டப்பலோ – கோபுரங்களை காக்கும் மருந்துக்கலவை

ஆளுயரச் சிலைகளில் கடவுளின் திருவிளையாடல்கள், பண்டையத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, களவி முறைகள் என அளவற்ற பொக்கிசங்களாக திகழ்கின்றது கோவில் கோபுரங்கள். “கோபுரங்களைப் பார்த்தால் கோடி புண்ணியம்” என்பார்கள் பெரியவர்கள்.

அதெப்படி என என் தந்தையுடம் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் “கோபுரங்கள் வெறும் சிலைகளால் நிரப்பபட்டதல்ல. அத்தனையும் கலை. அதிலிருக்கும் ஒவ்வொரு சிலையின் பின்னும் ஒரு அற்புதமானக் கதை இருக்கிறது. அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் தர்மத்தினை உணர்ந்து கொண்டால், நாம் நல்ல வழியிலேயே நடப்போம். நல்ல வழி புண்ணியத்தினை தேடித் தரும்” என்று விளக்கமளித்தார்.

இத்தகைய சிறப்பு மிக்க கோவில் கோபுரங்கள் பராமரிப்பில்லாமல், மண்ணோடு மண்ணாக போய்க் கொண்டிருப்பதை தடுக்க, மருந்தை கண்டுபிடித்திருக்கின்றார் ஒருவர். அவருடைய பெயர் முருகானந்தம். கி.ஆ.பே.விஷ்வநாதம் பிள்ளையின் பரம்பரையில் வந்த இவர். பெல் கம்பேனியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக 14 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

இவர் ஒரு முறை பணிமாறுதலாக பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டார். அங்கு இருந்த பார்த்தீனியம் செடியால் சக தொழிலாளர்களின் கை, கால்களில் அரிப்பு, வீக்கம் என தொந்தரவு ஏற்பட்டது. புல்டோசர் கொண்டுவந்து அகற்றிட்டாலும், மழை பெய்தால் மீண்டும் வளர்ந்து தொல்லை தரும். எனவே அதை அழிக்கவேண்டிய கட்டாயம் மனதிற்குள் தோன்ற. தன்னுடைய பணியை 1987-ல் விட்டுவிட்டு நீண்ட அராய்ச்சிகளுக்குப் பின் பார்த்தீனிய செடிகளை அழிக்க மருந்து கண்டுபிடித்துவி்ட்டார். அதற்கு அவர் வைத்த பெயர் “கில்லர் 700”.

இந்த கில்லர் கொடுத்த ஊக்கத்தில் அவர் கண்டுபிடித்த மற்றொன்றுதான் இன்னும் மகத்தானது. அது அரிய 21 மூலிகைகளைக் கொண்டு செய்யப்படுகிற “டப்பலோ”. இந்த மருந்து கோவில்களில் இருக்கும் செடிகளை அகற்றுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது. கோவில்களில் கலைகள் இருப்பது போல உயிர்களும் இருக்கும். அதாவது புறா, கருடன் போன்ற பறவைகள், தேனிகள், குரங்கள் என ஏகப்பட்ட உயிர்கள். இந்த மருந்தினால் மற்ற விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செய்திருக்கிறார்.

களையெடு்ககும் பணியில் முருகானந்தத்தோடு 25 பேர் ஈடுபடுகின்றனர். பலமாடி கட்டிடங்களைப்போல உயரமான கோபுரங்களில் இந்தப் பணியை செய்வது சாதாரண காரியமில்லை. தேனிகள், பாம்புகள், குரங்குகள் என விச உயிர்களை சமாளித்துக்கொண்டு, டப்பலோ மருந்தினை சிமெட்டுடன் கலந்து பூசுகின்றனர். இதன் பின் அங்கு செடி முளைக்க வாய்ப்பில்லை.

“வருடத்திற்கு ஒரு முறையெனும் கோபுரங்களில் செடிகளை அகற்றி, பராமறிப்பது அவசியம்” என்று வலியுறுத்துகிறார். கோடி கோடியாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் கோவில்களை காப்பாற்றுவார்களா என்று பொறுத்துருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி –
குங்குமம்.

2 comments on “டப்பலோ – கோபுரங்களை காக்கும் மருந்துக்கலவை

  1. படைப்பாளி சொல்கிறார்:

    கலை காக்கப்பட வேண்டும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s