ரஜினி எந்திரனா? சித்தனா?

சிறந்த பொழுதுபோக்கு நடிகர் – ரஜினி.
சிறந்த அழகான நடிகை – ஐஸ்வரியாராய்.
சிறந்த இயக்குனர் – ஷங்கர்.
சிறந்த இசையமைப்பாளர் – ரகுமான்.
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து.
என பிரபலங்கள் இணைந்திருக்கிற எந்திரன் காலத்தில் இந்த இடுகை சரியானதாக இருக்கும் என தோன்றுகிறது.

மலையாளத் திரையுலகம் எடுத்த படத்தை ஓடவைக்க பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான படம் தரப்போகிறோம் என்பதில் நிச்சயம் பெருமை கொள்ளலாம். கலாநிதி போட்ட பணத்தை இப்போதே எடுத்திருப்பார் என தோன்றுகிறது. மாலை சன் டிவியில் ஒளிபரப்பான விளம்பரமே அதற்கு சான்று. நிகழ்ச்சி ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஐஸ்ஸின் பேச்சை மட்டும் யூடிபில் பார்த்தேன். ரஜினியைப் பற்றி பேச மறந்துவிட்டு பின் ஓடி வந்து பேசும் காட்சியை நினைத்து அழுவதா, சிரிப்பதா என தெரியவி்ல்லை.

ராதா ரவி ஐஸ்வரியாவுக்கு பதிலாக தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் தமிழ் நடிகைகளை நடிக்க வையுங்கள் என சூசகமாக சொன்னார். யாருக்கெல்லாம் புரிந்ததோ தெரியவில்லை. அடுத்து பேச வந்த சந்தானம் ஒரு விசயம் சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் கருணாசும், சந்தானமும் “நேற்று போல பிகர் ஏதும் வந்தால் கூட பார்க்கலாம். இதுங்களையெல்லாம் பார்த்து என்னாகப் போகிறது” என பேசிக்கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த ரஜினி “பிகர் ஏதும் வந்துச்சுனாக்கூட பார்க்கலாம். இதுங்களையெல்லாம் என்ன பார்க்கறதுன்னு” உட்காந்துகிட்டு இருக்காங்க பயங்க என்றாராம். ஒரு சித்தனைப் போல எப்படி ரஜினி இதனை சரியாக சொன்னார் என்று ஆச்சரியப்பட்டார் சந்தானம்.

நடிப்பு, திறமை, முயற்சிகள், வெற்றி இந்த எல்லாம் ரஜினியிடம் இருந்தாலும், அவற்றையெல்லாம் விட என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்துவது ரஜினியின் ஆன்மீகம். நேற்றுவந்த சுண்டைக்காய்களெல்லாம் சத்தம் போடும் போது அமைதியாக இருக்கும் உட்ச நடிகனை பார்க்கும் போது நம்ப முடியவில்லை. கைசையவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள், தரிசனத்திற்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், கூடி இன்பம் தரும் உறவுகள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இமயத்தில் தேடுதல் நடத்தும் ஒரு மனிதனின் மனது ஆச்சிரியமானதுதானே.

ரமணர், ராகவேந்திரர், பாபா என அவருடைய ஆன்மீகத் தேடல்கள் நிச்சயம் ஒரு ஆராய்ட்சிக்கு உரிய விசயம். ரமணரும், ராகவேந்திரரும் முழுமையாக ஆட்கொண்டு விட்டபின்பு, பாபாவை நோக்கி கவணம் செலுத்திக்கொண்டு இருக்கிறார் ரஜினி. சித்தர்களின் அபூவர்மான செய்திகளை மேடைகளில் கூட சில சமயம் சிலாகித்து பேசுகிறார். “இருந்தும் இல்லாமல் இரு” என்ற உண்மை மொழிக்கு சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீகம் அவரை பக்குவப்பட்ட மனிதாக மாற்றியிருக்கிறதென அவரே சொல்கிறார். அதனை மெய்ப்பிப்பதாக உச்சியிலிருந்தாலும், கீழே விழுந்தாலும் அதன் பாதிப்புகள் அவரிடம் எப்போதுமே இல்லை. பாபா தோல்வியும், குசேலன் தோல்வியும், பாட்சா வெற்றியும், சிவாஜி வெற்றியும் ஒன்று போலவே தோன்றுகிறது அவருக்கு. எந்தவொறு விசயமாக இருந்தாலும் முடிவை தேர்வு செய்யும் முன்பு நிதானமாகவும், அதன் பின் படுவேகமாகவும் மாறிவிடுகிறார் ரஜினி.

“இது ஆண்டவன் கட்டளை” எனும் நூல் அவருடைய ஆன்மீகப் பயணமான இமயத்தின் பயணத்தையும், பாபாஜி பற்றிய ரஜினியின் தேடலையும் தெளிவாக சொல்கிறது. அதில் ரஜினி கூறிய கதையொன்று இருக்கிறது. ஆன்மீகம் சார்ந்த கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அறிவியல் சார்ந்த கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள். நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள் என்றது குட்டி.

அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் அதுவும் மணல் பூமி. அதனால் தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள் என்றாள் தாய்,
நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள். கற்கள் போல பற்கள் என விடமல் கேட்டது குட்டி.

அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள் தாவரங்கள் தானே. அவற்றை மென்றுதின்பதற்காக வசதியாக கடவுள் செய்த ஏற்பாடு இது. என்றது தாய்.

“நமக்குள் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை”

“அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்து நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணை கொண்டு கடவுள் தந்த பரிசு இது” என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும்.”அதெல்லாம் சரி. பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்ஸில் இரு்க்கிறோம் எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.

இறைவன் நமக்கு தேவையானதையெல்லாம் கொடுத்திருக்கிறான். ஆனால் நாம் தான் சர்க்ஸ் ஒட்டகங்கள் போல அதற்குள்ளேயே இருந்து மறித்துவிடுகிறோம். பாலைவனங்களை பார்ப்பதற்கு கூட நாம் தயாராக இல்லை.

எந்திரன் ஆசையில் வலைப்பூவிற்கு வந்தவர்களுக்கு சில தகவல்கள்,…

எந்திரன் தகவல்கள் –

4 comments on “ரஜினி எந்திரனா? சித்தனா?

 1. விபா சொல்கிறார்:

  வணக்கம் தலைவா!

  எல்லாம் சரி தலைவா. ஒன்றே ஒன்று தான் புரியவில்லை. ஏன் ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க நீண்ட நாட்களாக ஏங்கினார் (இந்த வார்தை தான் இங்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்) என்பதுதான் அது. இப்பொழுது அவர் தன் பிறவி பயனை அடைந்துவிட்டார் தானே?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இந்த விசயத்தில் அவர் மனிதனாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் ஐஸ் கொள்ளை அழகு என்பதை மறுக்க முடியாது. அழகியுடன் நடிக்க ஆசை கொண்டார். அடைந்தும் விட்டார்.

   தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

 2. R.Gopi சொல்கிறார்:

  விபாவிற்கு ரஜினி / ஐஸ் ஜோடி மேல் அப்படி என்ன ஒரு கண்…

  ரஜினி தான் ஐஸ்வர்யாவுடன் நடிக்க ஆசைப்பட்டது ஏன் என்று ஒரு விழாவில் சொல்லியிருக்கிறாரே….

  படைப்பாவில் அந்த நீலாம்பரி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் அவர்களை நினைத்து பாருங்கள்…. பின் உங்களுக்கு புரியும் ஏன் ரஜினி அப்படி சொன்னார் என்று…..

  யார் எந்த படத்தில் நடித்தாலும், ரஜினி அவர்களுடன் நடிக்கும் போது, ஒரு தனி அந்தஸ்து வந்து விடுகிறது…. ரம்யா கிருஷ்ணன் – படையப்பா, ஜோதிகா – சந்திரமுகி என்று பல படங்கள்…

  அப்படி ஐஸ்வர்யா ராய்க்கு தமிழில் எந்த வெயிட்டான ரோலும் தரப்படாத நிலையில் படையப்பா நீலாம்பரி வேடம் சால பொருந்தி இருக்கும்….

  ஸோ, நீங்கள் நினைப்பது போல், பிறவி பயனை அடைந்து விட்டார் போன்ற வக்கிர எண்ணங்களுக்கு இடமில்லை விபா அவர்களே…

  ரஜினியை விட சிறிது வயதே குறைவான கமல் சினேகா, கிரண், திரிஷா போன்றாருடன் நடித்த போது, வாய் மூடி மவுனியாய் இருக்கிறீரே…

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   விபா சொன்னதிலும் உண்மை இருக்கிறது நண்பரே!. ஐஸ்வரியா நீலம்பரியாக நடித்திருந்தால், நமக்கு ரம்யா கிருஷ்ணனின் திறமை தெரியாமலேயே போயிருக்கும், ஜோவும் அப்படிதான்.

   எல்லாப் படங்களிலும் நடக்க ஐஸ்க்கு திறமை இருக்கிறது. அதுபோல நம்முடைய நாயகிகளுக்கும் திறமை இருக்கிறதல்வா. அதைத் தான் எல்லோரும் ரஜினிக்கு சுட்டி காட்ட விரும்புகிறார்கள். எந்திரனில் ஐஸ்ஸூடன் ஜோடி சேர்ந்து விட்டார். படம் எதிர்ப்பார்ப்புகளை தூண்டிக் கொண்டிருக்கிறது.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மி்க்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s