மகாமந்திரம் திருவருட்பா இசைவடிவ இலவச தரவிரக்கம்

சிவமய மாம்சுத்த ஜோதி – சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி – என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி சிவசிவ (4570)

இந்தப் பாடல் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்று பாடல்களில் நேர்மறை எண்ணங்களை புகுத்தியவர் எழுதிய பாடல். கருணையின் உச்சமாக, ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று சொன்னவரின் பாடல். வடலூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்க காரணமானவர் எழுதிய பாடல்.

ஆம், இது வள்ளலார் பாடல்.  இந்த மண்ணின் எண்ணற்ற மனிதர்கள் வாழ்ந்து மடிந்துள்ளார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய மனிதநேயத்தால் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் வள்ளலார். ஈசன் உலகிற்கெல்லாம் படியளப்பவன். அவனின் உருவமாக மண்ணில் உதித்து மக்களுக்கு உணவிட்டவர் வள்ளலார். அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல் இன்றும் அனையாத அடுப்பை தந்து மக்களின் மிகப்பெரிய பிணியாம் பசியை விரட்டிக்கொண்டிருக்கின்றார் அவர் பக்தர்களின் மூலமாக.

பிற உயிர்களை தன் உயிர்போல நினைத்தல், சாதிகளை மதிக்காமல் மனிதத்தினை மதித்தல் போன்ற கணக்கிலடங்காத நல்லவைகளை சொல்லிச் சென்றவர். இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். அது,…

அருட்பெருஞ்சோதி; அருட்பெருஞ்சோதி;
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

என அவர் வழங்கிய சோதித் தத்துவம் எனும் மகாமந்திரம். அது இன்று எல்லைகள் கடந்து எங்கும் பரவியிருக்கிறது. மனதிற்கு அமைதி தரும் அந்த மகாமந்திரத்தினை இசையோடு சேர்த்து தந்திருக்கின்றார்கள் பக்தர்கள். பாடலை கேட்டால், மனஅமைதி தானாக வந்துவிடும்.

  • மகாமந்திரம் – 1 தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
  • மகாமந்திரம் – 2 தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

அதோடு அவர் அருளிய திருவருட்பா பாடல்களையும் இசையால் வடிவமக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இயன்றளவு அதை நிறைவேற்றிக்கொண்டும் இருக்கின்றார்கள். ஞானக்களஞ்சியமாக, சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களும், சித்துகளும் உள்ளடக்கியதாக இருக்கும் திருவருட்பா பாடல்கள், இசை வடிவெடுத்து இன்பம் பயக்கின்றன. இணையத்திலே பாடலை கேட்பதற்கும் படிப்பதற்கும் வசதி செய்திருக்கின்றனர்.

  • திருவருட்பா பாடல்களை இணையத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்.
  • திருவருட்பா பாடல்களை இணையத்தில் கேட்க இங்கு சொடுக்கவும்.

சோதிதரிசனம் –

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்.

மேலும் –

பசிப்பிணியகற்றும் வள்ளலார்

7 comments on “மகாமந்திரம் திருவருட்பா இசைவடிவ இலவச தரவிரக்கம்

  1. navamani சொல்கிறார்:

    நன்றிகள் !

  2. athavan a சொல்கிறார்:

    nallathu,,,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s