அம்மாவும் கூட கொடுரமானவள் – மருத்துவர் ஷாலினி


மருத்துவர் ஷாலினி அவர்கள் குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவு என சகல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்., அவருடைய வலைப்பூ தமிழில் என்ற பெயரில் இருக்கிறது.

மனநலவியல் நிபுனர் என்பதால் அவருடைய பார்வை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. தற்போது அவர் ஆனந்தவிகடனில் உயிர்மொழி என்ற தொடரை எழுதிவருகிறார். அதில் அம்மாக்கள் மகன்களை கைக்குள் வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கின்றார்கள் என எடுத்து கூறியுள்ளார். மனைவின் முந்தானையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆண்களை விட அம்மாவிடம் மாட்டிக்கொண்டிருக்கும் ஆண்கள் அதிகம் என்கிறார். அவருடைய வலைப்பூவில் கூட இந்த தொடரை தொடர்கிறார். ஆனந்தவிகடன் படிக்காதவர்கள், அங்கு சென்று படித்துக்கொள்ளலாம்.

அதில் ஒரு கட்டுரை அம்மாவின் அஸ்திரங்கள். அதன் சாரம்சத்தினை மட்டும் வெளியிட்டிருக்கிறேன்.

அஸ்திரம் ஒன்று – “பத்து மாதம் சுமந்து பெற்றதாய்” என அடிக்கடி சொல்லிக்காட்டி சென்டிமென்டில் வைத்துக்கொள்ளுதல். இந்த சென்டிமென்டில் மாட்டிக்கொள்பவர்கள் ஆண்கள்தானாம். பெண்கள் இந்த விஷயத்தினை கண்டு கொள்வதே இல்லையாம். காரணம் பின்நாளில் தானும் அம்மாவைப்போல பெற்றுக்கொள்ளத்தானே போகிறோம் என்ற எண்ணம்.

அஸ்திரம் இரண்டு – ஆண்குழந்தையை பெற்றெடுத்ததே பெரியசாதனை என்று நினைத்துக்கொண்டு, அவனை விலையுயர்ந்த பொருளை போல பாதுகாத்து வைப்பார்கள் சில அன்னைமார்கள். தன்னுடன் மட்டுமே விளையாட, விரும்ப என கற்றுக்கொடுத்து பிறருடன் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். இப்படி அவனை தன்னிச்சையாக வளரவே விடமாட்டார்கள். இதனால் பின்னாளில் மாமியார் மருமகள் சண்டை வரும்போது தடுமாறிப்போகினான் ஆண்மகன்.

அஸ்திரம் மூன்று – பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் கதைகளில் கூட அதிக கவணம் எடுத்துக்கொண்டு, தனக்கு சாதகமான கதைகளை சொலலியே வளர்ப்பார்கள். இது ஒரு தாய் தன்னைக் காத்துக்கொள்ள செய்யும் உத்தி. அம்மாதான் எல்லாம் என்று சிறுவயது முதல் நம்பி வாழுகின்ற ஜீவனாக மாறிவிடுகிறான் ஆண்மகன்.

அஸ்திரம் நான்கு – காட்டில் வாழும் பெண் குரங்குகள் ஆண்குரங்களுக்கு பேன் பார்ப்பது, தொட்டு தடவி விடுவது என தாஜா செய்யும். அப்படிபட்ட பெண்குரங்கைதான் ஆண் குரங்கு பாதுகாக்கும். அதைப்போலவே ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அதிக சலுகைகள் கொடுத்து அம்மா வளர்க்கின்றாள். இதன்பின்னனி அவனிடம் அதிக அக்கரை காட்டி, அதிக பாதுகாப்பினை பெருவதுதான்.

அஸ்திரம் ஐந்து – ஆண்குழந்தைகளுக்கு சமையல் செய்வது, சலவை செய்வது, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற காரியங்களை சொல்லிக்கொடுக்காமல், அதெல்லாம் பெண்களின் வேலை என தடுத்துவிடுவார்கள் பெரும்பாலானோர். இதன் காரணம் சூட்சமமானது. ஆண் தன்னுடைய தேவைகளை பெண்ணை சாராமல் செய்ய முடியாதவாறு வளர்த்துவி்ட்டால், அவள் இல்லாமல் அவனால் வாழமுடியாது என்பதே.

மிக கவணமாக யோசித்தால் மட்டுமே அன்பெனும் அஸ்திரம் கொண்டு அன்னை செய்யும் லீலைகள் புரியும். “என்னுடைய தாய்போல வருமா” என்று அம்மாக்களின் அடிமைகளாக இருக்கும் ஆண்வர்க்கத்தின் கண்மூடித்தனமான நம்பி்க்கைக்கு இந்த அஸ்திரங்கள்தான் காரணம் என்கிறார் ஷாலினி. அவருடைய கோணத்தில் சிந்தித்தால் பயமாகத்தான் இருக்கிறது.

என்னுடைய வீட்டில் வாடகைக்கு ஒரு கிறித்துவ குடும்பம் குடியிருந்தார்கள். அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்தது. அவர் ஒரு முறை என்னிடம் “எம் பொண்டாட்டி எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேங்கிறா தம்பி, எம் பொண்ணுக்கு 3 வயசாவுது, இன்னும் தாய்ப்பால் கொடுக்கிறா” என்று வருத்தம் கொண்டார். சில பெண்களுக்கு தாய்ப்பால் தருவதே சுகமாகிப் போகிறது. சுரக்கிறது என்று சொல்லி தன்னுடைய சுகத்திற்காக விவரம் தெரியும் குழந்தைகளுக்கு கூட தாய்ப்பாலை தந்துகொண்டிருக்கின்றார்கள். காரணம் குழந்தைக்காக இல்லை. தங்களின் சுகத்திற்காக எனும் போது நெருடலாக இருக்கிறது.

சமூகத்தில் தன்னுடைய குழந்தை சிறந்தவனாக வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், ஐட்டியைகூட துவைக்கத் தெரியாத ஆண்மகன்களை உருவாக்குவதில் பெண்களில் சிலர் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு எங்கள் பிளாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பாட்டியை சொல்லலாம். “என்னுடைய மகனுக்கு ஐட்டியைக்கூட துவைக்கத் தெரியாது. ஒரு முறை நான் ஊருக்கு சென்று நெடுநாட்கள் தங்கிவிட்டதால் புதுப்புது ஐட்டியாக வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தான்” என பெருமையாகச் சொன்னார். அவருக்கு கல்யாணமாகி ஒரு பையனே இருக்கிறார். ஆனால் ஐட்டியைக் கூட துவைக்கத் தெரியாத மனிதனாகவே வாழ்ந்துவிட்டார். இப்படி எத்தனையோ அம்மாக்களை இந்த உலகம் கண்டுகொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கவணமாக இல்லையென்றால் அம்மாக்களின் முந்தானையே உலகம் என நம்பும் “ராம்” பட கதாநாயகன்போல வளர்ந்துவிடுவார்கள் நம் சந்ததிகள்.

18 comments on “அம்மாவும் கூட கொடுரமானவள் – மருத்துவர் ஷாலினி

 1. மதுரைசரவணன் சொல்கிறார்:

  மதுரையில் நேரடியாக அவர் கலந்துரையாடல் கேட்டேன்.. நல்ல விசயங்களை அசத்தலாய் சொல்லும் வல்லமைப்படைத்தவர்… பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

 2. பெயர்வெளியிட விரும்பாத வாசகி சொல்கிறார்:

  என்னுடைய அண்ணன் தினமும் என்னிடம் தவறாக நடந்துகொள்கிறான். நான் தடுத்தப்பார்த்தேன் முடியவில்லை. காமக்கதைகளில் நடப்பதை படித்து உலகில் இதெல்லாம் சகஜம் என்கிறான். இப்போது நானும் செக்ஸில் அடிமையாகிவிட்டேன். இது தவறா. என் வாழ்க்கை பாதிக்குமா.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இத்தோடு நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுவதுதான் நல்லது. தொடர்ந்தால் இன்றல்லது என்றாவது மாட்டிக்கொள்வீர்கள். அண்ணன் தங்கை உறவுகளெல்லாம் கதைகளுக்கு நன்றாக இருக்கலாம், நடைமுறைக்கு பல சிக்கல்களை தந்துவிடும். உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

 3. தீபா சொல்கிறார்:

  ஷாலினியின் பல புத்தகங்ளைப் படித்திருக்கிறேன். இப்போதுதான் வலைப்பூ எழுதுவதை அறிகிறேன். நன்றி

 4. Chandru சொல்கிறார்:

  Hi jaga, write something about the public sex. it may help many people.

 5. adhithakarikalan சொல்கிறார்:

  அம்மாவிடம் காட்டும் அன்பு கண்மூடித் தனமானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர் பாலியல் எப்போதும் ஈர்ப்பு உடையது, அப்பாவுக்கு பெண் குழந்தை பிடிக்கும், அம்மாவிற்கு ஆண் குழந்தை பிடிக்கும், இது இயற்கை. எந்த தாயும் தன் குழந்தையை தன்னிடம் அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்று என்ன மாட்டாள் என்பது என் கருத்து. இன்றைய கால கட்டத்தில் ஏறக்குறைய 50 க்கும் மேற்பட்ட விழுக்காடு குடும்பங்கள் தனிக் குடித்தினங்கள் இதுல எங்க அம்மாவின் ஆளுமை வரப் போகிறது. ஒரு சில இடங்களில் இருப்பது ஒத்துக் கொள்ளவேண்டிய உ நமை தான் ஆனால் அது புறக்கணிக்கத் தக்க அளவிற்கு சிறிய விழுக்காடு தான். அப்படியே இருந்தாலும் அதை சரி செய்து வாழ்வது தான் குடும்பத் தலைவனின் பொறுப்பு. பொறுப்பை நாம் தட்டி கழித்து அம்மாவை குறை சொல்வது ஏற்புடையதாக இல்லை.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எதிலும் விதிவிலக்கு இருக்கிறதல்லவா, அது அம்மாவையும் விட்டுவைக்கவில்லை என்பதே என் நிலைபாடு. சில இடங்களில் மனைவியுடன் கூடி அடுத்த தலைமுறையை நல்லமுறையில் வளர்க்க தாய் விடுவதில்லை என ஷாலினி சொல்லியிருக்கிறார். அதைதான் தெரியப்படுத்தினேன். நம்முடைய அம்மாவும் இந்த அஸ்திரங்களை பயன்படுத்துவார் என்று ஒரு எச்சரிக்கைக்காத்தான்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 6. படைப்பாளி சொல்கிறார்:

  ஆமாம் நண்பரே ஆண்கள் ஒன்றும் அம்மாவுக்கு அடிமை இல்லை பொண்டாட்டி அடிமையாகி விடுகிறார்கள்..பெண்ணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது..

 7. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

  அட்டகாசமான படைப்புகள். வியக்கவைக்கும் எழுத்து ஆளுமை

 8. கஸ்தூரி சொல்கிறார்:

  அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு இங்கே எத்தனையோபேர் மனைவி்க்கு துரோகம் செய்கின்றார்கள். அதையெல்லாம் எழுத வேண்டுமென்றால் ஒரு வலைப்பூவே பத்தாது. ஷாலினியின் வாதம் மிகச்சரியானது. அதனை இங்கு வெளியிட்டமைக்கு நன்றி.

 9. Ganesh.K.T.P சொல்கிறார்:

  ஜட்டியை துவைக்க தெரியாத பல ஆண்கள் இருக்கின்றார்கள். அவர்களின் இந்த நிலைக்கு அம்மாக்களின் அளவிற்கு அதிகமான அன்புதான் காரணம். சுயநலம் இல்லாத அன்பு எங்கும் இல்லை. ஆனால் அம்மாவின் அன்பில் சுயநலம் மிகக் குறைவு. சில குழந்தைகளை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விடுகின்றார்கள். அது அன்பால் நிகழ்வது. உண்மையை உணர்த்தியமை நன்று,.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s