வண்ணமயமாய் குளியல் போடலாம்

இரவு நிலவு வெளிச்சத்தில் குளிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கின்றதா. கிராமமாக இருந்தால் என்றாவது ஒரு நாள் குளித்திருப்பீர்கள். நகரத்தில் இருந்தால் மொட்டை மாடி அமைந்த வீடுகளில் மட்டும் வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது. நிலவு வெளிச்சத்தில் குளித்தவர்களுக்கு அதில் இருக்கும் இன்பம் தெரியும்.

இந்த வாய்ப்பினை எல்லோருக்கும் வழங்க வந்திருக்கிறது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. கண்டுபிடித்திருக்கின்றவர்கள் சைனாகாரர்கள். மிகக் குறைவான விலையில் பொருட்களை அள்ளித் தருகின்றவர்கள் என்பதால் ஏற்கனவே இந்தியா தினறிப் போயிருக்கிறது.

போலி மருந்துகள், விஷமுள்ள பால் பொருட்கள் என ஏற்கனவே இந்தியா விழித்துக் கொண்டுவிட்டது. அமெரிக்காவில் விற்கப்படட் சில சீன பொம்மைகளை திருப்பி அனுப்பிவிட்டது அமெரிக்கா என்ற செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். இவைகள் எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு படையெடுக்க ஆரமித்திருக்கின்றன சீனப் படைப்புகள்.

வெள்ளை, சிகப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, நீளம், இளஞ் சிவப்பு என ஏழு நிறங்களைப் பொருத்திய பூமழை தூவும் நீரில் குளிக்க வாய்ப்பளிக்கிறது இந்த படைப்பு. பதினைந்து டாலர் அதாவது ஏறத்தால 750 ரூபாய் முதல் கிடைக்கின்றது. எல்.ஈ.டி(Light-emitting diode) என்றழைக்கப்படும் சிறிய மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்கின்றார்கள். மின்சாரத்தால் இயங்குபவை. இதற்கென பேட்ரீக்கள் எதுவும் தேவையில்லையாம்.

பயன்படுத்த எளிமையானது. பரமறிப்பு செலவும் இல்லை என்கின்றார்கள்.

காணொளி –

எல்.ஈ.டி பல்புகளை வைத்து புதிய தயாரிப்புகளையும் களம் இறங்கியிருக்கின்றார்கள். அவைகளின் பட்டியல் இங்கே!,…

2 comments on “வண்ணமயமாய் குளியல் போடலாம்

  1. kalpana சொல்கிறார்:

    சீனப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா தடுக்க முன்வருமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s