மூன்று மொழி மூன்று படங்கள்

இன்று பாஸ் (எ) பாஸ்கரன் படம் பார்த்தேன். நகைச்சுவையை மையமாக கொண்ட படம் என்பதால் மூன்று மணிநேரம் சென்றதே தெரியவில்லை. ஆனால் படம் முடிந்ததும் மனதில் எந்த சலனமும் இல்லை. ஒரு படத்தினை பார்த்திருக்கிறேன் என்பதே கற்பனை போல இருந்தது. மனதில் நிற்காத படங்களைப் பற்றி பேசுவதி்ல் பலனில்லை. மொழி அறியாவிட்டாலும் மனதில் இன்றுவரை நிலைத்திருக்கும் படங்கள் ஏகம். அதில் மூன்று படங்களைப் பற்றிய பகிர்வுதான் இந்த இடுகை.

லகே ரஹோ முன்னா பாய் (Lage Raho Munna Bhai) –

முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்ள முனைந்திருந்தாலும் எடுத்துக் கொண்ட களம் ஆச்சிரியமானது. சிறுவயதுமுதல் எனக்கு காந்தியம் மீது தனி மரியாதை இருக்கிறது. பிறருடைய மனதை புண்படுத்தாமல், தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து கொண்டு வாழும் வாழ்க்கை காந்தியத்தின் ஒரு கூறு. உண்மையை மட்டும் வாழ்க்கையாக கொண்டிருத்தல், மது, மாமிசம் என தீயவைகளை ஒதுக்குதல் என்று அதன் கூறுகள் மிகஅதிகம். படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட கூறு “அமைதியான சத்தியாகிரக முறையில் போராடி எதையும் சாதிக்கலாம்” என்பதே.

அதனை காதலை அஸ்திவாரமாக கொண்டு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். காந்தியத்தின் கோட்பாடுகள் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்தப் படங்களின் கதாநாயகன் உண்மைப் பேசி உதை வாங்குவான். சத்தியத்தால் செத்துபோவான். அவன் குடும்பம் அழிந்துபோகும். இதுபோலதான் நிறைய படங்கள். ஆனால் இதில் கதாநாயகன் கடைசிவரை காந்திய வழியில் சென்று சாதனை செய்வான். பேருந்தில் காலை மிதிப்பவர்களை, கடமையை மறந்து திரியும் அரசு ஊழியர்களை, அரசியல்வாதிகளை மன்னித்தோ, சகித்துக்கொண்டோ நிஜ வாழ்க்கையில் நிறைய இடங்களில் நாமும் காந்திய வழியில் சென்றுகொண்டிருக்கிறோம். முழுமையாக செல்ல கொஞ்சம் முனைப்பு போதும் என நினைக்கிறன்.

ஸ்டாலின் (stalin) –

சாதாரண குடும்ப சண்டை விசயத்தையே ரயில், ஹெலிகாப்படர் என பிரம்மாண்டமாக படம் எடுப்பவர்கள் தெலுங்குகாரர்கள். அவர்களிடம் இது போல ஒரு படத்தை நான் எதிர்ப்பார்கவில்லை. “ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் மூன்று பேருக்காவது உதவ வேண்டும். அப்படி செய்தால் மூன்று, ஒன்பது, இருபத்தியேழு என அந்த பழக்கம் பல்கிப்பெருகும்” என்பது இயக்குனர் சொல்ல வந்த கருத்து. படம் முடியும் போது நாம் இதுவரை முகம் தெரியாத யாருக்காவது உதவி செய்திருக்கிறோமா என எண்ணிப்பார்த்தேன். சொல்லிக்கொள்ளும் படி பெரிய உதவி இதுவரை செய்யவில்லை.

சரி, படத்தில் கண்களை குளமாக்கும் ஒரு சம்பவம் உண்டு. இரண்டு கைகளையும் விபத்தில் இழந்த பெண், நம்பிக்கை தளராமல் படிக்கிறாள், தேர்வு எழுதுகிறாள். அவர் தேர்வில் சொல்ல சொல்ல நாயகன் எழுதுகிறான். ஒரே சமயத்தில் அவளைப்போன்ற மற்றொரு பெண்ணுக்கு நாயகன் உதவச் சென்றுவிடுகிற போது. இந்தப் பெண்ணுக்கு உதவ ஆட்களில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறாள். தன்னுடைய கைகளை இழந்தபோதும் நம்பிக்கை இழக்காதவள், நம்பிக்கை இழந்த போது மரணத்தை ஏற்கிறாள். அதன் பின்தான் உதவிசெய்வதன் முக்கியத்தை மக்கள் உணர இந்த வழியை தேர்ந்தெடுக்கிறான் நாயகன். மசாலாவிற்காக சேர்த்த சில விசயங்களை மன்னித்தால் திகட்டாத ஒருபடம் ஸ்டாலின்.

இவ்விடம் சொர்கமானது (Ividam swargamanu) –

இயல்பான படங்களின் களஞ்சியம் மலையாள பூமி. அவர்களின் பெரும்பாலான படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையின் அழகு மிளிரும். அதே சமயம் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என இயல்பு மீறாமல் நடிப்பது மற்ற மொழித் திரைப்படங்களில் காண முடியாத ஒன்று. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த படங்களில், குடும்ப வாழ்க்கையின் இன்னல்களை சொல்லுகின்ற படங்கள் அதிகம். சில படங்கள் அதையும் தாண்டி நாட்டினைப் பற்றிய சிந்தனைகளை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட படம்தான் மோகன்லாலின் இவ்விடம் சொர்கமானது.

இன்றைய இந்தியாவின் முக்கியமான பிரட்சனை நகரமயமாதல். நெல்லும் கரும்பும் விளைந்திருக்கின்ற வயல்வெளியெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடங்களாக முளைக்கின்றன. நேற்று பார்த்த கிராமம் இன்று அழிந்து போய் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. நகரமயமாதல் சாதாரணப் பிரட்சனையல்ல, அதனால் காலம்காலமாக பேனிவந்த நிலங்களை இழக்கும் விவசாயின் வேதனைகளையும் , அதன் பின் நிற்கும் அரசியலையும் பிரதிபளிக்கின்ற படம். இயல்பு மீறாமல் படத்தினை இறுதிவரை கொண்டு செல்லும் இயக்குனர் ஆன்டிரியாஸை பாராட்டாமல் இருக்கமுடியாது.

நீங்கள் ஏற்கனவே இந்தப்படங்களைப் பார்த்திருந்தால், உங்களின் எண்ணத்தினை கூறுங்கள். இல்லையென்றால் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

14 comments on “மூன்று மொழி மூன்று படங்கள்

 1. மதுரைசரவணன் சொல்கிறார்:

  அருமையான படங்கள் . பார்த்துவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

 2. கொடுக்கு சொல்கிறார்:

  தலைவா கலக்குரே. இனி உன் தளத்திற்கு தினசரி வருவேன்

 3. Dinesh சொல்கிறார்:

  இவ்விடம் சொற்கமே திரைப்படத்தின் மலையாள பெயர் என்ன என்று சொன்னால் தரவிறக்கம் செய்து பார்க்க வசதியாக இருக்கும்…

 4. adhithakarikalan சொல்கிறார்:

  முன்னாபாய் மட்டுமே நான் இதில் பார்த்தது, நல்ல திரைக்கதை, அருமையான நடிப்பு, எத்தனை தடவை பார்த்தாலும் அதே அளவுக்கு சிரிப்பு வரும். எனக்கு சர்க்யூட் கதாப்பாத்திரம் ரொம்ப பிடிக்கும். வித்யாபாலன் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். ஸ்டாலினை பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன், நம்ம முருகதாஸ் இயக்கிய படம், ஆனால் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை, இவ்விடம் சொர்கமானு படத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

 5. படைப்பாளி சொல்கிறார்:

  தெளிவான விளக்கம்..படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்..

 6. Ganesh.K.T.P சொல்கிறார்:

  Ividam swargamanu is nice flim. thanks for sharing.

 7. sathya சொல்கிறார்:

  i don’t know other languages

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s