மூட நம்பிக்கைக்கு எதிராய் சாட்டையை எடுத்த முதல்வரே எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கிறது என மேடைக்கு மேடை பேசுகின்ற தலைவர்களெல்லாம் மஞ்சள் துண்டுடனோ, யாகம் செய்தோ கிடக்கின்ற காலக் கட்டம் இது. ஆனால் கடவுளை முழுமையாக நம்பினாலும் மூடநம்பிக்கையை முற்றிலும் எதிர்த்த முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றியே இந்த இடுகை.

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ‘முதலாளி’ என்று அழைத்த சிலரில் சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலு மணியும் ஒருவர்.

இவர்களில் தேவரும் வேலுமணியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் கடவுளாகவே கருதி வந்தார்கள்.

ஜி.என். வேலுமணி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டும் நினைக்காமல், நட்பு பாராட்டி, தன் குடும்பத் தலைவராகவே பாவித்து வந்தார். அதனால்தான் வேலுமணி ஒரு வியாபாரம் தொடங்க நினைத்தாலும் சரி; வீட்டில் ஒரு விசேஷம் நடத்த நினைத்தாலும் சரி-மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் கலந்தாலோசிந்துத்தான் முடிவெடுப்பார்.

‘கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.

வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!”

“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கிச தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.

“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

“கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத -முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே இந்த மகான்! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்றுமனம் உருகி, பிதற்றி, பேதிலித்து அப்படியே ஓடோடிப் போய்க் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

மார்ச் மாதம் ஏழாம் தேதி,ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. த்ந்தை பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி என்று அரசியல் தலைவர்கள் ஒருபக்கமும் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, அசோகன் நம்பியார், நாகேஷ், சரோஜாதேவி என்று திரைப்பட நட்சத்திரங்கள் ஒருபுறமும் திரளாக மின்னிக் கொண்டிருந்தார்கள்!

காரில் வரும் பொழுதுதான், நின்று போகவிருந்த தனதுதிருமணம், மக்கள் திலகத்தாலதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற விவரம் தோழிகள் மூலம் மணப்பெண் சாந்திக்குச்சொல்லப்படுகிறது.

அவ்வளவுதான், மணமேடைக்குச்செல்ல வேண்டிய மணப்பெண் சாந்தி, காரைவிட்டு இறங்கியவுடன் குழுமி இருந்த திரைப்பட நட்சந்திர்ங்ஙளையெல்லாம் விலக்கிக்கொண்டு, சந்திர பிம்பமாய் மேடையோரம் நின்று ஒளிவீசிக்கொண்டிருந்த பொன்மனச் செம்மலை நோக்கி ஓடி வருகிறார். இதுவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தனக்கு அப்பாவா பார்க்கிறோமே என்கிற பரவசத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

இந்தத் திருமணத்திற்குத் தேதி குறித்ததிலிருந்து, மணப்பெண் திருமண உறுதிமொழி எடுக்கும்பொழுது அவர் உயரத்திற்கு மைக்கைச் சரிசெய்து கொடுத்தது வரை; உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், வி.ஐ.பி.க்களுக்கு காலை சோறு போட்டால் சாப்பிடமாட்டார்கள்; அப்படியே இலையில் மூடி வைத்துப்போய் விடுவார்கள்; எனவே அரவ்களுக்கு ஸ்வீட், காரம் கொடுத்தால் போதும்; சாதாரண மக்களுக்உக மட்டும் வயிறார சோறு போடலாம் என்று திட்டம் நிறைவேற்றி, அவர்களுக்கு தானே பரிமாறியதிலிருந்து அனைதையும் மணப் பெண்ணின் தந்தையின் ஸ்தானத்திலிருந்து ஓடி ஓடிச்செய்தார் மக்கள்திலகம்.

மேலும் மக்கள் திலகத்தி்ன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படித்து ரசிக்க இங்கு சொடுக்குங்கள்.

16 comments on “மூட நம்பிக்கைக்கு எதிராய் சாட்டையை எடுத்த முதல்வரே எம்.ஜி.ஆர்

 1. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  சகா உணர்வு பூர்வமான பதிவு.

  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,
  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

  what a lovely words…

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பல்வேறு பாடல் வரிகளும், எம்.ஜி.ஆருக்கு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கின்றன.

   எங்கள் ஊரில் எம்.ஜி.ஆரின் பாடல்களை ரசித்துப் பாடும் ஒரு ஆதரவற்றவர் இருந்தார். அவர் இறக்கும் வரை உணவிடுவதற்கு பல்வேறு நபர்கள் உதவிக்கொண்டே இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், அந்த பாடல் வரிகளும், அந்த வரிகளுக்கு வாயசத்த எம்.ஜி.ஆருமே!.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

 2. jaisankarj சொல்கிறார்:

  அருமையான எடுத்துக்காட்டு

 3. Vijay சொல்கிறார்:

  மறக்க முடியாத மாமனிதன்
  இறந்தும் இறவாப்புகளுடையவர்
  அவர்க்கு இம்மண்ணில் இணை யார் ?

  வாழ்த்துக்கள் நண்பா,
  கண்டிப்பாக நீவீர் மென்மேலும் வளருவீர்

  விஜய்

 4. tmasabari சொல்கிறார்:

  நல்ல பகிர்வு

  நன்றி

 5. கோமதிநாயகம் சொல்கிறார்:

  மிகவும் அருமை உடன்பிறப்பே!.

  பலரும் ஏமாற்றி திரியும் இந்த வேளையில் மிகச்சரியான பதிவு!,…

  நன்றி

 6. purushoth சொல்கிறார்:

  M.G.R pathi nan pesara alavuku periya payan ila…avara pathi neraiya padichi irukaen…avaroda padam pathu irukaen…avoroda seyalpadugal yellamae super..avara yaralayum maraka mudiyathu…..he is the great man….

  thank you..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s