வாழைத் தோட்டத்து அய்யன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

வாழைத் தோட்டத்து அய்யன் துணை என்று எழுதப்பட்ட வாகணத்தினைக் கண்டேன். பச்சை வாழையம்மனைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். இந்த அய்யன் இப்போதுதான் கவணத்தில் வருகிறான். வீட்டிற்கு வந்தவுடன் கூகுளாண்டவரைக் கேட்டேன். கிடைத்தது அய்யன் கதை.

வாழையின் மகிமை –
எங்கள் ஊரின் தலையாய விவசாயம் வாழை என்பதால் அதனைப் பற்றி நன்றாக தெரியும். குறுத்து இலை முதல் அடிக்கிழங்கு வரை பயன்படாத பாகங்களே இல்லை. அப்படியிருக்க இந்த வாழைக்கும் அய்யனுக்கும் என்ன தொடர்பென ஆராய்ந்தால். வாழையைப் போல அண்டி வந்தோருக்கு எல்லாமுமாக உதவக் கூடியவன் இந்த அய்யன் என்ற நோக்கில் பெயரிட்டிருக்கின்றார்கள்.

அய்யனின் கதை –

அய்யனின் இயற்பெயர் சின்னையன். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார்.அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார்.

பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை.ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.

அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் “” நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்”, என்று கூறிவிட்டார்.மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார்.

இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

கோவில் –

இந்த வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கோவை மவாட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி ஊரில் இருக்கிறது. புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை .

5 comments on “வாழைத் தோட்டத்து அய்யன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

  1. vasudevan சொல்கிறார்:

    இந்த கோவில் கிட்டே தான் நான் பிறந்த ஊரும் இருக்கு,எங்கள் கோவிலை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி நண்பரே !

  2. கோகிலா சொல்கிறார்:

    பச்சை வாழையம்மனை வணங்கியிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இப்போதுதான் படிக்கிறேன். பார்க்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s