வி(ழா)நாயகன்

இன்றைய விழாவின் நாயகன் விநாயகன். விதவிதமான வடிவங்களில் மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்பவன். இந்து மதத்தின் கடைக்குட்டியாய் வந்தாலும், எல்லோர் இதயங்களிலும் நீக்கமற நிறைந்தவன்.

வரலாற்றின் படி முதலாம் நரசிம்மவர்மன் என்ற மன்னனின் தளபதி பரஞ்சோதியார் ஒரு சிவபக்தர். அவர் இரண்டாம் புலிகேசியை வென்று அவனுடைய தலை நகராகிய வாதாபியிலிருந்து யானைமுகமும் மனிதஉடலும் கொண்ட சிலையை எடுத்து வந்தார். அந்த சிலையை செல்வத்தின் அங்கிகாரமாக அவர்கள் வைத்திருந்ததாக தெரிகிறது. அதை பிற்பாடு இந்துக்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள். சிவனுடைய மைந்தனாக கதைகள் புனையப்பட்டன. சில கதைகள் விநாயகனே சிவன் என்றும் சொல்லுகின்றன.

சங்ககால இலக்கியங்களில் விநாயக வழிபாடு இல்லை. இடைக்காலத்தில் இடைச்சொருகலாக வந்த விநாயகன் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் என தெரியவில்லை. இன்று சின்னஞ்சிறு கிராமங்களிலும் விநாயகர் கோவில்கள் இருக்கின்றன. சைவ கடவுள் சிவனின் மைந்தன் என்று சொல்லிக்கொண்டாலும். விநாயகன் இல்லாத வைணவக் கோவில்களும் இல்லை. ஒரு பெருமாள் கோவிலில் விநாயகரை தும்பிக்கையாழ்வார் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்தப் பெயர் அழகாக இருந்தது. நான் பார்த்த பல கிராமதேவதைகள் கோவிலிலும் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

ஆனால் சில கோவில்களில் விநாயகர் இருப்பதை காரணம் காட்டி பலிகொடுப்பதை பிராமணர்கள் எதிர்ப்பதால் விநாயகரை தூக்கி எறிந்துவி்ட்டார்கள். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலில் கூட விநாயகர் இருந்த பீடம் காலியாகவே இருக்கிறது. காலம்காலமாக நடந்து வரும் பலிகளை ஒதுக்க அவர்களுக்கு மனமில்லை. அதற்கு பதிலாக பிரட்சனைக்கு காரணமாக விநாயகரை அகற்றி விடுகின்றார்கள். பலி கொடுப்பதை தீவிரமாக பிராமணர்கள் எதிர்க்க காரணம். அவர்கள் கோவில்களில் அதிகாரம் செலுத்துவதற்காகதான் என்று சொல்லுகிறார்கள் பூசாரிகள். எனவே தஙகள் பிழைப்பை காத்துக் கொள்ளவும் அவர்கள் பலியை ஆதரிக்கின்றனர். இவர்களுக்கிடையேயான பிரட்சனையில் விநாயகர் மாட்டிக் கொண்டுவிட்டார்.

விநாயகரின் பலமே எளிமைதான். மஞ்சலோ சாணியோ பிடித்துவைத்தால் பிள்ளையார் தயார் என்பதால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். முதவன் என்று கிராமக் கதை பாடல்களிலும் விநாயகர் துதி முதலில் இடம் பெறுகிறது. விநாயகரின் அடுத்த பெருமை பிரணவ மந்திரத்தின் உருவமாக கருதப்படுவதுதான். ஓம் என்ற வடிவத்தில் இருப்பதாக வியந்து போற்றுகின்றார்கள் மனிதர்கள்.

நான் ரசித்த விநாயகனின் வடிவங்கள்.

6 comments on “வி(ழா)நாயகன்

  1. adhithakarikalan சொல்கிறார்:

    விநாயகரின் ரிஷி மூலம், நதி மூலம் எல்லாம் சொல்லீடீங்க, நல்லத் தகவல்கள், பாம்புகளை வைத்து வடிவமைத்திருக்கும் விநாயகர் அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s