தமிழ் மண்ணின் சாமிகள் – ஒரு முயற்சி

சிறுதெய்வம் என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மக்கள் தம் குறை நீக்கும் தெய்வம். அந்தணர்(ஆரியர்கள் அல்லது பிராமணர்கள்) அல்லாத பூசாரி பூசை செய்யும் தெய்வம் “eleity worshipped by people for alleviation and whose pooja is conducted by a non-brahmin pirst” (T. 439)

நாட்டுப்புற மக்கள் என்றும் நாட்டார் என்றும் தொடர்ந்து ஒரே மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கின்ற சொற்களையே பயன்படுத்தி, நாட்டுப்புற தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று சிறு தெய்வங்களைக் கூறுகின்றார்கள். பொதுவாக ஆரியர்களின் தெய்வங்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.

சிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.

குடும்ப தெய்வம்-

குடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக தற்கொலை செய்தோ, கொலை செய்யப்பட்டோ இறந்து போனவர்களை நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.

தெய்வாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.

குலதெய்வம் –

குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.

திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள். கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல சாதிகளை சார்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்று சிறப்பு பெயர் கிராமத்தி்ல் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது. திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கெட வெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே…”

“குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி…”

என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றன.

ஊர் தெய்வம் –

மூன்றாவதாக ஊர் தெய்வம் என்பது அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் பொது தெய்வமாகும். ஊர் மக்களின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்த மனிதர்களின் நினைவாக எழுந்ததே இந்த வழிபாடு. சில ஊர்களில் பெரும்பான்மையோராக வாழும் இனத்தவரின் குலதெய்வமே ஊர்த்தெய்வமாக விளங்குதலும் உண்டு. சிற்ப்பு பூஜை முறைகளுடன், ஊர் நியமித்த பூசாரியே பூஜை செய்கின்றார்.

கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். குறி சொல்லுதல் அவர்களது இயல்பு. அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும். ஒரு பட்டையான கயிறு
இருபக்கங்களையும் இணைக்கும் கயிற்றுப் பின்னலை இடதுகையினால் தளர்த்தியும் இறுக்கியும் வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலிஎழுப்பும்.

பெண் தெய்வ வழிபாடு –

சிறு தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடே மிகுதியாகக் காணப்படுகின்றது. பண்டைத் தமிழரிடையேயும் கொற்றவை, காளி, இசக்கி என்ற பெண் தெய்வ வழிபாடுகள் காணப்படுகின்றன. பாலை நிலத் தெய்வமாகவும் வெற்றி தரும் தெய்வமாகவும் கொற்றவை குறிக்கப்படுவதனைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. போர்களத்தில் பிணங்களைத் தின்னும் பேய்கணங்களின் தலைவியாகக் காளி குறிக்கப்படுகின்றாள்.

“இயக்கி” என்னும் பெண் தெய்வம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றாள். இளங்கோவடிகள் இடையர்குலப் பெண் மாதரியை அறிமுகப்படுத்தும் போது,

“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதிரி என்போள்”

என்கின்றார். பால் சோறு படைத்தல் என்பது பாயாசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கலாம்.

தொடக்கம் –

சிறு தெய்வங்கள் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வனவாக பாதுகாவல் தருவனவாக மக்களால் பெரிதும் நம்பப்பட்டு வருகின்றன. சிறு தெய்வங்களில் கருப்பசாமி, சுடலைமாடன், பெரியசாமி போன்ற ஆண் தெய்வங்களும் மக்களால் வணங்கப்படுகின்றன.

நாட்டுப்புற மக்கள் சிறு தெய்வங்களை மட்டுமின்றி பெருந்தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஆயினும் நாட்டுப்புற மக்களிடையே சிறு தெய்வங்களே ஒன்றிக் காணப்படும் சக்தியாக விளங்குகிறது. மக்கள் தாம் வழிபடும் சிறு தெய்வங்களின் தெய்வ நிலைக்குட்பட்ட பூசாரி, அருள் வந்தோரின் குறி கூறுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள், தமது விருப்பங்கள் நிறைவேறும் நிலை.

நிறைவேற்றப்பட வேண்டிய வேண்டுதல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதால் சிறு தெய்வங்கள் மீது மிகுந்த பற்றுடையவர்களாகின்றனர். தென் மாவட்டங்களில் சிறு தெய்வங்களில் பெண் தெய்வ வழிபாடுகளாக முத்தாரம்மன், மாரியம்மன், இசக்கியம்மன் வழிபாடுகள் காணப்படுகின்றன. சிறுதெய்வங்கள் ஊர் மக்களைக் காக்க இரவு வலம் வருவதாகவும், அதற்கான பிரத்தியோக வானமாக குதிரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது வரை சொன்னவை எல்லாம் ஒரு முன்னோட்டமே!. சொல்லப்பட வேண்டியவைகள், நாளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டிய வரலாறுகளையும் இனி தமிழ் மண்ணின் சாமிகள் என்ற சிறு பகுப்பின் கீழ் தொடர்வோம்.

எல்லா வல்ல ஈசன் அருள் செய்வானாக!@.

34 comments on “தமிழ் மண்ணின் சாமிகள் – ஒரு முயற்சி

 1. Kaliraj சொல்கிறார்:

  This is very useful

 2. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  இருந்தால் இடுக… நன்றி.அருமையான பதிவு நண்பரே…. மதம் மாறிய தமிழர்களுக்கு அவர்களின் முன்னோர் பற்றி இன்னும் ஆழமாக உணர்த்த வேண்டும்..ஏதேனும் பதிவு அதை பற்றி …

  வைகுண்டராமன்.ப

 3. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

  அருமையான பதிவு நண்பரே…. மதம் மாறிய தமிழர்களுக்கு அவர்களின் முன்னோர் பற்றி இன்னும் ஆழமாக உணர்த்த வேண்டும்..ஏதேனும் பதிவு அதை பற்றி இருந்தால் இடுக… நன்றி….

 4. ramanan சொல்கிறார்:

  மிக அருமையான தகவல்கள் அடங்கிய கட்டுரை. தொடங்குங்கள்.

  ரமணன்

 5. gobu thondaiman சொல்கிறார்:

  enkal(surname thondaiman) kulatheivam “pattavan” , ayyanar and veeranar for all people(espscially thanjai kallar) belongs to my village..my wife (surname Kandiyar) kulatheivam Muniappan. i cant understand why every family(surname) has different kulatheivam. I know meaning of surname and its history( thondaiman, pallavarayar, chola kon, malayaman, mazhavaraiyan,cholapandiyan, vallavarayan etc.) can you please explain me about ayyanar and veeranar?

 6. banu சொல்கிறார்:

  super

 7. sivagurunathan சொல்கிறார்:

  very good information

 8. V.Mahesh சொல்கிறார்:

  யாறெனும் பலவேசம் சுவாமி வரலாறு தெரிந்தால் கூறுங்களென்……

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அ.கா.பெருமாள் அவர்களின் சேர்வைக்காரன் கதையில் பலவேசம் பற்றி வருகிறது. இக்கதை தான் பலவேசம் சுவாமியின் கதையா என்று பார்க்கவும்.

   http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60411187&format=print&edition_id=20041118

   • V.Mahesh சொல்கிறார்:

    மிக்க நன்றி.
    என் குல தெய்வம் வண்ணார மாடசாமி,வண்ணார மாடசாமியின் கதை (வரலாறு) பற்றி சொல்லுங்களென்…

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    சுடலை மாடன் கதை முன்பே நம் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வண்ணார மாடனின் கதையை இதுவரை நான் அறிந்ததில்லை. ஏதேனும் குறிப்புகள் கிடைக்கின்றதா என்று இணையத்தில் பார்த்தேன். அ.கா.பெருமாள் அவர்களின் நூலொன்றில் மாடன் வகைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்கிறேன்.

    உங்களது மூதாதையர்களிடம், பங்காளிகளிடமும், கோவில் பூசாரியிடமும் கதையை விசாரித்துப் பாருங்கள், நிச்சயமாக எவரேனும் அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி அறிந்து கொண்டால் எங்களுக்கும் பகிருங்கள். நன்றி.

   • ananth சொல்கிறார்:

    intha palavesam veru… Sanda Mundan pon ariya maalaiyai ah devar kitta irunthu pudungi kondathaal avnoda thalai arukka Brahma Sakthi amman ku thambi ah PalavesaKaran ah Eesan veylvi la pirakka vaipaar… avar than amman kovil la irukura palavesam/ palavesa Muthu/ Palavesakaran

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றிங்க. முடிந்த அளவில் தமிழிங்கிஸில் எழுதுவதை தவிருங்கள். படித்துப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது.

  • vineshkumar சொல்கிறார்:

   palavesam kathai enkita magudam la 4 hours song iruku

 9. muruga சொல்கிறார்:

  வணக்கமுடையீர்
  எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் ஆகும். எனது குலதெய்வம் ஸ்ரி ஏழானை கொண்ட அய்யனார். அய்யனார் விக்ரகத்திற்கு முன்பாக ஏழு யானை விக்ரகங்கள் இருக்கும். என்னிடம் உள்ள தகவல்கள் இவ்வளவே. கோவில் இருப்பிடம் பற்றி தகவல் தந்தால் நன்றியாயிருப்பேன்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தேடலாம் நண்பரே. உறவினர்களில் மூர்த்தோர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பொதுவாக அய்யனாருக்கு சொல்லப்படும் கதைதான் உங்கள் குலதெய்வத்திற்கும் இருக்கும். ஆனால் உடனிருக்கும் ஏழு யானைகளுக்கான கதையை அறிய முற்படுவோம்.

 10. V.மகேஷ் சொல்கிறார்:

  வண்ணார மாடசாமியின் கதை (வரலாறு) இப்பொது எனக்கு தெரியும். கனியான்(மகுடம்) பாட்டாக இருக்கிறது 6 மணி நேர பாட்டு. விரைவில் சுருக்கமாக பதிவிடுகிறென்…..

 11. k.masanamoorthy சொல்கிறார்:

  அருமை. மாசானமுத்து வை பற்றியும் ஆராயலாமே நன்றி

 12. Bhamini சொல்கிறார்:

  வணக்கம், அன்புடையீர் யாரேனும் வண்டி மலைச்சி அம்மன் கதை தெரிந்தால் கூறுங்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s