நம்ப முடியாதவைகள் – சாடிசம் – மசோகிசம்

மசோகிசம் பற்றி கேள்விப்படாதவர்களுக்கு கூட சாடிசம் வார்த்தையை கேள்விப்பட்டிருப்பார்கள். பிடிக்காத கருத்துக்களை சொல்பவர்களை சாடிஸ்ட் என்று முத்திரைக் குத்துவது வலையுலகில் இருக்கும் பாரம்பரியமான ஒன்று. உங்களுக்கு சந்தேகமிருந்தால் இங்கு சொடுக்கி, சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவும்.

சரி,மிக கொடூரமானவர்களைக் குறிக்கும் இந்த வார்த்தைகளின் பின்னனி என்ன என்பதை கொஞ்சம் அலசுவோம்.

சாடிசம் –

சாடிசத்தின் முதல் வாரிசு செக்ஸ் உலகில்தான் பிறந்தது. மார்கயூஸ் டி சேட் என்றும் பிரபு பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்தான். அவனுக்கு பெண்களை வேட்டையாடும் பழக்கம் இருந்தது. தினம் தினம் இளம் கன்னிப் பெண்களையும், விலைமாதர்களையும் கைது செய்து வந்து விதவிதமாய் உடல் உறவு கொள்வான்.

எல்லாப் பிரபுகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் செய்கின்ற வேலை தான் இது என்றாலும். அவனைக் கண்டு பெண்கள் நாடைவிட்டே ஓடிப்போனார்கள். காரணம் அவன் உறவு கொள்வதற்கு முன்னால் பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்தி அழ வைத்துதான் அழைத்தே செல்வான்.

இவ்வாறு உறவுக்கு முன் அடுத்தவர்களை துன்புருத்தி, மகிழ்ச்சி கொள்வதிலிருந்துதான் சாடிசம் பிறந்தது. சாடிசம் என்றால் பிறரை துன்புறுத்துதல் என உலகம் சொல்கிறது.

மசோகிசம் –

சாடிசத்தின் நேர்எதிர் துருவம் இந்த மசோகிசம். அதாவது உறவு கொள்ளும் முன் தன்னை மற்றவர்கள் துன்புறுத்தினால் மட்டுமே, மகிழ்ச்சாய் இருப்பது. சாட்டையடி, ரத்தம் வரும் வரை உதை என இத்தனை துன்பங்களை அனுபவித்த பின்தான் அவர்களுக்கு செக்ஸ் ஆசையே வரும்.

லியோபோல்ட் வான் சாஷெர் மசோக் என்பவர் உக்ரைன் நாட்டில் வாழ்ந்தவர். இவரின் காதலிக்கு மசோகிசம் பண்பு இருந்ததால், தினமும் அடியுதையுடன் தான் உறவில் ஈடுபட வேண்டும். இந்த மசோகிசம் என்ற பெயர் வரக் காரணம் இவரே.

மனநோய் –

பிறரை துன்புறுத்தி ரசிப்பவர்களையும், தன்னையே துன்புறுத்திக் கொண்டு இன்பம் காண்பவர்களையும் நம் மனநோயாளி என்று தானே சொல்லுவோம். சாடிசமும், மசோகிசமும் ஒரு வகையில் மனநோய்தான். அறிஞர்களும், மருத்துவர்களும் தொடர்ந்து இதைப் பற்றி ஆய்வுகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் –

மூன்று வயது குழந்தையை கற்பழித்து (?) கொன்ற காமக்கொடூரன். டியூசன் படிக்க சென்ற சிறுமி மர்மச் சாவு என தினம் தினம் செய்தித்தாள்களில் வருகின்ற குழந்தைகளின் வன்முறைகளும் சாடிசத்தின் ஒருவகைதான். பிஞ்சுக் குழந்தைகளிடம் கூட ஈவு இரக்கமின்றி பாலியல் வன்முறையில் ஈடுபடும் பலர் இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். துறவரம் மேற்கொண்ட சன்னியாசிகள் பெண்களை குறிவைக்க, பாதிரியார்கள் குறிவைத்ததோ குழந்தைகளை.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைப் போல பார்த்துக் கொள்ள வேண்டிய ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான். இப்போது மக்களிடம் மெல்ல மெல்ல விழிப்புணர்வு தலைதூக்கியிருக்கிறது.

குழந்தைகளை துன்புறுத்துதல் –

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுடன், அடித்து துன்புறுத்துதலும் சாடிசம் வகையில்தான் சேர்க்கவேண்டும். தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒன்றுமறியாத குழந்தைகளிடம் காட்டுவது அறிவில்லாத செயலன்றோ.

பாதிப்புகள் –

சாடிசம் உள்ளவரிடம் சிக்கி பலருக்கும் பாதிக்கப்படுவது மனநிலைதான். மிகக் கொடூரமான முறையில் தாக்குதலுக்குள்ளாகி, மனம் பாதிக்கப்ட்டவர்கள் நிறைய. அதேபோல ஆசிரியர் அடித்தால் கண் இழந்த மாணவ மாணவிகள் ஏராளம். உடல் ஊனத்தினை விடவும் மனதில் அவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தான் அதிகம். சாடிசத்தால் மரணத்தை சந்தித்தவர்களும் பட்டியலில் உண்டு.

பாதுகாப்பு நடைமுறை –

குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். தவறான தொடுதல் பற்றி பெற்றோர்களே சொல்லிதர வேண்டும். வயதுக்கு தக்கவாறு குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் பிறப்புறுப்புகளில் காயம் ஏற்பட்டிருந்தால் கூடுதல் கவணம் எடுத்து, நடந்தவைகளை தீவிரமாக விசாரிக்க வேண்டும். நம்முடைய கண்பார்வையில் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம். அண்டை வீட்டில் இருப்பவர்களின் குழந்தைகளை தனியாக விடாமல் இருப்பதே மிகச் சிறந்தது.

மேலும் பார்க்க –

கல்வி நிலையங்களில் கயமை இருள்

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…

பாதிரியார்களின் பாலியல் குற்றம்

பாலியல் கல்வி

கார்ட்டூன் –

4 comments on “நம்ப முடியாதவைகள் – சாடிசம் – மசோகிசம்

  1. kalpana சொல்கிறார்:

    Nice work Jagadeeswaran. Each your post are very intersting.

    Keep Rocking.

    – Kalpana

  2. Ram சொல்கிறார்:

    வலிகளாகும் சுகங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s