கவர்களுக்கு உண்மையை எடுத்துக்கூற விரும்பியே இங்கு பதிந்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

 16. J.GEETHARANI சொல்கிறார்:

  IDHU VARAI THEIYATHA SEITHIGALAI PARTHTHURKU NANRI VAAZHGA VALAMUDAN

 17. தங்கப்பாண்டி சொல்கிறார்:

  காலங்கள் மாறினாலும் தமிழர்களின் கலைத்திறம் மாறாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s