ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்


இந்த சகோதரன் வலைப்பூவில் எல்லா காலங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்று விடும் இடுகை ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள். அங்கு வருகின்றவர்களில் பெரும்பாலானோருக்கு சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? என்ற கேள்வியே மேலோங்கி ஒலிக்கிறது. சில அடிப்படையான பாலியல் கேள்விகளுக்கு இந்த இடுகை பதில் சொல்லும் என நம்புகிறேன்.

கீழிருப்பவைகளை நீங்கள் நம்பலாம். இது போன்ற அறிவியல் சம்மந்தப்பட்டவைகளில் என்னுடைய எண்ணங்களை திணிப்பதில்லை. இது தினகரன் நாளிதலில் மருத்துவர்கள் எழுதிய சில பாலியல் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? –

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

குழந்தை பிறக்காமல் இருக்க ஆணும் காரணமா? –

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? –

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.

குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? –

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? –
* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

பிற்சேர்க்கை –
பேரீச்சை(நன்றி நண்பர் விஜய்.)

குறிப்பு –

இந்த இடுகையில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனே மறுமொழியில் குறிப்பிடுங்கள். தவறு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்தக் கட்டுரைகளில் நாளிதலில் வெளியாகி, பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ள ஒன்று!.

தொடர்புடைய இடுகைகள் –
ஆண்குறியைப் பற்றிய மூடநம்பிக்கைகள்
ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
ஆண்கள் ஸ்பெசல் – ஆண்குறி அளவு + கருத்தடை முறை
காம வக்கிரம் – மருத்துவ பார்வை
பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – ஒரு முழுப்பார்வை
காமவியலில் இந்தியாவின் பங்கு

53 comments on “ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்

 1. Vijay சொல்கிறார்:

  பேரீச்சம்பழத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பா

  விஜய்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   மருத்துவர் எழுதியதை அப்படியே தந்துவிட்டேன். அதனால் எதையுமே இணைக்கவில்லை. இப்போது பேரீச்சையையும் இணைத்துவிடுகிறேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மி்க்க நன்றி நண்பரே!

 2. raj சொல்கிறார்:

  supper tip sir

 3. Raj சொல்கிறார்:

  Really very nice & useful. Thank You so much.

 4. kalpana சொல்கிறார்:

  ஆண்களுக்காக மட்டுமே எழுதுகின்றீர்களே!,

  பெண்கள் மீதும் கொஞ்சம் கருணைக் காட்டுங்கள் தோழரே

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பெண்களுக்கு இணையத்தில் வந்து சந்தேகம் தீர்க்க வேண்டிய அவசயமில்லை. பெற்றோர்களோ, தோழிகளோ உதவுவார்கள். இந்த விசயத்தில் பாவப்பட்டவர்கள் ஆண்கள் தான்.

 5. raja சொல்கிறார்:

  yenaku oru doubt what is premature ejaculation? define? and how to control it?

  please..

 6. kannan சொல்கிறார்:

  thank you sir. you are my best doctor to me. thank you so much.

 7. raja.k சொல்கிறார்:

  thanks saka

 8. Ganesh.K.T.P சொல்கிறார்:

  விந்து முந்துதல் பற்றி தமிழில் ஏதேனும் பதிவுகள் இருக்கிறாதா. இல்லையென்றால் எழுதிவிடுங்களேன். ப்ளீஸ்

 9. kaarththi trichy சொல்கிறார்:

  நீங்கள் வெளியிடும் அனைத்து பதிவும் இணையத்தில் திரட்டபட்டதுதான்,சொந்த கற்பனைவளம் இல்லை என்கிறான் என் நண்பன் உண்மையா?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இங்கிருப்பது திரட்டப்பட்டது தான், உங்கள் நண்பர் சொன்னது உண்மை. கதைகளையும், கவிதைகளையும் சேர்க்கவில்லை என நம்புகிறேன். அடுத்து அனுபவம் பறறி எழுதுவது சொந்தமாகதான் இருக்கும்,. நான் அதிகம் அனுபவங்களை எழுதுவதில்லை.

   http://jackpoem.blogspot.com/ க்கு சென்று பாருங்கள். அங்குகூட கற்பனை வளத்திற்கான அங்காரம் கிடைக்காது. இருந்தாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதி தள்ளியிருக்கிறேன்.

 10. Nagoor N சொல்கிறார்:

  onion is super

 11. Nagoor N சொல்கிறார்:

  add onion

 12. LOGESH சொல்கிறார்:

  did any medicine is there to increase the pennis size throught out life long

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நிறைய மருந்துகளின் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் நம்பகத்தன்மை, செயல்பாடுகள் குறித்து மருத்துவரை அனுகுவதே சிறந்தது.

 13. renu சொல்கிறார்:

  thanks for your advice

 14. vigi சொல்கிறார்:

  supper boos

 15. ramanuja சொல்கிறார்:

  Very good information. Nowadays many youth lack good and healthy ejaculation. Drinking, frequent masturbation, smoking, chewing tobacco and immoral (aged) intercourse before marriage, are some of the causes for losing their virginity. I wish your message should reach the concerned for their fertile future. Congrats!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பரே!. மற்ற விஷயங்களை விட மக்களை அதிகம் சேர்ந்தது இந்த விஷயம் என்பது மேலும் பெருமைக்குறியது. அறியாததை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றார்கள்.

 16. tony சொல்கிறார்:

  ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் :

  Cholestrol and Duabetics reduces blood flow in the body. When blood flows freely to the penis, the rigidity will be greater and you will feel confident. regular excercise (walking for ex) will keep your life as well as sexual life active.

  Also for woman, less body fat will help them get more feeling from the touch and kisses of men. more feelings will translate to better sex.

  Also you will get better sex when the stomach is atlest half-empty rather than right after a sumptuos mid-day meal.

 17. ksathish சொல்கிறார்:

  நன்றி!

 18. krishna சொல்கிறார்:

  super boss kalakkitinga

 19. humor N Glamor சொல்கிறார்:

  நல்லவேளை நான் பிழைதேன்

 20. kothan சொல்கிறார்:

  very good information and all the member read to this valaipu

 21. Siva சொல்கிறார்:

  thanks

 22. Mk prabhu சொல்கிறார்:

  Nice message to all boys…
  Great job Mr.jagadesan.

 23. ANBARASU J சொல்கிறார்:

  Sir,
  Very very Thank you sir.
  Enakku Mikka Magizhchi ayya.
  En meethu Iruntha Santhegam theernthathu.
  Naan Suya Inbam patri athigam kavalai patten, Tharpothu thangalathu kattalaiyai padithu en ennatthai maatrikonden.

  Thankyou, thank’s god.

  by,
  anbu.j

 24. mani சொல்கிறார்:

  எனக்கு பல முறை சுயஇன்பம் பெரும் பழக்கம் உள்ளது இதனால் யாதுயம் பிரச்சினை இருக்குமா

 25. Raghu சொல்கிறார்:

  thank you very much sir. today i m learning about the sexual problem, previously i m very afraid now i m okay thanks

 26. veera சொல்கிறார்:

  super thagavalkal

 27. venkat சொல்கிறார்:

  Thank u so much..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.