மாண்புமிகு வருங்கால முதல்வர் விஜய்க்கு

இன்னைக்கு நடிகர் விஜயக்கு பிறந்தநாள் என்றதுமே நேற்று நள்ளிரவிலிருந்து அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். சிரித்து சிரித்து வயிரே புண்ணாகிவிடும் போல,. சில மிகக் காட்டமாக இருந்ததன அவைகளை தவிர்த்துவிட்டு, நகைச்சுவைக்காக மட்டும் சில இங்கே,..

1. அடுத்தடுத்து ஐந்து மொக்கைப் படங்கள் ஒரே நடிகன் – விஜய்.

2. ஆசிரியை – உலகிலேயே அதிக உயரம் தாண்டும் விலங்கு எது?.

மாணவன் – விஜய் டீச்சர்.

3. ஆசிரியர் – உலகின் மிகச்சிரிய ஜோக் சொல்லு?
மாணவன் – டாக்டர் விஜய்.

4. நிருபர்  – மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க?

நடிகர் விஜய் – நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.

5. ரசிகன் 1-இப்ப விஜய் மாறுவேசத்துல அலையுராறாமே ஏன்?.

ரசிகன் 2 – போலி டாக்டருங்களப் போலி்ஸ் புடிக்குதில்லை அதனாலதான்.

நம்ம பங்கிற்கு நாமும் ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பி விடுவோம். ஒரு வேளை நாளைக்கு தமிழக முதல்வராக வந்தால் வசதியாக இருக்கும் என எண்ணினேன். அவரது படத்தினை இணையத்தில் தேடும் போது இந்தப் படம் கிடைத்தது. என்னவொரு நளினம்.

“பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்”

பி.கு –

நானும் முன்நாள் விஜய் ரசிகன் தான். அவருடைய ப்ரியமுடன் படம் மிகவும் பிடிக்கும். என் கணினியில் சச்சின் ஓடாத நாளே இல்லை. (நடிகர் வைகைப்புயல் வடிவேலுக்காக). சில படங்கள் மொக்கையாக இருந்தாலும் பாடல்கள் நன்றாக இருக்கு்ம். இப்போது தொடர்ந்து ஐந்து தோல்விகள். திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்புகள். ரூட்டை மாற்றி செயல்பட்டால் நானும் முன்பு போல படம் பார்க்கலாம். செய்வாரா இளையதளபதி விஜய்?.

படத்திற்கு நன்றி –

http://www.behindwoods.com

2 comments on “மாண்புமிகு வருங்கால முதல்வர் விஜய்க்கு

 1. mohan சொல்கிறார்:

  அவர் பிறந்த நாள் அன்னைக்கு, விஜய் போட்டோவை, இவ்வளவு மோசமா, Edit பன்னி அனுப்புவீங்கன்னு நினைச்சிகூட பாக்கல.

  ஒருத்தனை வாழ்த்த விருப்பமில்லன்னா விட்டுடுங்க. பிறந்த நாள் அதுவுமா வசை பாட வேண்டாம்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   1. இந்தப் படம் இணையத்தில் இருந்து எடுத்தது. நான் மெனக்கெட்டு உருவாக்கினால் கூட இத்தனை தத்துரூபமாக இருந்திருக்காது.

   2. ஈழத் தமிழர்கள் எல்லாம் ஒரு புரம் செத்துக் கொண்டிருக்க, கொஞ்சம் கூட வெக்கப்படாமல் பதவிக்கா ராகுலின் காலில் விழுந்தவருக்கு இந்த தமிழன் என்ன செய்வான் என எதிர் பார்க்கின்றீர்கள்!,…

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!.

   வசைகள் நிச்சயம் தொடரும்,… வாருங்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s