தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு !!! – செம்மொழிக் கவிதைகள்

செம்மொழி மாநாடு ஒரு கேடா?

உழுகின்ற தமிழனுக்கு நிலம் இல்லை!
உழைக்கின்ற தமிழனுக்கு ஊதியம் இல்லை!
படித்த தமிழனுக்கு வேலை இல்லை!
பாமரத் தமிழனுக்கு மானம் இல்லை!
நெசவுத் தமிழனுக்கு நூல் இல்லை!
நோயாளித் தமிழனுக்கு மருந்து இல்லை!
மாணவத் தமிழனுக்கு கல்வி இல்லை
மீனவத் தமிழனுக்கு கடல் இல்லை!
இலங்கைத் தமிழனுக்கு நாடில்லை!
ஈடில்லாத் தமிழனுக்கு வீடில்லை!

ஆக,
தமிழனாய் பிறந்தவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் இருப்பவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் செத்தவனுக்கும் எதுவுமே இல்லை!
தமிழே உனக்கு…
செம்மொழி மாநாடு ஒரு கேடா?

தமிழுக்கு விழாவா.. இல்லை… தாத்தாவிற்கு விழாவா…

கோடி கோடியாய் செலவு செய்து
அறிஞர்கள் எல்லாம் ஆய்வு செய்து
தமிழுக்குதான் விழா எடுக்கின்றனர் என
நம்பிக்கை வைத்திருந்தால்,..

கவியரங்கம் என்று சொல்லி
கலைஞரை துதி பாடி
தமிழுக்கான விழாவை
தாத்தாவுக்கான விழாவாக மாற்றிவிட்டனர்!

உணவிட்ட தமிழை மறந்து
உணர்வற்ற பிணமாகி
அரசைப் போற்றுவதும்
அரசரைப் போற்றுவதும் கண்டு
தமிழன்னை செத்து போகாமல் இருக்கட்டும்!

தமிழர்களின் நிலை!

பிரசவம் பார்க்க மருத்துவச்சியின்றி
பிறர் பார்கக் சவமாயிருக்கிறாள்
ஒரு தமிழச்சி…!

கழிவரையில் குழந்தையை பெற்றெடுத்து
சாதனை செய்திருக்கிறாள் பத்தாம்வகுப்பு
ஒரு தமிழச்சி…!

கற்புநெறியில் சிறந்துவிளங்கி
கள்ள உறவால் கொல்லப்பட்டிருக்கிறாள்
ஒரு தமிழச்சி…!

ஊருக்கே அறிவுரை சொல்ல
திருக்குறளைத் தந்தவர்களுக்கு
எதைத் தருவது…!

தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு

தமிழிஸில் ஓட்டுப்போட இங்கு சொடுக்கவும்.

9 comments on “தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு !!! – செம்மொழிக் கவிதைகள்

 1. Sarves சொல்கிறார்:

  இந்தத் தாத்தாவுக்கு இது தேவையா? இவர் தமிழைப் பாராட்டுகிறாரா இல்லை தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறாரே?

 2. rkguru சொல்கிறார்:

  kavithai arumai….vazhthukal

  kallarai methu maadanu…

 3. Riyas சொல்கிறார்:

  அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. ஏன் இதை தமிழிசில் இனைக்கவில்லை..

 4. யாழ் சொல்கிறார்:

  தமிழருக்கு என்று மானம் ரோசம் ஏற்படுகின்றதோ அன்று தான் விடிவு. தமிழர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் மீது ஒட்டுண்ணிகளாக படர்ந்து தமிழை அழிக்கும் இந்த கேடு கெட்ட கோமாளி அரசியல் வாதிகளை தமிழர் என்று இனம காண்பர்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s