முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம். ஆனால் இந்த முறை கடவுள்களைத் தேடி பயணப்படவில்லை. நம் முன்னோர்களைத் தேடி பயணப் பட்டோம்.

துறையூயில் இருக்கும் மாசி பெரியசாமியை தரிசனம் செய்வது மட்டுமே என் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று. மற்றவைகளை என்னிடமே விட்டுவிட்டார்கள். பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கோவில்

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

சாமியை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது “தம்பி மனுசனுங்கக் கூட விளையாடலாம், தெய்வத்தோட விளையாடாதே” என்று பயமுறுத்தினார் பூசாரி. “ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய். ” என்று வேண்டிக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். பூசாரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “நீ, சொன்னா கேட்கமாட்டியா தம்பி!” என்று அதட்ட, “ங், சாமிக்கிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கறேன். நீங்க செத்த சும்மாயிருங்க” என்று நான் வாதம் செய்ய வேண்டியதாயிற்று.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

எட்டுகை அம்மன் கோவில்

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.

ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சாதிகளைக் கொண்டு கடவுளையே இப்படி பந்தாடுகின்றவர்கள் இருக்கும் அதே வேளையில் சாதிகளை இணைக்கும் தொட்டியச்சி, முத்தலாம்மன் பற்றி வரும் இடுகையில்,…

பயணம் தொடரும்,..

12 comments on “முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

 1. படைப்பாளி சொல்கிறார்:

  உங்கள் பயணமும்,பகிர்வும் அருமை..தொடர்க..

 2. adhithakarikalan சொல்கிறார்:

  பயணக் கட்டுரை அருமை.

 3. sugajini சொல்கிறார்:

  Please do not mention cast names in your posts

 4. நித்யா சொல்கிறார்:

  சாதிகளின் கொடூரம் கடவுளையும் வி்ட்டு வைக்கவில்லை என்பது உண்மை. எங்கள் சாதியின் பெயரைச் சொல்லி நடக்கும் கொடுமையில் இதுவும் ஒன்று.

  பயணத்தொடர் அருமை!

 5. பின்னோக்கி சொல்கிறார்:

  அருமை. குலதெய்வக்கோயிலுக்குச் சென்று வந்ததை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அந்த அமைதியான இடம் உங்களுக்குப் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s