மதராசப்பட்டினம் முதல் சென்னை வரை புகைப்படங்கள்

இலங்கையில் இப்போது முழு வீச்சில் நடந்து கொண்டிருப்பது என்ன தெரியுமா. தமிழர்களின் அடையாளங்களை அழிப்பது. தெருவின் பெயர்கள் முதற்கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க எல்லா கட்டிடங்கள், இடங்கள் என அனைத்தையும் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் அவர்களின் இடங்களை கைப்பற்றி ஆண்டது பற்றி இளம் தலைமுறைக்கு அறியாத வண்ணம் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஆனால் 200 வருடங்கள் நம்மை அடிமையாக நடத்திய ஆங்கிலேயர்களின் எச்சங்களையே சென்னையின் சின்னமாக காட்டிக் கொண்டிருக்கிறோம் நாம். மதராசப்பட்டினம் சென்னையாக பெயர் மாறியதை தவிற பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மவுன்ட் ரோடை அண்ணா சாலையாக அறிவித்தும் கூட இன்னும் பழைய பெயர் தான் நிலைத்திருக்கிறது. தமிழ் செழிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் இருக்கும் கடற்கரைக்கு மெரினா என்று பெயரிட்டிருக்கின்றார்கள் ஆங்கிலேயர்கள். நாமும் அதை ஏற்றுக் கொண்டு இன்னும் அலைந்து கொண்டிருக்கிறோம்.

அழகிய தமிழ்ப் பெயர்கள் விளங்கிய ஊர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது. எக்மோர், சென்ரல், ட்ரிபிலிக்கேன் என ஓங்கி ஒலிக்கின்றன ஆங்கிலப் பெயர்கள். விளம்பரப் பலகைகளை தமிழில் மாற்றச் சொல்லி மேயர் சொன்னது, இன்னும் தமிழை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆங்கி்லத்தில் உள்ள பெயர்களை அப்படியே தமிழில் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சேகர் எம்போரியம், சரவணா ஸ்டோர்ஸ், குமரன் ஜூவலர்ஸ் என ஸ்வீட்ஸ், எம்போரியம், மெக்கானிக்கல் ஷாப் என எல்லாவற்றையும் தமிழாகவே மக்கள் கருதுகின்றார்கள். மக்களோடு மக்களலாக கலந்து மாற்று மொழிகளை எப்போது நாம் கலையப்போகிறோம்!.

சென்ரல் ரயி்ல்வே ஸ்டேசன்

சென்ரல் ரயி்ல்வே ஸ்டேசன்

சென்ரல் ரயில் நிலையம்

மவுன்ட் ரோடு

அண்ணா சாலை(மவுன்ட் ரோடு)

மெரினா பீச்

மெரினா பீச்

மெரினா கடற்கரை

பாரிஸ் கார்னர்

பாரிஸ் கார்னர்

பெயர்களில் கூட நம்மால் மாற்றம் கொண்டுவர இயலவில்லை எனும் போது கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது. அழகிய தமிழை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!.

6 comments on “மதராசப்பட்டினம் முதல் சென்னை வரை புகைப்படங்கள்

 1. premcs23 சொல்கிறார்:

  மவுன்ட் ரோட்டின் தற்போதைய படமும் பழைய படமும் சூப்பர் …

 2. krishnakumar சொல்கிறார்:

  i like this comment.i am sorry i have mentioned in english

 3. purushoth சொல்கிறார்:

  jagadeesh sir na ipa pune la irukaen.. inga irukira oru bus name board kuda English la irukathu yelamae hindi la tha irukum. aana nama tamilnadu mattum tha tamiz word ezhutha sona ipadi English word apadiyae tamiz la yezhithi vachi irupanga…intha msg kandipa namma CM pakanum…

  Thnak you…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s