அம்பலம் தாண்டார் அந்நாளே! – மர்மதேசம் பாடல்கள் 1

இயக்குனர் நாகாவின் மர்ம தேசம் தொடரில் வருகின்ற இந்திரா சௌந்திரராஜனின் பாடல் வரிகள் மேல் எனக்கு கொள்ளைப் ப்ரியம். ஒவ்வொரு நாளும் தொடர் முடிவின் போது வருகின்ற பாடல்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். மீதத்தினை வருகின்ற இடுகைகளில் இடுகிறேன்.

எனை அளக்க வருபவன்
தனை இழக்க வருபவன்
எனை பழிக்கும் எவ்வுயிரும்
வினைக் காத்தால் மண்ணாகும்
தன் பலம் காட்டுவார் – சீவனுடன்
அம்பலம் தாண்டார் அந்நாளே!

நவநாயகர் பிடிக்குள் நாளிவம் அடங்கலாம்
எமநாயகன் பிடிக்குள் எவ்வுயிரும் அடங்கலாம்
சிவ நாயகன் பதம் தொழும்
யுவநாயகன சித்தர்கள்!

காற்றில் கரையலாம் சேற்றில் மறையலாம்
கூற்றிவ் பைரவ நாமம் இருந்திடில்
ஊற்றி்ல் ஒடுங்கலாம் உற்றாரை ஒடுக்கலாம்
பேற்றில் பைரவன் பேரருள் இருந்தக்கால்!
அவன் போலவே எவர்ககும் அடங்காதார்
அடக்குவார் ஆவியை புடம் போடுவார்

உண்டென்பார்க்குண்டு
இல்லையென் பார்க்கில்லை
நஞ்சுண்டன் எனைவணங்க
கண்வேண்டா கரம் வேண்டா
நன்னெஞ்சு ஒன்ரே போதும் ஆகாதே
நஞ்சுள்ளம் ஒருபோதும்!

காற்றே ஆகாரம் கானகமே ஆதாரம்
ஊற்றான சக்தி வற்றியே போனாலும்
ஊசிமுனைக் கூர்மையும் உற்பாதம் செய்யாது
ஈக்கள் முதல் மாக்கள் வரை இடும்பணி செய்யுமே
ஊக்கமுடன் ஈசனடி தொழுஞ்ச்சித்தர்க் கென்றுமே!

அம்பலம் தனில் தன்பலம் காட்டுவோர்
ஆனந்த சாரமிதில் ஆச்சாரம் மீறுவோர்
இதமதில் ஈசனின் வைரியாய் மாறுவர்
ஈரெட்டு தினத்தில் எமனுடன் சேருவர்!

ஒப்பிலா பக்திவழி தப்பின்றி செல்வோர்க்கு
செப்பும் தங்கமாஉம் விடமும் அமிர்தமாஉம்
அப்பனாம் சித்தேசன் கமலட் மளவார்க்கு
செப்பும் பதமும் பொற்கழஞ்சும் குறையாதே!

நேயம்மிகுநெஞ்சில் மாயம்புகு்தக்கால்
காயம் கலங்கிடுமே நியாயம் வதைபடுமே
தாயும் தந்தையுமாய் ஆய் பயனருளும்
மாயன் மலரடிநில் சேயை கலக்குவனோ!

கால பைரவன் கடப்பா டுடையவன்
ஞால முதல்வனின் புகழ்பா டுபவன்
வாலனாம் அவனெதிர் மானிடர் தம்மை
காலனாய் வந்தே கவர்ந்து செல்பவன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s