தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

87 comments on “தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

 1. vasudevan சொல்கிறார்:

  என் ஊரில் உள்ள அம்மன் பெயர் எல்லை அம்மன் அல்லது எல்லம்மன் ;
  என் ஊர் செம்மாண்டாம் பாளையம் , சோமனூர் ( வாழை தோட்டத்து அய்யன் கோவில் அருகே ) , கோவை .
  தாங்களை போலவே என்னக்கும் தெய்வங்களின் பெயரை சேகரிக்க ஆவல் வந்து விட்டது. தொடர்ந்து முயல்கிறேன் . நன்றி நண்பரே !

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எல்லையம்மன் பற்றி நானும் தேடுகிறன். நீங்கள் உங்களால் முடிந்த தெய்வங்களின் கதையை ஆவணப்படுத்துங்கள். புதிய புதிய தெய்வங்களின் கதைகள் நம் முன்னோர்களை மையமாக கொண்டவை எனவே சலிப்பே வராது.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 2. படைப்பாளி சொல்கிறார்:

  அருமையானத் தகவல்கள் நண்பரே..சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்..எனது குலதெய்வம் கூட கருப்பண்ண சாமி என்று என் பாட்டி சொன்னதாய் ஞாபகம்..என் பாட்டியிடம் தெளிவாக கேட்டு சொல்கிறேன்..கதை தெரிந்தாலும் பகிர்கிறேன்.அதைப் பற்றியும் எழுதுங்கள்..ஆர்வமுடன் எதிப்பார்க்கிறேன்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   என் நண்பனின் தெய்வம் சங்கிலி கருப்பு. அவனும் கதையை கேட்டுச் சொல்வதாக வாக்களித்திருக்கிறான். அவன் சொன்னால் மறு நிமிடம் சகோதரனில் சங்கிலி கருப்பு இருப்பார். எனினும் உங்களுடைய கருப்பண்ண சுவாமி பதிவுக்காக காத்திருக்கிறேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.

 3. MSK சொல்கிறார்:

  எனது குல தெய்வம் ‘ஐந்து வீட்டு சுவாமி’ (பெரிய சாமி, —–, அனந்தம்மன், திருப்புளி ஆழ்வார், பெரிய பிராட்டி மற்றும் காவல் தெய்வம் ஆத்தியப்பன் ). இரண்டாவது சாமி பேர் நினைவில் இல்லை. வீட்டில் கேட்டு சொல்கிறேன். பெரிய கோவிலின் உள்ளே எல்லா சாமிகளுக்கும் தனி தனி கோவில்கள் உள்ளன. இடம் : செட்டியாபத்து, உடன்குடி ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம்.
  இங்கு நடக்கும் சித்திரை பூசை கூட்டம் ரொம்ப விசேஷம். லட்சகணக்கில் மக்கள் வருகிறார்கள்.

 4. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  நண்பரே நான் அறிந்த சில தெய்வங்களின் பெயர்கள்,,
  சங்கிலி பூதத்தார், கற்குவேல் அய்யனார், இன்னும் சில முக்கியமான கோவில்கள் எங்கள் பகுதியில் உள்ளது அவற்றை பற்றி தகவல்களை அறிந்து கொண்டு உங்களுக்கு கூறுகிறேன்.

 5. சைதை மாரியப்பன் சொல்கிறார்:

  உங்களுடைய பணி மிகவும் போற்றுதற்கு உரியது தோழரே!. அழிந்து வரும் நாட்டுபுற தெய்வங்களின் வழிபாட்டை தூக்கி நிறுத்த உங்கள் கட்டுரைகள் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

  சைதை கடும்பாடி அம்மன் கூட சிலருக்கு குலதெய்வம். அம்மன் வரலாறு கோவிலில் கிடைக்கலாம்.

 6. Mohanaraj சொல்கிறார்:

  In our village near Nagercoil, Kanyakumari District, God name is “Thangamma” & “Thayamma” Pls. Visit this website to know the story of the God ” http://en.wikipedia.org/wiki/Elur_Chetty

 7. karthik சொல்கிறார்:

  நவ கன்னிகைகள் சந்நிதானம் எங்கே உள்ளது? தெரிந்தால் சொல்லுங்கள். (எல்லா கோவில்களிலும் சப்த கன்னிகள் சந்நிதானம் மட்டுமே உள்ளது)

 8. shan சொல்கிறார்:

  madurai veeranai vittu vitteerey…

 9. yiravan சொல்கிறார்:

  கட்டுரை அருமை உங்கள கட்டுரை எனது வளர்ச்சிக்கு பெரிது உதவியது நன்றி.

 10. siva சொல்கிறார்:

  yenkal kuladevaim, name: Veera sennammap, dindukul to Nattam road, metukadai bus stopil youlludu

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நல்லது நண்பரே!.

   இன்னும் சில தெய்வங்களை இந்தப் பட்டியலில் இணைக்க உதவியமைக்கு நன்றி. உங்கள் தெய்வத்தின் வரலாறுகளையும், அற்புதங்களையும் நேரம் கிடைக்கும் போது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 11. rajeshzeus சொல்கிறார்:

  hello sir,
  i am rajesh, tirunelveli, In my travel route i have see one kovil,

  the goddess name: Vandi Malachi Amman (Velalan Chitiyar caste kovil)

  place: Tirunelveli –> Palayamkottai –> Palay Market Bus Stop (Near Flower Bazzar)

  thank you
  yours
  Rajesh,S – Tirunelveli
  94434 03343

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே. மேலும் ஏதேனும் விவரங்களை சேகரிக்க இயலுகிறதா என பார்க்கிறேன். போகிற போக்கில் என் ஞாபகம் வந்தது இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

 12. Egaeelan சொல்கிறார்:

  please write about the periyandavar god

  G.Egaseelan9842740957

 13. narendran சொல்கிறார்:

  naan narendran naan ungalai muthal pakanum ungal yentha same history venalum naan tharen nanbare…….

 14. R.Muthu Kumar சொல்கிறார்:

  anna,
  ennudaiya kula deivam sri Audaiyamman place : thiruzhuli village, virudhunagar district. Sri Avudaiamman story sollunga please.

  Regards,

  R.Muthu Kumar
  Madurai
  Ph:9677875560

 15. சிங்கராஜன் சொல்கிறார்:

  எங்கள்
  குலதெய்வம்கள்
  கோவில்பட்டி நள்ளி
  சிங்கமடை அய்யனார்,
  பேச்சியம்மா,
  கருப்பு சாமி,
  ஆகிய சாமிகளை சேர்த்து கொள்ளவும்.
  R.சிங்கராஜன் ஆற்காடு. வேலுர் மாவட்டம்

 16. ராஜேஷ் சொல்கிறார்:

  என் குல தெய்வம் “மேகாத்தம்மன்” சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் (ECR) கடலூர் கிராமம் என்று ஒரு ஊர் உள்ளது அதன் அருகில் அமைந்துள்ளது இந்த கோவில். சில வருடங்கள் பாடுபட்டு 2 நாட்களுக்கு முன் தான் குல தெய்வத்தை கண்டுபிடித்தோம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பரே. வருடங்களாகப் பாடுபட்டு நாம் குலதெய்வங்களை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். நீங்கள் பாக்கியசாலிகள், குலதெய்வத்தினை கண்டறிந்து விட்டீர்கள். ஏக நண்பர்கள் குலதெய்வங்களை அறியாமல் திருப்பதி பெருமாளையும், பழனி முருகனையும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேகாத்தம்மனின் கதையறிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ள தவராதீர்கள். நன்றி.

  • e.dilhibabu சொல்கிறார்:

   en veetu kutheivamum megaththaman

 17. Sundar சொல்கிறார்:

  வணக்கம் ,

  என்னுடைய குல தெய்வம் சம்பந்தமாக நிறைய குழப்பம் இருக்கிறது , கடந்த 15 வருடங்களாக காயமொழி சுடலை மாடன் சாமி ஐ வணங்கி வந்தோம் , ஆனால் தற்சமயம் பங்காளிகளுக்குள் குழப்பம் உருவாகி செட்டியா பத்து ஆத்தி சாமி தான் குலதெய்வம் என்கிறார்கள் , இதரிக்கு காரணமாக அவர்கள் கூறுவது அப்பாவின் அப்பா (தாத்தா ) பெயர் ஆத்தி முத்து .

  பெரியப்பாக்கள் எனது தந்தை , முன்னோர்கள் என அனைவரும் சிறு வயதிலேயே காலமாகி விட்டதால் விவரம் சரி வர சேகரிக்க முடிய வில்லை, இதற்கு தீர்வு காண ஈதேனும் வழி உண்டா ???தயவு செய்து உதவுங்கள் …

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   முன்னோர்களின் அடையாளங்களே மூதாதையர் வழிபாடாக இருப்பதால், யாரேனும் முதியவர் ஒருவராவது எடுத்துரைத்தால்தான் குலதெய்வ வழிபாட்டினை அறிந்து கொள்ள இயலும். தங்களது சொந்தங்களுக்குள் இருக்கும் முதியவரை தேடுங்கள் என்பதே என்னுடைய கோரிக்கை. சரியான தெய்வம் பற்றி தாங்கள் அறிந்து கொள்ள ஈசனை வேண்டுகிறேன். நன்றி.

 18. arunkumar சொல்கிறார்:

  masanamoothy,mundasamy,palavasakaran,vannaramadan,kulasagaranangai amman, pramma rachasai amman, pramma sakthi amman, sivan annaja perumal…….

 19. vivek சொல்கிறார்:

  Kaval thevangal : karungkidaai karan,senkidaai karan swamy,palavesakaran swamy,manthira moorthy vaathai swamy,mannan karukali vaathai swamy, ilanirathu vaathai swamy, i court maharaja swamy,kaduva moorthy swamy,ottrai kudaikara swamy,kalukaran swamy,sappani madaswamy,mundan swamy,manna raja vaathai swamy,maaya muthu swamy, pen kadvulkal: isaki amman, kulasai mutharamman, brammasakthi amman,

 20. Krishnakumar சொல்கிறார்:

  சங்கிலிபூதத்தார் வரலாறு கூறுமாறு கேட்டு கொள்கிறான்

 21. gunasekaran.s சொல்கிறார்:

  (அம்மச்சார் அம்மன். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பொன்பத்தி கிராமம்….. ஓம் அம்மச்சார் தாயே போற்றி, உலக விருச்சத்தின் விதையே போற்றி, இருள் விரட்டி இன்பம் சேர்ப்பாய் போற்றி, வேள்வி விழிகொண்டு காப்பாய் போற்றி, போற்றி போற்றி அம்மச்சார் அம்மனே போற்றி…)

 22. mayandi சொல்கிறார்:

  எங்கள் குலதெய்வம் ஸ்ரீபலவேசக்காரசாமி இது திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தெய்வம்ஆகும் இதற்கு கதை உண்டு மேலும் இதுகிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இருப்பதாகும்

 23. கோவிந்தன் . சொல்கிறார்:

  எங்கள் குலதெய்வம் வேப்பூர் தாலுகா பொயனப்பாடியில் உள்ளது . ஐய்யனாரப்பன் கொண்டாட கருப்பன் தூண்டிராமன் சடையப்பன் சன்னியாசி அப்பன் தொழுவுடையான் பாவாடைராயன்
  பெண் தெய்வம் புடவைக்காரி பொன்னுந்துலக்கச்சி முத்தாளம்மன் தங்காயம்மன் பாபாத்தியம்மன் இன்னும் இரண்டு கன்னிமார் பெயர் தெரியவில்லை. அதை தெரிவிக்கமுடியுமா. பொயனப்பாடி அடரி பஸ் நிறுத்தத்தில் இருந்து இரண்டு கிமீ செல்லவேண்டும் .

 24. பிரவீன் சொல்கிறார்:

  எங்கள் குழதெய்வம் சங்கடிமுத்து சாமி, சேலம் மாவட்டத்தில் உள்ளது, சாமியின் கதை தெரியவில்லை, இந்த சாமிக்கு வேறு எங்கேயேனும் கோவில் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்..

 25. pandi சொல்கிறார்:

  ஆதினமிளகி ஐய்யனார்
  பனங்குடி,சிவகெங்கை மாவட்டம்

 26. Esakkimuthu சொல்கிறார்:

  என் தாய் பேச்சியம்மன் வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள்

 27. S ramkumar சொல்கிறார்:

  சப்பாணிமாடன் சுவாமி please sent history mail

 28. C Balachandar சொல்கிறார்:

  வணக்கம் ஐயா! என் ஊர் திரு நெல்வேலி.. என்னுடைய குல தெய்வம் வீரமுத்து அய்யனார். தங்களுடைய வரிசையில் இடமும் பெற்றுள்ளது எனக்கு வீரமுத்து அய்யனார் கோவில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் பகிரவும்.. பதிவில் உள்ள் நண்பர்களும் தங்களுக்கு தெரிந்தால் பகிரவும். நன்றி.

 29. anandan சொல்கிறார்:

  Yenathu sontha oor tirunelveli and yenathu kuladeivam Shivan Inaintha Perumal Ivarai patri kathai irunthal sollunga.

 30. அபிலாஷ் சொல்கிறார்:

  வணக்கம்
  நான் இப்போது புளியன்விளை சுடலை பற்றி உங்களுக்கு சொல்கிறேண்
  எங்கள் ஊா் பசுமையாக இருக்கும் அங்கு எங்கள் தெய்வம் சுடலை கோவில் 400ஆண்டுகள் பழமை வாய்ந்தது கோவில் கொடைவிழா சித்திரை முதல் வாரம் வியழன் வெள்ளி சணி அகிய முன்று நாட்கள் நடைபெறும் வெள்ளி காலை வில்லு இரவு மகுடம் 1மணி முதல் ஊட்டு நடைபெறும் சணி காலை மகுடம் அதன் பின் அண்ணதாணம் நடைபெறும் வெள்ளி இரவு சுவாமி அக்கினி இறங்குதல் நடைபெறும் திருவிழா நன்றாக இருக்கும் 15நாட்களுக்கு ஒரு முறை படப்பு நடைபெறும் படப்பின் நண்மைகள்… குழந்தைபாக்கியம் நோய்கள் திரும் கவலை திரும் திருமணபலண் அமையும் கோவில் செல்லும் வழி கண்ணியகுமரி மாவட்டம் நாகர்கோவீல் வில்லுகுறி புளியன்விளை சிவ சுடலைமாடசுவாமி திருக்கோவில் கோவில் புசாரி ராஜா தொடர்புக்கு……..9442303090
  நன்றி

 31. ஜூனிதா சொல்கிறார்:

  எங்க ஊர் சாமி மண்டைக்காடு பகவதி அம்மன். அப்புறம் சேலைக்காரி னு கூட ஒரு
  அம்மா பத்தி கேள்விப்பட்டிருக்கேன்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சேலைக்காரி அம்மனைப் பத்தி சமீபத்தில் தான் அறிந்தேன். பொதுவாக கணவன் இறந்தமைக்கு உடன்கட்டை ஏறும் பெண்களை இப்பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

 32. ஜூனிதா சொல்கிறார்:

  Add Stories of all the village Gods.Will be helpful for the next Generation

 33. M.மாரிமுத்து சொல்கிறார்:

  சங்கையாசுவாமி இவரின்திரு நாமங்கள்

  சங்கிலி கருப்பர்
  சங்கிலி ராயர்
  சங்கிலி பூதத்தார்
  சங்கையா
  என்ற திருநாமங்களில்
  அழைக்கபடுகின்றார்

 34. ப.சண்முகம், காரைக்கால். சொல்கிறார்:

  எங்களது குலதெய்வம் தீபாஞ்சாலி அம்மன் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

 35. சுரேந்த் சொல்கிறார்:

  வண்ணாரமாடன், வண்ணார இசக்கி, விடுபட்டுள்ளது

 36. சுரேந்த் சொல்கிறார்:

  குமரி மாவட்டம் தாழக்குடி எனும் ஊரில் தமிழ்த்தாய் ஔவையாருக்கு ஔவையாரம்மன் எனும் கோவில் இருக்கிறது

 37. சுரேந்த் சொல்கிறார்:

  கடுவா மூர்த்தி

 38. gajenthiran சொல்கிறார்:

  hi nice post nice collection some of the deivam history such as papathi amman, neelakesi amman and more varalaru you can get from (giri production ) gramatheivagal book part 1 and 2… you can get from there

 39. Kannan சொல்கிறார்:

  Mannaraja ,kolaivazhai issakki

 40. Renu சொல்கிறார்:

  பதினெட்டாம்படி பெரியகருப்பு
  பெரியாச்சி

 41. Renu சொல்கிறார்:

  Periyaachi Amman
  Vadivudai amma
  Kodivudai Amman
  Thiruvudai amma
  Kolavizhi badrakaliyamma
  Maruvathur omshakthi Amman
  Meenachi Amman
  Vattaparai Amman
  Peelikkan angalishvary
  Kaalikambal

 42. Renu சொல்கிறார்:

  Peelikan munishvaran
  Poochi thatha

 43. கா.குரு சொல்கிறார்:

  தொட்டிகட்டி சின்னான். காத்தவராயனுக்கு சிஸ்யனா அல்லது யார் என தெரியவில்லை…

 44. Prabhu சொல்கிறார்:

  Engal kulatheivam kaduva moorthi.kanniyakumari Mavattam,thozhicode.

 45. Subesh Kumar சொல்கிறார்:

  Enga kulatheivam Vannara madasamy..ivarin kathai theryum…anaal nenga mela potrukra mukalvaasi.,Ayya Sudalamadasamy avarin avatharamae.. elarkum muthanmaiyanavar avarae.

 46. SHANTHI சொல்கிறார்:

  KOLLATHU MOORTHY KANYAKUMARI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s