என்னை விடாத கருப்பு – மர்மதேசம்


நேற்று விடியற்காலை நான்கு மணிக்கு என்னைப் பிடித்திருந்த கருப்பு விட்டது. எதற்ச்சையாக யூடிபில் “விடாது கருப்பு” நாடகம் தென்பட, என் பால்ய வயதில் பார்த்த சில காட்சிகள் மட்டும் ஞாபகம் வந்தன. பள்ளி மதிய உணவு இடைவெளியில் நாள் தவறாமல் பார்த்த நாடகம் என்பதால் கொஞ்சம் அதிகமான ஈர்ப்பு.

ஒன்றுமறியாத வயதில் பார்த்த போது எப்படி இருந்ததோ, அதைப் போலவே இருந்தது இப்போதும். மொத்தமாக 82 எபிசோடுகள். முழு மூச்சுடன் பார்த்து முடித்ததும் தான் நிஜ உலகமே தெரிந்தது.

கருப்பு, வெள்ளைக்குதிரை, காசுதோப்பு பங்களா, ராசு, பேய்க் கிளவி என கதாபாத்திரங்களோடு ஒன்றி விட்டேன். அலுவல் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களும் கருப்புக்கே காவு கொடுத்து விட்டதால், வலைப்பூவில் எழுத முடியவில்லை.

இந்திரா சௌந்திராஜனின் பல நாவல்களை படித்திருக்கிறேன், பாசான லிங்கம், கன்னிமார்கள் ஏழுபேர், சிவ மயம் என பெரிய பட்டியலே உண்டு. ஒவ்வொரு நாவலிலும் குறைந்தது ஐந்து புது விசயங்களையாவது தெரிந்து கொள்வேன். இந்த நாடகத்தில் மிக அதிமான விசயங்கள் அறிய முடிந்தது.

ஒருவரிக்கதை –
ஒரு ஊரில் நடக்கும் அதர்மங்களை அழித்து, தர்மங்களை நிலை நாட்டும் கருப்புசாமி மனிதனா கடவுளா என்பதே கதை!.

விடுகதை –

கதைப்படி ஊர்சொத்தையே ஏமாற்றி மறைத்து வைத்து விடுகின்றாள் பேச்சிகிளவி. அந்த இடத்தினை கண்டறிய இரண்டு விடுகதைகளை எழுதி வைத்திருக்கின்றாள்.

தமிழில் ஒருபொருட் பன்மொழி, பலபொருள் ஒருமொழி என்ற இயல்பு உண்டு. ஒரே பொருளைத் தரக்கூடிய பல வார்த்தைகள்.( எடுத்துக்காட்டாக ஆத்தா, அம்மா, அன்னை, தாய் என சொற்கள் ஒரே பொருள் தருவன), இடங்களுக்கு ஏற்ப பல பொருளை தருகின்ற ஒரே வார்த்தை.(எடு்த்துக்காட்டாக மாலை என்ற சொல் மலர் மாலையையும் குறிக்கும், அந்திமாலையும் குறிக்கும்). இதை வைத்துக் கொண்டு விடுகதை புனைந்த திறன் மிக அருமை.

விடுகதை 1 –

பத்திரம் பத்திரம் வைரவனிடம் பத்திரம்.

விடை –
வைரவன் என்பது அந்தக் கதையில் கிளவியின் கணவன் பெயர். அதே போல அந்த ஊர் தெய்வங்களில் வைரவனும் ஒருவர், வைரவனை வழிபட உலக்கையை அடையாளமாக வைத்திருக்கின்றார்கள். இதில் பத்திரம் என்ற சொல்லுக்கும் ஜாக்கிரதை, வீட்டுப்பத்திரம் என இரு பொருள் வருகிறது. முடிவாக பத்திரங்கள் எல்லாம் உலக்கையில் பத்திரமாக இருக்கிறது என்பதே விடை.

விடுகதை 2 –

ஊன்மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு!
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து!

என்ற விடுகதை ஊருக்கே தெரிந்திருந்தும், இதுதான் விடை இதுதான் விடை என மூன்று விடைகள் கிடைப்பதும் அருமை!.

விடைகள் –
விடை 1 –
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு!
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து!
உடலுறவு. முதலில் இந்த விடையை ஏற்றுக்கொண்டாலும், பின்னர் அதை நிராகரித்து விடுவதாக கதை வருகிறது.

விடை 2 –
ஊன்மெய்க்கு பிரதானம்(ஆதாரமான முதல் எழுத்து)- ஊ
மைதூனத்தின் விதானம்(ஆதாரமான முதல் எழுத்து)-மை
ஆக,. ஊமை

விடை 3 –
ஊன்மெய்க்கு பிரதானம்(உடலுக்கு முக்கியமான ஆதாரம்) – தலை
மைதூனத்தின் விதானம்- தலுவல் அல்லது அனைத்தல்
சேர்த்தால்,. தலையனை

விடை 4 –
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு!
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து!

ஊமையும், தலையனையும் இரண்டு விடைகள். இரண்டையும் சேர்த்தால் ஊமைத்தலையனை. தொடரில் ஊமையன் ஒருவன் கல்லையே தலையனையாக வைத்து தூங்குகிறான். அதை ஊமைத்தலையனை என்றே ஊர் அழைக்கின்றது.

மிகவும் வியப்பாக இருந்தது. சொற்களை கையாளுவதில் நம்முன்னோர்களின் திறன் எப்படி இருந்து என்பதற்கு சாட்சி போல அமைந்திருந்தது.

விடாது கருப்பு தொடர்கதையை கண்டு ரசிக்க இங்கு சொடுக்குங்கள்!

8 comments on “என்னை விடாத கருப்பு – மர்மதேசம்

 1. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  விளக்கமான இந்த பதிவுக்கு நன்றி சகா

 2. MSk சொல்கிறார்:

  //பள்ளி மதிய உணவு இடைவெளியில் நாள் தவறாமல் பார்த்த நாடகம்//
  இந்த நாடகம் சன் டிவியில் ஒவ்வொரு புதன் கிழமை இரவு எட்டு மணிக்கு அல்லவா ஒளிபரப்பாகியது !!!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   ராஜ் தொலைக்காட்சியில் தான் ஒளிப்பரப்பானது. ஒருவேளை சன் தொலைக்காட்சி அதன்பிறகு ஒளிப்பரப்பியிருக்கலாம். மர்ம தேசத்தில் இது இரண்டாவது தொடர் என நினைக்கின்றேன். மதிய உணவை உண்டு கொண்டு பார்த்ததாகவே ஞாபகம்.

   எனி்னும், என் பதிவை இந்தளவிற்கு ஆய்வு செய்யும் நண்பர்கள் கிடைத்திருப்பது வியப்பாகதான் இருக்கிறது.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

 3. seasonsali சொல்கிறார்:

  உங்களுடைய சகோதரன் வலைப்பூவிற்கு வருகை தந்து விட்டு அருமையான கட்டுரைதனைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்
  நண்பர் ஜெகதீஸ்வரன்

 4. -யாக்ஞவல்கியன், மேட்டூர் அணை, சொல்கிறார்:

  இந்த தொடர் முதன் முதலில் சன் டி வியில் ஒளிபரப்பாகி சக்கைபோடு போட்டதற்கு பின் தான் ராஜ்டிவியில் ஒளிபரப்பானது அப்போதும் ஒரு போடு போட்டிருக்கிறது என்பதை ஜெகதீஸ்வரன் பதிவிலிருந்து தெரிகிறது,
  -யாக்ஞவல்கியன், மேட்டூர் அணை,

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பரே. மர்மதேசத்தின் விடாத கருப்பு தொடர் மதிய வேளையில் ஒளிப்பரப்பானது. என்னுடைய பள்ளிப்பருவத்தில் அந்த நேரம் மதிய இடைவேளை என்பதால் கண்டு களிக்க உகந்ததாக அமைந்துவிட்டது. மற்றபடி பலருக்கும் இந்நேரம் உகந்திருக்குமா என்று தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s