பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை – சகோதரன் ஜெகதீஸ்வரன்

இந்த இடுகை என்னுடைய பதிவுகளை திருடி விட்டார்கள் என்று ஓலமிடுவதற்கோ, அந்த நண்பர்களின் மீது வெறுப்பினை உமிழவோ இல்லை.

நீங்கள் பிரபல வலைப்பதிவர் என்றாலோ, அதிகமாக வலைப்பதிவுகளை வாசித்திருந்தாலோ இந்த பதிவு திருட்டினைப் பற்றி முன்னதாக உங்களுக்கு பரிச்சயம் இருந்திருக்கும். பரிச்சயம் இல்லாதவர்கள் அவர்களுடைய வலைப்பதிவைப் பார்த்துவிட்டு என் வலைப்பூவிற்கு வந்தால் என்னையல்லவா திருடன் என நினைப்பார். இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த இடுகை இடப்படுகிறது.

நேற்று தமிழிஸ் மூலம் மானங்கெட்ட தமிழர்களே! என்ற பதிவுக்கு செல்ல நேரிட்டது. அதற்கு தமிழிஸில் ஓட்டும் போட்டுவிட்டு, மற்ற இடுகைகளை வாசிக்க தொடங்கினேன். அதிர்ச்சிக்கு உள்ளானேன். என்னுடைய உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள் என்ற பதிவு அப்படியே எழுத்துப் பிசங்காமல் அச்சாகியிருந்தது.

என்னுடைய இடுகை –

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்

திருடப்பட்டது –
இடிமுழக்கம்,…

உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+)

வலைப்பூவின் முகவரியை இணைக்காமல் இப்படி செய்கின்றார்களே என

என்னாங்க இது ஒரு அறிவிப்பு கூட இல்லாம அப்படியே காப்பி அடிச்சிட்டிங்களே!,….
வலைப்பூவோட பேர் கூட இல்லையே!.
இதெல்லாம் ஞாயம் இல்லை,.
உங்களோட வலைப்பூவுக்கு வரவங்களோட (என்னையும் சேர்த்துதான்) நம்பிக்கையை பொய்யாக்கிடாதீங்க!,…
– ஜெகதீஸ்வரன்.
https://sagotharan.wordpress.com

மறுமொழியிட்டுவிட்டு வந்தேன்.

இது போல எத்தனை பதிவுகள் திருடப்பட்டிருக்கிறது என பார்வையிட்டேன். ஐயகோ என்ன உலகம் இது,.. பட்டியலாய் தொடர்கிறது பாருங்கள்!,…

அடுத்தது,.

என்னுடைய இடுகை –
அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்

திருடப்பட்டது –
மகாராஜாவில்,…
அம்மனுடன் புணரும் அர்ச்சகர்கள்

என்னுடைய இடுகை –
எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆயிட்டாங்க

திருடப்பட்டது –
ஈகரையில்,…
எப்படி இருந்த நடிகைகள் இப்படி ஆயிட்டாங்க

என்னுடைய மற்ற பதிவுகளும் திருடு போயிருக்கின்றதா என பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதை உங்களுக்கு தெரிவி்க்க திருட்டு என்று தனிப்பக்கத்தையும் நிரந்தரமாக காணும் படி சகோதரனில் இடப்போகிறேன்.

ஆதரவு கொடுத்து வரும் எல்லா நண்பர்களுக்கும், சக வலைப்பதிவர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்!…

தமிழிஸில் ஓட்டுப் போட இங்கு சொடுக்கவும்.

4 comments on “பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை – சகோதரன் ஜெகதீஸ்வரன்

 1. ஜோதிஜி சொல்கிறார்:

  இதையும் கடந்து சென்று விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதை விட ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

  திறமை இருப்பவர்கள் எழுதுகிறார்கள்.

  இருப்பவர்களை சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  உங்களுடைய கருத்துக்களை மற்றொருவர் அச்சுப் பிறழாமல் மற்றும் ஒரு படைப்பாக வெளியிடுகிறார்கள் என்றால் உங்கள் தாக்கம் அந்த அளவிற்கு அவரை கவர்ந்து உள்ளது என்று அர்த்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   அட நம்ம பதிவைக்கூட காப்பி அடிச்சிருக்காங்கன்னு கொஞ்சம் சந்தோசமாக தான் இருக்கிறது!. இருந்தாலும் என்னுடைய வலைப்பூவிற்கு வருகின்ற நண்பர்கள் என்னை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதல்லவா அதற்காகதான் இந்த இடுகை!.

   உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!

 2. வின் சொல்கிறார்:

  1)copyscape thalathil padthivu seithu avargaluku padam pugattungal
  2)intha blogil javascript yai disable seithuvidungal appadi seithal avargalal(yaralum) intha blogil right click seithu copy seiya mudiyathy nanba…
  3)html protector kondu ellea page yaum protect(lock) seiyungal thalaiva..
  4)blogin adipaguthil copywrite terms yai inaiyungal…
  5)photo in background il ungal thlaythin watermark yai inaiungal…

  ungaludaya email mugavariyai ungal profile pagil kanume athai podungal ungalai thodarbukolla valli illayae…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s