சுடலை மாடன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.

பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.

அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.

சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.

சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.

அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.

மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.

காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.

பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.

அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.

திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான்.

நன்றி –
சுடலை வீரன் ஆலயம்

72 comments on “சுடலை மாடன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

 1. vasudevan சொல்கிறார்:

  கதை சூப்பர் . கொலை , கற்பழிப்பு ஆகியவற்றை கடவுளே செய்யலாமா ?

 2. கோகிலா சொல்கிறார்:

  மனித பலிகள் பயமுறுத்துகின்றன.

 3. vikneswari சொல்கிறார்:

  kathai nallaathaan irukku. nara bali thodarnthu poikkitte irukke. aanaa naa kelvi patta siru theiva vazhibaattu kathaikalla perumbaalum oru ‘hero’ vaathan irunthirukkaangale thavira villanaa illa. ithu enakku puthusaathaanga theriyuthu. theriyaatha kathaiyila ithukku mela thalaiyida virumbala. sonnathula thappu iruntha mannichidunga.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எப்படி நல்லவர்களை தெய்வங்லாக வழிபட்டனரோ அதே போல சில கொடூர மனிதர்களையும் தெய்வங்களாக சில இடங்களில் வழிபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு அவர்களைப் பற்றிய பயம் கூட காரணம் என்று சொல்லாலாம். மேலும் பலி என்பது பண்டைய தமிழகத்தில் இருந்து தொடர்ந்து வருகின்ற ஒன்று. முப்பலி என்று இன்றும் ஆடு, கோலி, மாடுகளை பலி கொடுக்கும் பழக்கம் பரவலாக இருக்கிறது. கொஞ்சம் மிகை படுத்த மனித பலியையும் கதை சொல்லிகள் இணைத்திருக்கலாம்.

   வருகைக்கு மிக்க நன்றி விக்னேஸ்வரி.

 4. மருதநாயகம் சொல்கிறார்:

  //கொஞ்சம் மிகை படுத்த மனித பலியையும் கதை சொல்லிகள் இணைத்திருக்கலாம். //

  எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. ஏனென்றால் மனித பலிக்கு சாத்தியங்கள் நிறைய உண்டு. நரபலி சாமியார்கள் இன்றும் பலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  //அவர்களைப் பற்றிய பயம் கூட காரணம் என்று சொல்லாலாம்.//

  உண்மையாலும் கொடூர மனிதர்களை வணங்குவதற்கு பயம்தான் காரணம். அதை ஒத்துக் கொள்கிறேன்.

 5. Sakthivel சொல்கிறார்:

  திகில் கதை…… நல்லா இருக்கு.
  நல்ல தேடல், தொடரட்டும்.

 6. மனோ சொல்கிறார்:

  நீங்கள் பதிந்தது சுடலைமாடன் சுவாமி கதை அல்ல, தற்குறிகள் சொல்லும் கதைகள் அனைத்தும் கடவுளர்களின் வரலாறு அல்ல. உண்மையான கதையை தெரிந்துகொண்டு உங்களின் பதிவை திருத்துங்கள். உங்களை கூட நல்லவர் என்று சிலரும், இல்லை, இவர் கேட்டவர் என்றும் சிலர் சொல்லலாம். உண்மை உங்களுக்கும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே தெரியும். மேலும் விபரங்களுக்கு மெயில் செய்யவும்.

 7. மனோ சொல்கிறார்:

  நண்பரே
  சுடலைமாடன் சுவாமி கதையை தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் , நன்றி .
  – மனோ

 8. S.Chandra Prakash சொல்கிறார்:

  Dear Mano,

  Jageswaran totally wrong on his thought about our God Sudalai Madan.But Part 2 is clear and it is not story to tell but “True Events” of our God

  S.Chandra Prakash
  Chennai -21

 9. muthumanikandan சொல்கிறார்:

  sudalai madan kathai super.becoz nanum sami aduven.

 10. selva சொல்கிறார்:

  i want to know about sudalai kodai thiruvizha in seevalaper. can you help it? selva

 11. Saravanan சொல்கிறார்:

  This God born before 35,000 years ago. My Research says.Its true Sudalai Madan Samy got Human pali including goat ,pig, hen but not cow like muslims.He was really a speaking god. If anybody want verification please come to Tirunelveli and see the miracle in Tangalampudur Sudalai kovil in Tuesday & Friday.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. நீங்கள் கூறுவது போல 35000 ஆண்டுகள் முன்பிருந்த தெய்வம் என்றால், நானறிந்த சிறுதெய்வங்கிளில் மிகவும் தொன்மையானதாக இருக்கும் தெய்வம் சுடலையாகவே இருக்கும். தஞ்சை கோவில் கட்டி 1000 வருடங்களே ஆகின்ற போது, சுடலை 35 மடங்கு பழமையானது என்றால் மிகவும் வியப்புதான்.

 12. Baskar சொல்கிறார்:

  My experience is sudalamada samy is wrongly perceived by the people.He destroys the evil and guard the good people.Honestly we should accept that 99 % of the human beings are evil.So he does evil to evil people.If you be no greedy,selfish &angry,he is there with you and he will help you.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   முன்னோர்களெல்லாம் பேய்களென்றும், பிசாசுகளென்றும் கூறிக் கொண்டு இருக்கும் கிறிஸ்துவக் கூட்டம் முதலில் கைவைப்பது சிறுதெய்வங்களைத் தான் அதை குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். முன்னோர்களின் வழிபாட்டு முறையை அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதன் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை. மாடனும், கருப்பனும், வேலனும் நம்முடைய முன்னோர்களின் நினைவுச் சின்னங்கள். அயல்தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அதெல்லாம் எப்படி தெரியப்போகின்றது.

 13. UMA KRISHNAN சொல்கிறார்:

  VERY RECENTLY I PARTICIPATED IN THE MADA SAMY KOIL KODIVIZHA.EVEN THOOUGH I DO NOT KNOW THE HISTROY OF SUDALI I JUST PRAYED HIM A LOT.VILLU PATTU,MAKUDM,PALI ALL ARE HAPPENING IN 3 DAYS FESTIVAL IN KATHAPURAM,TIRUNELVELI DT EVEN NOW.

 14. சிவா சொல்கிறார்:

  சுடலை மாடன் வரலாற்றைப் பற்றிய தகவல்களை மெலும் அறிய இந்த இனயதளத்தை அனுகவும் !!!!!

  http://kamuthisudalaimadaswamy.com/

  நன்றி!!!!

 15. B.vimalraj சொல்கிறார்:

  sudalaimadan kathai nallarukuthu

 16. R.Ponvel சொல்கிறார்:

  intha kathai enaku anuppa vendukiren

 17. சிங்கம் சொல்கிறார்:

  கதையில் நிறைய தவறுகள் உள்ளது

 18. SAKTHI சொல்கிறார்:

  nanpare naan samipakalamaga sudalai madan swamy adi varukinren pls unmaiyana varalaru ethu enru theriya uthaungal therinthavargal mail pannaum vsprskumar@gmail.com

 19. chitra சொல்கிறார்:

  sudalai madan story was very good. ippavum madan vettaiku porathu ellam engA Tuticorin,thirunelveli districtla undu. pottal madaswamy,kobumu madaswamynu different namelaum irukuthu. enga kovila madanuku pacha arisi satham mattum than padayal poduvom. pali ellam kidayathu. seiva matha kipudurom

 20. muthumaran சொல்கிறார்:

  that is real story

 21. Karuppasamy சொல்கிறார்:

  நீங்கள் பதிந்தது சுடலைமாடன் சுவாமி கதை அல்ல, தற்குறிகள் சொல்லும் கதைகள் அனைத்தும் கடவுளர்களின் வரலாறு அல்ல. உண்மையான கதையை தெரிந்துகொண்டு உங்களின் பதிவை திருத்துங்கள். மேலும் விபரங்களுக்கு மெயில் செய்யவும்.

  please refer the Below real story.

 22. Rinesh Kumar சொல்கிறார்:

  வண்ணார மாடன் கதையை பதியவும்

 23. Sabarish சொல்கிறார்:

  தயவுசெய்து பலவேசக்கரர் கதையும் பதிவு செய்யுங்கள்…

 24. Vengatesh சொல்கிறார்:

  I want full story of sudalai madan, Madathi pls send me… Pls sir

 25. Karthik சொல்கிறார்:

  சரியாக இருந்து கதை

 26. Sankar சொல்கிறார்:

  Thank you

 27. Sudharsan சொல்கிறார்:

  Super Story Full Story Send My Mail

 28. gokilaa சொல்கிறார்:

  story ok but..it seems incompleted!!!

 29. kalimuthu sakthivel சொல்கிறார்:

  Intha swamy story enakku Rembo pudikkum aana intha story ye eppadi download pannurethnu sollunga please intha story full ahh! Download seithu padikkanum .book ah print poittu enakku therinjavangalukku ellarum kodukkanum please download panna help pannunga

 30. kalimuthu sakthivel சொல்கிறார்:

  I like this story and I need to full story old

 31. esakkiappan சொல்கிறார்:

  UNMAI 100%

 32. Mahajeyam சொல்கிறார்:

  Thanks for the stories. But Sorry to say almost stories wrong about him. I am from Nellai and knows very well about Sudalai Madan. Powerfull kaval theivam. You didn’t mention why he went to kill maavisaksi because his father steal all golds and others from Kanyakumari Pakavathiamman. So he took revenge as per his job. Offcourse he will play as per whoever do special booja but if you do wrong you will be punished. Not like other gods. People scared about to do wrong in front of him. Even many temples no walls, no fencing but kovil property still saved. No one stealing because of his punishment. Now because of latest changes peoples move to Thirupathi…and other gods. But reality he is one of the god comes to earth as per Sivan request to punish people who do mistakes. We believe and i get lot of blessings from Sudalai madan. Offcourse Sadalai Madan worship by lower caste up to only madurai. Please try to add some other originality to believe peoples and to avoid blamming christians.

 33. Piratheepan சொல்கிறார்:

  Enakku kali Amman kathai venam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s