தமிழ் மட்டுமே சிறந்த மொழி – நீங்களே பாருங்கள்

“காலனா எடுத்துக்கிட்டு போனா சந்தையையே வாங்கிக்கிட்டு வந்துடுவேன், இப்ப என்னாடீன்னா நூறு ரூபாய் எடுத்துக்கிட்டுபோயிட்டு ரெண்டு காய்கறி வாங்கியாராளுக” என்பார் என் அம்மாச்சி (அம்மாவின் அம்மா). அவருடைய பேச்சில் எப்போதுமே அனா, வீசம், மறக்கா, மைல் என பழங்கால அளவீடுகளை அதிகம் இருக்கும்.

“நாளு தென்னைக்கு காமூட்டை (கால் மூட்டை) வீதம் 2000 தென்னைக்கு வைக்கனும், ஒரு ஐநூறூ மூட்டை உரத்தை ஏத்து”ன்னு பண்ணையார் சொல்ல. இவர்களால் எப்படி கணதத்தை இலகுவாக பயன்படுத்த முடிகிறது என வியந்திருக்கிறேன். ஒரேயொரு தலைமுறை இடைவெளிதான் என்றாலும் எனக்கும் இந்த அளவீடுகளும் கணக்கீடுகளில் பரிச்சயமி்ல்லாமல் போனது வேதனை.

இதோ நம் மூதாதயர்கள் நமக்கு வழங்கிய எண்களும் அளவீடுகளும்.

தமிழ் எண்கள்
***********

* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

ஏறுமுக எண்கள்
*************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
*****************
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

அளவைகள்
—————-
நீட்டலளவு
**********
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை

பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்

முகத்தல் அளவு
*************
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி

பெய்தல் அளவு
*************
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.

நன்றி –

http://tamil2friends.com/

8 comments on “தமிழ் மட்டுமே சிறந்த மொழி – நீங்களே பாருங்கள்

 1. முனைவர் ஆ.மணி சொல்கிறார்:

  உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

 2. viswanath சொல்கிறார்:

  migavum arputham. wat is the equivalent of standard units of these?

 3. Sivagadadcham senthuran சொல்கிறார்:

  தமிழின் பெருமையை கூறுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு நாமே தமிழின் பெருமைக்கு இழிவு ஏற்படுத்தக்கூடாது சில தானங்களில் பிழை உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் தங்கள் முயற்சியை குறை கூறவில்லை

  வேறு ஏதாவது மொழியில் இது போல இருந்தால் சொல்லுங்கள்
  ( நன்றி சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை)

  1. ௧௦ தசம்-பத்து
  2. ௧௦௦ சதம் – நூறு
  3. ௧௦௦௦ சகத்திரம் – ஆயிரம்
  4. ௧௦௦௦௦ ஆயுதம் – பதினாயிரம்
  5. ௧௦௦௦௦௦ நியுதம் – இலட்சம் ,நூறாயிரம்
  6. ௧௦௦௦௦௦௦ பிரயுதம் – பத்துலட்சம்
  7. ௧௦௦௦௦௦௦௦ கோடி – நூறு லட்சம்
  8. ௧௦௦௦௦௦௦௦௦ தசகோடி – பத்துகோடி
  9. ௧௦௦௦௦௦௦௦௦௦ சதகோடி – நூறு கோடி
  10. ௧௦௦௦௦௦௦௦௦௦௦ அற்புதம் – ஆயிரங்கோடி
  11. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦ நிகர்ப்புதம் – பதினாயிரகோடி
  12. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கர்வம் – இலட்சம்கோடி
  13. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகர்வம் – பத்துலட்சம் கோடி
  14. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பதுமம் – கோடாகோடி
  15. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபதுமம் – பத்துக்கோடாகோடி
  16. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சங்கம் – நூறுகோடாகோடி
  17. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦மகாசங்கம் – ஆயிரம்கோடாகோடி
  18. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கோணி – பதினாயிரங்கோடாகோடி
  19. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகோணி – இலட்சம்கோடாகோடி
  20. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ கிதி – பத்துலட்சம்கோடாகோடி
  21. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாகிதி – கோடி கோடாகோடி
  22. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சோபம் – பத்துகோடி கோடாகோடி
  23. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாசோபம் – நூறு கோடி கோடாகோடி
  24. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரார்த்தம் – ஆயிரங்கோடி கோடாகோடி
  25. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ சாகரம் – பதினாயிரங்கோடி கோடாகோடி
  26. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பரதம் – லட்சம்கோடி கோடாகோடி
  27. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அசந்தியம் – பத்துலட்சம்கோடி கோடாகோடி
  28. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அத்தியந்தம் – கோடி கோடி கோடாகோடி
  29. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அனந்தம் – பத்துகோடி கோடி கோடாகோடி
  30. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பூரி – நூறு கோடி கோடி கோடாகோடி
  31. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மகாபூரி – ஆயிரங்கோடி கோடி கோடாகோடி
  32. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அப்பிரமேயம் – பதினாயிரகோடி கோடி கோடாகோடி
  33. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அதுலம் – இலட்சம்கோடி கோடி கோடாகோடி
  34. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அகம்மியம் – பத்துலட்சம் கோடி கோடி கோடாகோடி
  35. ௧௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ அவ்வியத்தம் – கோடாகோடி கோடி கோடாகோடி

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்கள் கருத்தினை பார்த்தேன். ஒரே மொழி என்ற காலக்கட்டத்தி்ற்கு நாம் சென்று கொண்டிருப்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்நிலை பல மொழிகளின் தொண்மங்களையும், பெருமையையும் அழித்த பின்னே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. மீட்டெடுக்க முடியாத மனிதன் வரலாற்று காலங்களை அழித்து நம்முடைய வசதிக்காக ஒரு மொழி கொள்கையை ஆதரிப்பது அபத்தமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s