தெய்வங்களுக்கு முன்னால் நடக்கும் காம களியாட்டங்கள்


கிராமங்களில் நடக்கின்ற கூத்து என்ற கலைகள் இன்று திசை மாறி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெக்காட் டான்ஸ் என்ற பெயரில் ஆபாச நடனவிடுதிகளில் நடந்து கொண்டிருப்பதை கோவிலுக்கு முன்னால் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் நமது பாமர மக்கள். அதுவும் விதவிதமாக மக்களின் காம உணர்ச்சிகளுக்குள் வக்கிரமான எண்ணங்கள் ஊடுருவும் விதத்தில் அந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதைப் பற்றிய வேதனையான இடுகை இது.

நான் நாத்திகர்களை வெறுப்பதே இல்லை. சில சமயங்களில் ஆன்மீகவாதிகள் காப்பாற்ற தவறிய ஆலையங்களையும், சுட்டிக்காட்ட பயந்துபோகும் குற்றங்களையும் எல்லோருக்கும் சொல்லி, நல் வழிப்படுத்த அவர்களே உறுதுணையாக இருக்கின்றார்கள். என்னுடைய பள்ளிகால நண்பன் தீவிர நாத்திகன். கடவுளை மனிதன் கண்டுபிடித்ததே குற்றம் சாட்டிதப்பித்துக்கொள்ளதான் என்று அடிக்கடி சொல்லுவான். இன்று “மச்சி, கிராமக் கடவுளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நீ பாடுபட்டுக்கிட்டு கிடக்குற, ஆனா நம்ம மக்கள் அந்த கடவுள் முன்னாடி செய்யுற அசிங்கத்தப் பாரு”ன்னு சில லிங்குகள் அனுப்பியிருந்தான்.

அவை கோவில்களுக்காக மக்களிடம் வாங்கிய பணத்தில் நடத்தப்படும் ஆபாச விழாக்களின் காணொளிகள். பல இடங்களில் கோவில்கள் கட்டுவதற்கும், திருவிழா நடத்தவும் பொது மக்களிடம் கட்டாய வசுல் வேட்டை நடக்கிறது. மாரியம்மன் கோவில் புணரமைப்புக்காக வீட்டிற்கு 1000 ரூபாய் என என்கிராமத்திலேயே வசூல் நடந்திருக்கிறது. அந்தக் கோவில் கும்பாபிசேகம் முடிந்த கையோடு, அடுத்த கோவில் எங்கிருக்கிறது என பார்த்து அடுத்த வேட்டைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். கைக்கு வரும் மித மிஞ்சிய பணத்தில் கோவில் கட்டியபிறகும் பணம் இருக்கிறது. அதை மக்களை மகிழ்விக்க என்று சொல்லி, இது போன்ற ஆபாச நடனங்களுக்கு ஏற்பாடு செய்கின்றார்கள். எங்களூரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில்தான், இந்த அசிங்கத்தை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது விடலைப் பருவம்.

திருவிழா முடிந்து ஒரு மாதம் ஆனாலும் என்னுடன் படித்துக்கொண்டிருந்த மாணவர்களால் கூத்து பாடலை மறக்கமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் விழாவில் இளைஞர்கள் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, விடலைகள் போல் அதிகம் விழுந்து விழுந்து ரசித்தது பல்போன கிழங்கள். சில பெருசுகள் மேடையேறி செல்லக்கூட முனைந்தார்கள். ஆடல் குழுவினர் தடுத்துவிட்டனர். பெரிய கோவில்களின் திருவிழாக்களிலும், மிகத் தொன்மையான கிராமக் கோவில்களிலும் இது போன்ற கொடுமைகள் நடப்பதில்லை என்பது கொஞ்சம் நிம்மதியான விசயம்.

ஆனால் கிராமமும் அல்லாமல், நகரமும் அல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஊர்களில் காவல் துறையினரின் துணையோடு இந்த கதை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் என எல்லா தொன்மையான கலைகளையும், கலைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, ஆடை அவிழ்ப்பு நடனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் ஊர் தலைவர்கள். இதனை ஆபாசமென தட்டிக்கேட்க மகளிர் அமைப்புகள் இல்லை. நடன அரங்கேற்றத்தில் கலந்து கொண்டாளாவது பணம் கிடைக்கும் என விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. நடன விடுதிகளில் ஆபாச நடமாடுகின்றவர்களை அடித்து உதைத்த மனிதர்களில் சிலர், இங்கிருந்தால் கூட நல்லது நடக்கும் என்றே தோன்றுகிறது.

கோவில் பிராகாரங்களில், தூண்களில், கோபுரங்களில் சில உடலுறவுச் சிற்பங்கள் சிறிய அளவு இருக்கும். தேடுவோர் கண்களுக்கு மட்டும் தெரியும் அதையே ஆபாசமென சொல்லித்திரியும் யாரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற கூத்துகளால் உண்மையான கலைஞர்களும் நசிந்து போகின்றார்கள். கரகாட்டம் கூட ஆபாசங்களுக்கு இடம் கொடுக்க தொடங்கிவி்ட்டதை ஒரு காணொளி உணர்த்துகிறது.

தெருக்கூத்து ஒன்றில் இடம் பெற்ற அரிச்சந்திரன் கதையை பார்த்ததால் நமக்கொரு மகாத்மா காந்தி கிடைத்தார். இது போன்ற அவலங்களை பார்க்கும் மனிதர்கள் மகாத்மாக்களாக அல்ல மனிதர்களாகவே இருக்க மாட்டார்கள். செய்ய வேண்டியதெல்லாம் ஆபாசத்தினை அதுவும் கடவுளின் பெயரைக் கூறி நடப்பதை தடுத்து நிறுத்த விழிப்புணர்வு நமக்குள் எழுவதுதான். சமூகம் முழுவதும் புரையோடிக்கிடக்கும் இந்த வழக்கத்தை கடுமையான கைகொண்டுதான் அகற்ற வேண்டும்.

17 comments on “தெய்வங்களுக்கு முன்னால் நடக்கும் காம களியாட்டங்கள்

  1. சேவியர் சொல்கிறார்:

    Sagotharan, Please mail me xavier.dasaian@ g mail.com.. I need to talk to you…. Important….

  2. ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ சொல்கிறார்:

    எங்கிருந்து முளைத்தார்க‌ள் இவ‌ர்க‌ள்? ஏன் இவ‌ர்க‌ளை முளையிலேயே கிள்ளி எறிய‌த்தோன்ற‌வில்லை? என்ற‌ கேள்விக‌ளுக்கெல்லாம் ப‌திலில்லை என்றால் அத‌ற்கு கார‌ண‌ம் த‌லைமுறை க‌ண்ட‌ பெரிய‌வ‌ர்க‌ளும் இதை ஆத‌ரிக்கிறார்க‌ள் என்ப‌துதான் வேத‌னையே.

    எங்க‌ள் ஊரிலும் ந‌ட‌க்க‌த்தான் செய்கிற‌து என்றாலும் 3000 பேரை எதிர்த்து என்ன‌ செய்ய‌முடியும் எங்க‌ள் மூன்றுபேரால்!
    ப‌ல‌வ‌ருட‌ம் க‌ட்டிக்காத்து வ‌ள‌ர்த்துவிட்ட‌ பார‌ம்ப‌ரிய‌மும், க‌லாச்சார‌மும் அழிவ‌து சில‌ம‌ணிநேர‌த்திலா?

    நீங்க‌ள் கூறிய‌துபோல் பாதை ப‌ற்றித்தெரியாம‌ல் ப‌ய‌ண‌ம்தான் மாறுகிற‌து ச‌கோத‌ரா…

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      நன்றி நண்பரே!,

      நம்மால் எதிர்ப்பை மட்டும் தான் தெரிவிக்க இயலும். ஊரில் இருக்கும் பெரும்புள்ளிகளை பகைத்துக் கொள்ள இயலாது. பகைத்துக் கொண்டால் வாழவும் முடியாது.

  3. vasudevan சொல்கிறார்:

    இந்த மாதிரியான நடத்தைகள் சமுதாயத்தில் தெய்வ பக்தி சீர்கேடு அடைந்து விட்டதை குறிக்கிறது . இந்து மதத்தின் கட்டுப்பாடு இல்லாத தன்மை இதற்கு துணைபுரிகிறது . இது இந்துக்களுக்கு ஒரு அவமான சின்னமாகும் .

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      கோவில்களில் மட்டுமல்ல. பொங்கல், தீபாவளி போன்ற தினங்களிலும் கூத்துகள் அதிகம் நடக்கின்றன. கடவுள் முன்னால் பறையும், உடுக்கையும் அடுத்து தமிழில் வழிபட்டவர்கள் நாம். ஆனால் இப்போது அப்படியா நிகழ்கிறது. பேச்சியம்மன், சுடலை போன்ற மண்ணின் சாமிகளை அகற்றிவிட்டு பெருமாளும், அம்மனும் கோவிலில் இருக்கின்றார்கள். சாமிகளுக்கே இந்த நிலை எனும்போது மனிதர்களின் கலாச்சாரம் எங்கு போகும்.

      கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!

  4. விபா சொல்கிறார்:

    நல்ல பதிவு தலைவா!

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் நக்கீரன் இதழில் இது போன்ற செய்தி வந்து அதிர்ந்து போனேன். நக்கீரன் நிருபர்கள் மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்த பின்பு அச்செய்தியை வெளியிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள நக்கீரனே உதவியது. ஆம், அடுத்த வாரம் Dynamic திருமணம் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு என்னை இவ்வதிற்சியிலிருந்து மீட்டனர் என்பது தான் உன்மை.

    Dynamic Kalyanam என்று Youtube-ல் தேடி பாருங்கள், அநேகமாக இந்த காணொளியே உங்களின் அடுத்த பதிவாக அமையும்.

    கமலஹாசனின் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது எனக்கு, அதாவது, “கடவுள் இருக்கார்னு சொல்றவன நம்பலாம், கடவுள் இல்லைனு சொல்றான் பாரு அவன கூட நம்பிடலாம். ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பவே கூடாது” .

    இவங்கள எல்லாரையும் நிர்வாணமா தெருவுல ஓட விட்டு நாயை விட்டு கடிக்கவிடனும்…..

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      நன்றி நண்பா!.

      மிகப்பெரிய கலாச்சார சீரழிவை தமிழகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. தினமலர் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் மலேசியாவாழ் மக்கள் அங்குவாழும் சிறுபான்மையிரான சீனப் பெண்களை மணமுடிக்க விரும்புகிறார்களாம். இந்தியப் பெண்களை வேண்டாம் என்றும் சொல்கிறார்களாம். காரணம் சீனப் பெண்கள் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ள விரும்புவதில்லை என்பதே என்றிருக்கிறார்கள். அப்போது நமது பெண்கள் என்ன செய்கின்றார்கள் என தனியாக சொல்லவேண்டியதேயில்லை.

  5. படைப்பாளி சொல்கிறார்:

    இன்னொரு மேட்டர் இருக்கு நண்பா..ரெகார்ட் டான்ஸ் பேரு..ஆடையை முழுமையாக அவிழ்த்துப் போட்டு ஆடுவார்களாம்..கரகாட்டதுல நாத்தம் புடிச்ச வார்த்தைகளைத்தான் அதிகம் பேசுகிறார்கள்..இந்த கன்றாவி எல்லாமே கோவில் விழாக்களில் தான் அதிகம் அரங்கேற்றம் ஆகிறது..சாதி சண்டையிலிருந்து,சமுதாய சீரழிவு வரை நம்ம ஆளுக சாமில இருந்து தான் ஆரம்பிக்கிறாங்க.நாத்திகம் உண்மையில் நலம்பயக்கும்,

  6. Madasamy சொல்கிறார்:

    Maanada Mayilada and other programmes in Tv Is no different.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!. நேற்று டிவியில் ஒரு நாடகத்தினை கவணித்தேன். நிச்சயமான பெண்ணை ஒருவன் காதலிக்கிறான். அப்போது பெண் மறுக்க, எத்தனையோ கல்யாணங்கள் இப்போது திருமணத்தன்று கூட நின்றுவிடுகின்றன சொல்லி மனதினை கலைக்கின்றான். இது போல பல நல்ல போதனைகளை தந்து கொண்டிருக்கின்றார்கள்.

  7. கொடுக்கு சொல்கிறார்:

    வீட்டிலேயே ஆபாச படம் ஓட்டுராங்க. கோவிலுள்ள செஞ்சா பெரிசில்லை.

  8. ஜெகவீரபாண்டியன் சொல்கிறார்:

    பெண்களை நிர்வாணமாக்க பெருசுகள் செய்யும் பிளான் இது. இளசுகளும் இதனால் தவறான வழிக்குப் போகின்றனர் என்பது உண்மை. ஆபாசம் இல்லாமல் இப்போது கிராம நாடகங்கள் கூட நடப்பதில்லை. சாமியெல்லாம் சிலையாதான் இருக்குதோ!

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி