ஷாப்பிங் மால்களும் ஹோட்டல்களும் தமிழகத்திற்கு வைக்கும் ஆப்பு

மின்தடை முதலிடம் கிராமங்களுக்கே-

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்று முதல், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் 2 மணி நேர மின் தடையை மின் வாரியம் அமல்படுத்தியது. பகல் மற்றும் இரவு நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் திடீர், திடீரென கூடுதலாக ஒன்று முதல் இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

கிராமங்களில் விவசாயத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் ஒரே பீடரில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தமின்சாரத்தை இரண்டு மணி நேரம் தடை செய்தால், கூடுதல் மின்சாரம் மிச்சப்படுத்த முடியும் என்பதால், தற்போது நகரங்களை விட கிராமங்களில் கூடுதல் நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் மாதொமொரு முறை பராமரிப்பு என்ற பெயரில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்படுகிறது.

மின்சாரத் தேவை –

ஜூன் 2006 கணக்குப்படி, நமது மின்சாரத் தேவை 8,500 மெகாவாட். ஆனால், நமது மாநிலம் உற்பத்திசெய்வது 10,098 மெகாவாட் மின்சாரம். அதாவது நமது தேவையைவிட அதிகமாகவே நாம் இப்போது மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகிறோம். 2006 என்பது நான்கு வருடம் பழைய கணக்கெடுப்பு என்றாலும், நமது மாநிலத்தின் மின்சாரத் தேவை ஆண்டுதோறும் சுமார் 10 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துவருகிறது.

வரும் காலத்தில் –

வீட்டுக்கு வீடு இலவசமாய் கொடுக்கப்படும் தொலைக்காட்சிப் பெட்டியினால் பரவலான பயன்பாடு நிச்சயமாகிறது. இதற்கு தேவையான மின்சாரம் கனிசமானது என்றாலும், தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றால் இது இன்னும் கொஞ்சம் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும்.

பல்பே காரணம் –

இந்திய அளவில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் சுமார் இருபது சதவீதம், மின்சார விளக்கிற்கே செலவாகிவிடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மிச்சப்படுத்துவதற்கு பல்புகளைத் தடைசெய்துவிட்டு ‘காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகளை (compact fluorescent lights – CFL) பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வகை விளக்குகள் தற்போதுள்ள பல்புகளைவிட அதிக விலை கொண்டவை. என்றாலும் அவை மின்விளக்குகளைக் காட்டிலும் எண்பது சதவீதம் குறைவான மின்சாரத்தில் எரிவதோடு நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆறரை கோடி மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக கிரீன்பீஸ் கூறுகிறது.

ஷாப்பிங் மால்களும் ஹோட்டல்களும் –

இரவுகளைப் பகலாக்க நாமெல்லாம் மின்சார மின்விளக்குகளை உபயோகிப்போம். ஆனால் காலையிலே மின்விளக்குகளை தங்களின் அலங்காரத்திற்கும், அதிக பட்ச கவன ஈர்ப்புக்கும் ஷாப்பிங் மால்களும் ஹோட்டல்களும் போடுகின்றன. நாள் முழுவதும் (குளிர்காலமாக, மழைக்காலமாக இருப்பினும்) குலிர் சாதனத்தினைப் பயன்படுத்தாமல் இருப்பதி்ல்லை.

மிக சமீபத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து தமிழக மாணவர்களை சேர்ப்பதற்காக ஒரு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அலங்கார விளக்குகள்தான் மிக அதிகமாக இருந்தன. அந்த அறைக்கு தகுந்த வெளிச்சம் அளிக்க நான்கு விளக்குகளே போதுமானது. ஆனால் அங்கு இருந்த விளக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா. முப்பது.

அடிப்படைத் தேவைகளை நிறைவுச்செய்யும் விவசாயத்திற்கு மின்சாரம் தராமல், இப்படி ஆடம்பரத்தினை மட்டுமே மூச்சாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் ஹோட்டல்ளுக்கும் அரசு கரிசம் காட்டிக்கொண்டு இருக்கிறது. நம் மாணவர்கள் இருளில் புத்தகங்களை தடவிக்கொண்டிருக்க யாருமில்லாத இடங்கள் வெளிச்சமாக இருக்கின்றன.

இதைச் சரியா என முடிவு செய்து, சீர்ப்படுத்தப் போவது நீங்களாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

12 comments on “ஷாப்பிங் மால்களும் ஹோட்டல்களும் தமிழகத்திற்கு வைக்கும் ஆப்பு

 1. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு சகா

  நன்றி!

 2. விபா சொல்கிறார்:

  அரசை பொறுத்தவரை, மாநகரத்தில் வசிப்பவர்கள் மட்டும் தான் மனிதர்கள்! மற்றவரெல்லாம் மிருகங்கள் போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கேட்டால் மழை பெய்ய வில்லை என்ற பதில் வேறு. மழையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதாக என் அறிவிற்கு தெரிந்தவரை இல்லை.

  Non-conventional energy sources (தமிழில் பொருள் தெரியவில்லை மன்னிக்கவும்) பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கு அரசு அளிக்கும் மானியம் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசும் இவ்வகை மின்சார உற்பத்தியில் அதிக முதலீடு செய்து ஊக்கப்படுத்தவும் வேண்டும். செய்வார்களா?

  இன்னும் சொல்லலாம், இன்னும் 5 நிமிடத்தில் இங்கு மின் இணைப்பு துண்டிக்கப்படப்போகிறது. ஆகவே, இத்துடன் இன்று நிறுத்திக்கொள்கிறேன்.

  என்று தணியும் இந்த மின் பற்றாக்குறை?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சென்னைக்கு வந்த புதியதி்ல் என் நண்பர்கள் இதைப் பற்றி குறைப்பட்டுக் கொண்டார்கள். 24 மணி நேரமும் வீணாக எரியும் விளக்குகளை அணைத்துவிட்டாலே, எல்லா கிராமங்களுக்கும் அருமையான மின்சாரம் தடையின்றி கிடைத்துவிடும்.

   அரசுக்கு நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பழக்கமே இல்லை நண்பரே!. எல்லா அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாதம் தோறும் மாணவர்களுக்கு வசதி செய்து தர எஸ்.எஸ்.ஏ எனப்படும் அமைப்பு ரூபாய் 500 ஐ தருகிறது. ஆனால் அந்தப்பணத்தினை தலைமையாசிரியரிடமும், ஆசிரியரிடமும் ஒப்படைக்காமல் கிராம தலைவரிடம் ஒப்படைத்து விடுகிறது. அவர்களும் பொய்க் கணக்கினை மாதம் தோறும் காட்டிவிடுகின்றார்கள். தலைமையாசிரியரின் மகன் என்பதால் இந்தச் செய்தி எனக்கு தெரியும். பொது மக்களுக்கு எஸ்.எஸ். ஏ ப் பற்றி தெரியாது. இதற்கு அரசின் விளம்பரமின்மையே காரணம்.

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!.

   • விபா சொல்கிறார்:

    சகோ! எஸ்.எஸ்.ஏ-வைப்பற்றி ஒரு விரிவான விளக்கத்தை உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவு இடலாமே? பலருக்கு நன்மை பயக்கும் ஆதலால் இவ்வேண்டுகோள்.

   • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே!

 3. செவத்தப்பா சொல்கிறார்:

  எல்லாவற்றையும் இலவசமா கொடுக்கும் அரசாங்கத்திற்கு, CFL விளக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்து, மின்சாரத்தட்டுப்பாட்டை குறைக்க வழி ஏற்படுத்த இயலாதா என்ன? சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்!

  உபயோகமான தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றி ஜெகதீஸ்வரன்!

 4. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

  உண்மைதான் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் வேலையில்,அரசாங்கம் கர்நாடகத்தில் காவிரியை வைத்து அரசியல் செய்வதுபோல்,நம்மூரிலும் இது பாஷன் ஆகிவிட்டது,நான் படிக்கும் காலங்களில்,எண்ணெயில் எரியும் விளக்கை வைத்தே படித்தேன்.தற்போது என்னாலோ என் மாணவி குழந்தைகலாலோ அவ்வாறு இருக்க முடியுமா ?

  இந்த மறுமொழி எழுதிக்கொண்டிருக்கும்போதே பவர் கட் மறுபடி எழுத வேண்டியதாகிவிட்டது

  நன்றி அருமையான பதிவு !! மகா மந்திரம் தரவிறக்கம் செய்து கேட்டேன்

  அருமை.

  நான் சில கவிதைகள் கட்டுரைகள் வைத்திருக்கிறேன் .அனுப்பினால் வெளியுடுவீர்களா ?

  அனைத்தும் என் படைப்புகள்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்களிடம் படைப்புகள் இருக்கும் போது இன்னும் தயக்கம் ஏன். உங்களுக்கென தனி தளம் அமையுங்கள் நண்பரே!. அது உங்களுக்கென தனி அங்கிகாரத்தினை தரும். இலவசம் என்பதால் பொருளாதார சிக்கல்கள் இல்லை. விண்மணி தளம் இதற்கு ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதற்கு இங்கு சொடுக்குங்கள். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

   உங்கள் வலைப்பூ வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

   நன்றி நண்பரே!@

 5. mohamed சொல்கிறார்:

  ya ur correct

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s