சொக்கனது தங்கமே சொக்கத் தங்கம் – மர்மதேசம் பாடல்கள் 2

ஞால முதல்வனின் காவல் நாயகம்
கால பைரவன் கழலடி பணிவார்க்கு
வாலனாம் பைரவன் வாரித் தருவது
குருநி நெல்லோ கோடிப் பொன்னோ
யாராறிவார் சொல் நெஞ்சே!

தருமம் தடுமாறும் அவனியில் நிறமாறும்
பருவப் பெண்டிர்தம் பழியும் பலவாகும்
புலியும் புல்லுண்ணும் பிணியும் மலிவாகும்
கலியின் போக்கதிலோ கடலும் கரையேறும்
வருவன் ஒருபாலன் வேதத்தின் விதிசாரன்
சிறுவன் இருப்பாலே தீர்ந்திடும் கலிபாரம்!

சொக்கனது தங்கமே சொக்கத் தங்கம்
வக்கனையாய் ஒளிருமதில் வருமோ பங்கம்
மக்கிவிடும் மற்றநிதி கருகும் குறுகும்
உக்கிரனின் பொன்னதுவோ என்றும் பெருகும்!

கருமவினை தீர்க்கும் அம்பலத்தின்
மருமந்தனை நோக்க வந்தோர்
தரும நெரிகாரா சண்டாளர் போலாவர்
எருமை நாயகத்தின் பாசம் பிடிசேர்வர்!

அண்டங் கருத்தநிலை அர்த்தசாமம் அது
கண்டங் கருத்த சிவ சக்திகாலம்
பிண்டங் கொடுத்த பிதர் அலங்கோலம் போக்க
உண்டங்கு சிவ ஆலிங்கனம்
கண்டாங்கு ஆடுமே பூதாளம் தேக
பாண்டம் கண்டிடிலோ அக்கணமே பிணம்!

கண்ணச் சக்கரமும் கந்தவேல் திருக்கரமும்
எண்ணச் சுகம் தரும் வண்ணராமன் விற்கரமும்
விண்ணகரில் முக்கரமாய் கூடியதே முக்
கண்ணன்வசம் திரிசூலம் ஆனதே
பெண்ணைப் பழிப்பதுஉம் பிணியை பார்ப்பதுமாம்
சின்ன தனத்திற்கு என்றும் தீயதே!

நெடுமுடி காணச்சென்ற பிரம்மனே
பிழை செய்து பெற்றான் சாபம்
இடும்பனி செய்யா சிலர் கொடும்பணி
செய்து சேர்க்கின்றனர் பாபம்
பாபத்தின் உச்சமே மரணம்!

அண்டம் ஆகாசம் பிண்டம் பிசாகம்
சர்வம் மகேசம் சித்தம் சாகசம்
சிகரம் ரகசியம் சீண்டுவார் மேல்
கொள்வோம் ஆவேசம்!

அண்டம் பகிரண்டம் அது பரமனது அங்கம்
கண்டனைய வேண்டி அவன் கொண்ட உருலிங்கம்
லிங்கமது லிங்கமது ஐம்பூத லிங்கம்
அதையிஞ்சும் நனியிஞ்சும் ஒரு மகரத லிங்கம்
கண்கொண்டு பார்ப்போர்க்கு காயம் கிறங்கும்
மண்ணில்அதை ததிப்பார்க்கோ மாயம் துலங்கும்!

தாலத்தில் சேதிவைத்து தாழ்பணிந்தார்க்கு
சூலக் கரத்தவன் நேயத்தில் நேர்நிற்பான்
ஓலைப்போக்கி நாயனின் சூலைபோக்கிய வாலனின்
மாய நோக்கினை ஞாலத்தில் யாராறிவார்
சொல் நெஞ்சே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s