லியோனார்டோ டாவின்சி – தெரியாத விசயங்கள்

டாவின்சியை உலகமுழுதும் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். டாவின்சி என்றாலே மோனோலிசா என்ற நிலையை, புரட்டிப் போட்டது டான் பிரௌனின் “தி டாவின்சி கோட்” நாவல்.  ஏசுவிற்கு மனைவி உண்டென்ற வாதத்திற்கு முக்கிய சாட்சியே டாவின்சியின் “கடைசி விருந்து” ஓவியம் தான். தமிழ்நாட்டில் முக்கியமான அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரையிட்டாலும், படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிந்தது , டாவின்சியின் அறிவுத் திறன்.

பொதுவாக புகழ்ப் பெற்ற ஓவியர்களின் வரலாறுகளை படித்தால், மிகுந்த சோகம் மிஞ்சும். இன்று கோடிக்கணக்கான டாலர்களுக்கும், ரூபாய்களுக்கும் ஏலம் போகும் படங்கள். அவர்களின் வறுமையான காலத்தில் வரையப்பட்டவை. ஏதோ சில ஓவியர்கள் மட்டுமே இதற்கு விதி வழக்கு. மற்ற எல்லா ஓவியர்களும் தங்கள் காலத்தில் வறுமையின் பிடிக்கு வாக்கப்பட்டவர்கள்.

பிறப்பு –

டாவின்சி்யின் உண்மையானப் பெயர் Leonardo di ser Piero da Vinci என்பது. இதற்கு வின்சி எந்ற நகரில் உள்ள பியரோ என்பவரின் மகன் லியோனார்டோ என்று பொருள். இவர் இத்தாலி நாட்டில் 1452 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அப்பா ஒரு நீதிபதி. அவருக்கும் அடிமைப்பெண் கேத்திரினாக்குவும் பிறந்தவர் தான் டாவின்சி.

பன்முகத்திறன் –


என்னுடைய நண்பன் ஹரிக்கு மிகவும் பிடித்தவர் டாவின்சி. அவனிடமிருந்துதான் டாவின்சி கோட் புத்தகம் எனக்கு அறிமுகமானது. அவன் சொன்ன போதுதான் டாவின்சி ஒரு ஓவியர் மட்டுமல்ல சிறந்த பன்முகத்திறன் கொண்டவர் எனத் தெரிந்தது. இசை, உடலியல், இயற்பியல்,கணிதம் என பல துறைகளில் வல்லவர் டாவின்சி. இதை அவரின் ஓவியங்களின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

மூடநம்பிக்கை எதிர்ப்பு –

எல்லா மதங்களும் மாறாமல் சொன்ன விசயம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயம் மனிதன் தெய்வாமிசத்தன்மை மிக்கவன் என்பதுதான். கிறித்துவ மதமும் இதையே சொன்னது. அதைத் தவறென நிறுபிக்க முயன்றவர்களில் டாவின்சியும் ஒருவர். மதகட்டுப்பாடுகளை மீறி மனிதப் பிணங்களை ஆய்வு செய்து ஓவியங்களாக தீட்டினார். இப்போதும் அறுவைச் சிகிச்சைக்கு உதவி  செய்யக் கூடிய அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தத்துரூபமாக உள்ளன.

மோனோலிசா –


மோனோலிசா இல்லாமல் டாவின்சியை கண்டிப்பாக நிறைவடையச் செய்ய முடியாது. இந்த ஓவியத்தில் உள்ள பெண், அவர் காலத்தில் வாழ்ந்த பிரபு ஒருவரின் மனைவி. பிரபுக்கள் அரசர்களைப் போல, தங்களைப் புகழும் கவிக்கும், வரையும் ஓவியர்களுக்கும் பொருள் கொடுத்து வாழ்க்கையில் உயிர்வாழ வரம் தருபவர்கள். மற்ற ஓவியங்களுக்கும் மோனோலிசா ஓவியத்திற்கும் உள்ள வித்தியாசம் அதன் ஒவ்வொரு அங்குலங்களிலும் தெரியும்.

மிக அதிகமாக நகல் எடுக்கப்பட்ட ஓவியங்களில் முதலாவது ஓவியம் இந்த மோனோலிசா. பகடி எனப்படும் கேளிச் சித்திரங்களாகவும், உருவமாற்றும் வேலைகளும் இந்த ஓவியத்திற்கு மேலும் புகழே சேர்த்தன. மிஸ்டர் பீன் என்று பாசமுடன் அழைக்கப்படும் நகைச்சுவை மன்னனின் மோனோலிசா ஓவியத்தை கண்டிப்பாக நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இந்த சகோதரன் வலைப்பூவில் ஐயோ என் மோனோலிசா பதிவு இந்த பகடிகளுக்காகவே இடப்பட்டது.

அழிக்கப்பட்ட பொக்கிசங்கள் –

டாவின்சி அவர் காலத்தில் கொண்டாப் பட்டார் என்பது ஒரு நிம்மதி. ஆனால் அரசியல் காரணங்களால், அவருடைய பல பொக்கிசங்கள் இப்போது இல்லை. குறிப்பாக மாபெரும் குதிரைச் சிலை ஒன்றினை டாவின்சி உருவாக்கினார். அது பிளாரென்சின் டியூக் என்ற பிரபுவுக்காக, முழுமையான கலை அதிகாரக் குறியீடாக விளங்க வேண்டுமென மெனக்கெட்டு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு டாவின்சி கௌரவிக்கப்பட்டார்.

எப்படி மற்ற அரசர்களின் படையெடுப்பில் கோவில்களை அழிப்பதும், கோட்டைகளை அழிப்பதும் முக்கியமானதாக இருந்ததோ, அதைப் போலவே அவர்களின் வரலாறுச் சின்னங்களை அழிப்பதும் முக்கியமானதாகவே கருதப்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பிரபுவின் எதிரிகள் அந்த கடுமையான உழைப்பில் உருவான சிலையை அழித்துவிட்டனர்.

டாவின்சியின் பாதுகாவலர் –

கணினி உலகில் ஏறக்குறைய எல்லோருக்கும் பிடித்தவர் “பில்கேட்ஸ்”. உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர். மைக்ரோசாப்ட் என்ற மாபெரும் நிறுவனத்தின் முதலாளி. இத்தனை சிறப்புகளை சொல்லிக் கொண்டாலும், இன்று டாவின்சியின் கிடைத்தற்கரிய பல பொக்கிசங்களை பாதுகாத்துவருபவர் என்ற முறையில் எல்லோரின் மதிப்பையும் பெற்றிருக்கின்றார்.

சரி தெரியாத விசயங்கள் என சொல்லிவிட்டு எல்லாம் தெரிந்த விசயங்களாகே இருக்கின்றன எனப் பார்க்கின்றீர்களா,.

தெரியாத விசயங்கள் –

நீதிபதிக்கும் கேத்திரினாவுக்கும் கள்ள உறவில் பிறந்தவர் டாவின்சி. வெரோசியா என்ற ஆசிரியரிடம் நுன்வரைகலைப் பயிற்சி பெற்றவர். ஓரினச் சேர்க்கையில் ரகசியமாக ஈடுப்பட்டார். கிறித்துவ மதத்திற்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டார். இவருடைய ஓரினச்சேர்க்கை, உடலியல் ஆராய்ச்சி மற்றும் கடைசி விருந்து படத்தில் ஏசுவின் மனைவி என பல செய்கைகளும் மதத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது. இருப்பினும் இவற்றிற்கு முழுமையான ஆதாரம் இல்லை என்பதே உண்மை.

மேலும் –

டாவின்சியின் ஓவியங்கள்.

தமிழிஸில் ஓட்டுப் போட இங்கு சொடுக்கவும்.

4 comments on “லியோனார்டோ டாவின்சி – தெரியாத விசயங்கள்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல கருத்துகள் சொன்னீர்கள் நண்பரே.

  2. kannan சொல்கிறார்:

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள்
    மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக காணப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s