தெருவுக்கு வந்த தெய்வங்கள்

நான் ஆன்மீகவாதி தான் என்றாலும், கடவுளின் பெயரில் நடக்கும் கூத்துகளை ரசிக்க முடியவில்லை.

சைதை சந்தை

நண்பனைக் காண சைதாப்பேட்டைக்கு சென்றிருந்தேன். அங்கு பனகல் மாளிகைக்கு அருகே, மஞ்சள் வண்ண கருணாநிதியின் வளைவு இருக்கிறது. அந்த சாலைக்கு ஜீன்ஸ் சாலை என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். சாலை அண்ணா சாலையின் ஒரு பகுதி போல பெரியதாக இருந்தாலும், ஒரு ஆட்டோ செல்லக் கூடிய அளவிற்கு மட்டுமே சாலை இருக்கிறது.

சிறு வியாபாரிகள், கடைகள் என ஒரு அடுக்கு ஆக்கிரமிப்பு. அடுத்து ஆட்டோ, கார் என நிறுத்தம் செய்து ஆக்கிரமிப்பு என சாலையே தெரியவில்லை. “உடன் வந்த நண்பனிடம் என்னடா இது இவ்வளவு நெரிசலாக இருக்கிறதே” என்றேன். இந்த சாலையில்தான் மார்க்கெட் இருக்கு, அப்புறம் இதோ ஹாஸ்பெட்டல் கூட, அதுதான் இந்தக் கூட்டம் என்றான்.அது அரசு மருத்துவமனை என்பதால் மிகப்பெரிய வரிசையில் மக்கள் பிணியை நீக்க காத்திருந்தார்கள்.

அடுத்த இரண்டு அடி எடுத்து வைத்த போது கண்களில் பட்டது “அரசு மகப்பேரு மருத்துவமனை” என்ற வாசகமும் அதன் முன்னால் வாகனங்களால் கைதியாக்கப்பட்டு கிடக்கின்ற அவசர ஊர்தியும். ஆத்திர அவசரத்திற்கு வெளியே எடுக்க முடியத படி ஆட்டோக்கள் நின்றிருந்தன. ஒரு ஆட்டோ மருத்துவமனை வாசலில் கேட்பாரற்று கிடந்தது.

ஜீன்ஸ் ரோடு

அந்த வீதியில் மருத்துவமனை வரை மூன்று கோவில்கள் இருக்கின்றன. சாலை போக்குவரத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொஞ்சமும் மனிதபிமானம் இல்லாமல், கோவிலை கட்டியவர்கள் யாரோ!. ஆக்கிரமிப்புகள் நடத்தி, ஆண்டவனுக்கு ஆலையம் அமைக்கவேண்டிய கட்டாயம் சைதாப்பேட்டையில் கண்டிப்பாக இல்லை. தெருவுக்கு தெரு பெரிய பெரிய கோவில்களே இருக்கின்றன. கடும்பாடி அம்மன், காரணிஸ்வரர், பெருமாள் கோவில் என ஏகப்பட்ட கோவில்கள் இருக்கின்றன.

அந்த தெருக் கோவில்களில் ஒரு பிள்ளையார்க் கோவிலில் ஐயர் ஒருவர் ரெடியாக அர்ச்சனை தட்டுடன் நின்றிருந்தார். “வேலைக்கு போரவங்க இப்படியே நின்னு சாமி கும்பிட்டுட்டுப் போவாங்க.அதனால தினமும் ஐயர் வந்துடுவார்” எனச் சொன்னான். மற்ற இரண்டு கோவில்களிலும் சாமிகள் இருந்தன. உண்டியல் இருந்தது. ஆனால் பராமரிப்பு இல்லை. இருந்தும் இடத்தினை அடைத்துக் கொண்டு இருந்தன.

ஐயர் நின்றிருந்த கோவிலில் அழகான பராமரிப்பு, பத்து நாட்களுக்கு முன் அடிக்கப்பட்டது போல புதிய பெயின்ட். ஐயர் தங்கச்சங்கிலி, புத்தாடை என வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்தடி நின்றிருந்தார். மக்களுக்கு அறிவு மழுங்கிப் போனாத என தெரியவில்லை. சாலையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கோவிலுக்குப் போய் இந்தளவிற்கு செலவு செய்திருக்கின்றார்களே.

என்றேனும் ஒரு நாள் கோவில் அதிகாரிகளால் அகற்றப்படும் போது எதிர்ப்பு தெரிவிப்பதும், கோவில்களுக்கு வயதினை சொல்லி பழமையை நிறுபிப்பதுமே வேலையாக இருக்கிறது. தெய்வங்களுக்கு நிலம் வாங்கி கோவில் அமைக்க தெரியாதவர்கள், ஐயருக்கும், தெருக் கோவிலுக்கும் வாரி இறைக்கும் பணத்தினால் யாருடைய பசியையாவது போக்கியிருக்கலாம்.

சென்னையின் சில கோவில்கள் மாநகராட்சியால் அகற்றப் பட்ட பின், காணொளி காட்சிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s