நானும் என் கிரமமும் – தொடர் பதிவு

இது ஓர் தொடர் பதிவு..
நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு..

படைப்பாளி தொடங்கி வைத்த அருமையான தொடர். களர்நிலத்திற்கு சொந்தக்கார நண்பர் ஆதித்தகரிகாலன் அவர்களின் மூலம் எனக்கு வந்திருக்கிறது அழைப்பு. மழலையை நினைவு கூற கசக்குமா என்ன. இதோ நானும் என் கிரமமும்.

செக்குமாடு ஓட்டியதிலிருந்து, கூட்டாஞ்சோறு வைத்தது வரை விளையாட்டும் வாழ்வும் சொல்லிக் கொடுத்த கிராமம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. விடுமுறை நாட்களில் அந்த கிராமம் எனக்கு கற்று தந்ததும் பெற்று தந்ததும் நிறைய இருக்கிறது. பேருந்திலிருந்து இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றுதான் ஊரை அடைய முடியும். தனியாக செல்லும் நாட்களில் பெரியவர்களுக்கே பயம் தரும் கும்மிருட்டில் நடந்து செல்வோம்.

என்னுடைய பயத்தினை எப்படியோ அறிந்து கொண்ட முனி. திருவிழாவில் சாமியாடி மூலம் “நீங்க பஸ்ஸிலிருந்து இறங்கி வரும் போதெல்லாம் நானும் கூடவே வீடுவரைக்கும் வாரேண்டா. எதுக்குடா நானிருக்கும் போது பயப்படறீங்க” என்றது. எனக்கு வியப்பாக இருந்தது. இருந்தும் இது எதற்ச்சையாக நடந்த ஒன்றாகவே நினைத்திருந்தேன். ஆனால் தான் இருப்பதை மற்றொரு முறை எனக்கு நிறுபித்தது முனி.

கிராமங்களில் நண்டு சிண்டுகள் விளையாடுவதை உற்று கவணித்திருக்கின்றீர்களா. கவணித்திருந்தால் அந்த கூட்டத்தி்ல் ஒரு பெண் தலைவியாக இருப்பதை தெரிந்து வைத்திருப்பீர்கள். அப்படி எங்கள் கூட்டத்தின் தலைவியாக இருந்தாள் பூங்கொடி அக்கா. நெடுநெடுவென வளர்ந்து, பூப்போட்ட பாவாடையும், ஆண்களைப் போல சட்டையும் அணிந்திருப்பாள். எங்களுக்குள் நடக்கும் சண்டைகளை தீர்ப்பதே அவளுடைய பெரும் வேளை.

ஒரு நாள் அவளுடைய தலைமையில் கூட்டாஞ்சோறு சமைக்க திட்டமிட்டோம். சோறு செய்ய பாத்திரம், அரிசி, காய்கறி, உப்பு, புளி என வீட்டிற்கு தெரியாமல் ஆளுக்கு ஆள் தங்கள் முடிந்ததை எடுத்துக் கொண்டு தொட்டியச்சி கோவிலுக்கு சென்றோம். அங்கு திருவிழா நாட்களில் பொங்கல் வைக்க வைத்திருந்த கற்களை புரட்டி அடுப்பு செய்தோம். சோறு செய்வதை பூங்கொடியே பார்த்துக் கொண்டாள். நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தோம், சோறு தயார் ஆனதும், சாப்பிடுவதற்கு தயரானோம்.

தேக்கு இலைகளை பரித்து சூடான சோறை பரிமாரி, சாம்பார் என்ற பெயரில் தண்ணீர் ஊற்றி எப்படியோ சாப்பிட்டுவிட்டோம். வீட்டிற்கு தெரியாமல் பொருட்கள் எடுத்துவந்து, யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது. அன்றுதான் மீண்டும் முனியை சந்தித்தோம். மதிய வேளையில் அங்கு சுழல் காற்று வரும். அதை முனியென்று அவர்கள் நம்புகிறார்கள். அதை என்னிடம் சொன்ன போது, எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

மிகச் சத்தமாக “நீ முனிங்கறது உண்மையின்னா, இங்க வா” என்று நான் கத்த, காற்றுக்கு காது கேட்டது போல சட்டென அது எங்கள் பக்கம் திரும்ப. அன்று நாங்கள் கதறிய கதறலை பார்த்திருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பீர்கள். இப்போது நினைத்தால் எனக்கும் அப்படிதான் இருக்கிறது. ஆனால் அன்று பயத்தின் உச்சியை நான் உணர்ந்திருந்தேன். கண்களை மூடி எல்லோரும் சாமியை கும்பிடுங்க என்று பூங்கொடி அக்கா சொல்ல, அப்படியே செய்தோம். எங்களின் மிக அருகில் வந்து, சருகுகளையும், தேங்காய் மட்டைகளையும் தூக்கி எரி்ந்துவிட்டு சென்றது. நடந்த விசயங்களை மனதிற்குள் பூட்டிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல அவரவர் வீட்டிற்கு சென்றோம்.

கள்ளியில் பெயர் எழுதுவது, பொன்வண்டு பிடிப்பது, குண்டுமணி பொறுக்குவது, பனையோலையில் காத்தாடி செய்வது என விளையாடியிருந்தாலும், இன்னும் என்னால் மறக்க முடியாமல் இருப்பது அந்த நாள்தான்.

அழைப்பு –

சிறுவயது ஞாபகங்களை அசை போடும் பதிவை அடுத்து நகைச்சுவை மன்னன் நண்பர் ஜவகர் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறுவயது ஞாபகங்கள் –
1.படைப்பாளி – கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்.
2.களர்நிலம் – என் நினைவுகளின் நிர்வாணம்.
3.சகோதரன் – நானும் என் கிராமமும்

17 comments on “நானும் என் கிரமமும் – தொடர் பதிவு

 1. பத்மநாபன் சொல்கிறார்:

  அருமையான பகிர்வு…. கிட்ட தட்ட பொன்வண்டு, பனயோலை காத்தாடி , நானும் கடந்தேன்….அந்த சுகம் எதனால் என்று யோசித்து பார்க்கிறேன். அன்று உலகம் நம்மை வாழ விட்டது, தேட ச்சொன்னது . இன்று பல்வேறு ஊடகங்கள் இத்தலை முறையினரின் மேல் நெடுஞ்சாண்கிடையாக அழுத்தி விழுந்த்துள்ளது , அவர்களும் அவ்வலியே சுகமாக எழாமல் எதுவும் பெறாமல் வாழுகின்றனர்…

  நன்றி

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உண்மைதான் நண்பரே!, என் அப்பாவுக்கு தென்னை குரும்பைகளைக் கொண்டு தேர்களை செய்ய தெரியும். ஆனால் எனக்கு தெரியாது. நான் அனுபவித்ததை என்னுடைய அடுத்த தலைமுறைக்கு என்னால் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்களும் நான் அடைந்த சுகம் அனுபவிக்க பழமையான கிராமத்தையும் தேடவேண்டியிருக்கும்.

   நன்றி நண்பரே!

 2. Suga சொல்கிறார்:

  Please hilight your image in the above picture

 3. படைப்பாளி சொல்கிறார்:

  முனிக்கு பயந்த நினைவு…பேயாடியவரின் முடி அடித்திருக்கும் புளியமரத்தில் பேய் இருப்பதாக பயந்த அனுபவம்..எமக்கும் நிகந்திருக்கிறது நண்பரே…
  அழகான பதிவு…அருமையான நடை…நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை உங்கள் எழுத்திலும் வாழ்ந்திருக்கிறீர்கள்…உங்களோடு சேர்ந்து நானும் பூங்கொடி அக்காவோடு விளையாடிய அனுபவத்தை தந்தீர்கள்..நன்றி..தொடரை விடாமல் தொடர்ந்து வைப்பதற்கும்..மீண்டும் ஒரு நன்றி

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பூங்கொடி அக்காவின் நினைவுகளை இத்தனை நாள் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்பதிவை அறிமுகம் செய்து நினைவுகளை கிளறி மீட்டுக் கொடுத்தது நீங்களும் ஆதித்யகரிகாலனும் தான். நன்றி!

 4. adhithakarikalan சொல்கிறார்:

  தொடர்பதிவினை தொடர்ந்ததற்கு நன்றி, கூட்டாஞ்சோறு பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன், எனக்கு அந்த அனுபவம் இல்லை, உங்களின் எழுத்து மூலம் மீண்டும் கூட்டாஞ்சோறுக்காக என்னை ஏங்க வைத்துவிட்டீர்கள்…

 5. padmahari சொல்கிறார்:

  //கள்ளியில் பெயர் எழுதுவது, பொன்வண்டு பிடிப்பது, குண்டுமணி பொறுக்குவது, பனையோலையில் காத்தாடி செய்வது//

  ஏங்க இப்படி பழசையெல்லாம் நியாபகப்படுத்தி திரும்ப ஒரு முறை அப்படி விளையாட முடியாதாங்கிற மாதிரி ஒரு ஏக்கத்தை கெளப்பி விடுறீங்க! கூட்டாஞ்சோரு ஆக்குறதுல இருக்குற சந்தோஷம் ஃபவ் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டா கூட வராதுங்க!

  அருமையான இடுகை, நினைவுகளை நிழற்படங்களாக்கும் எழுத்து நடை! கலக்கிட்டீங்க ஜெகதீஸ்வரன். வாழ்த்துக்கள்!
  பத்மஹரி,
  htto://padmahari.wordpress.com

 6. chintu சொல்கிறார்:

  good

 7. subhu சொல்கிறார்:

  nice

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s