ஒரு லட்சம் ஹிட்சைத் தொடர்ந்து ஒரு ஆனந்த தாண்டவம்

ஒரு லட்சம் ஹிட்ஸைக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல!.

சிவ தாண்டவங்கள் –

சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது.

ஆனந்த தாண்டவம் –

சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தி்ல் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது.

அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரத கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது.

இந்த ஆனந்த தாண்டவத்தை குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம்.

காளிகா தாண்டவம்

பிரம்மாவுக்கு படைத்தல், விஷ்னுவுக்கு காத்தல், சிவனுக்கு அழித்தல் என பொதுவாக சொன்னாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது.

இந்தக் காளிகா தாண்டவத்தை திருநெல்வேலியில் காணலாம்.

சந்தியா தாண்டவம்

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள்.

மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு.

இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம்.

ஊர்த்துவ தாண்டவம்

சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர்.

இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.

கஜ சம்ஹாத் தாண்டவம்

தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.

இந்த கஜ சம்ஹாத் தாண்டவத்தை நன்னிலம் அருகேயுள்ள திருச்செங்காட்டாக்குடியில் காணலாம்.

10 comments on “ஒரு லட்சம் ஹிட்சைத் தொடர்ந்து ஒரு ஆனந்த தாண்டவம்

 1. ஜோதிஜி சொல்கிறார்:

  தளத்தின் பின்புலத்திற்கும் படத்திற்கும் ஏராளமான கேள்விகள் வருகிறது. இதுவரையிலும் பார்க்காத படங்கள். நீங்கள் வீரும்பும் கோடி ஹிட்ஸ்கள் கிடைத்து ஆனந்தம் உருவாகட்டும்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தளத்தின் பின்புலத்திற்கும் படத்திற்கும் ஏராளமான கேள்விகள் வருகிறது.

   சிகப்பும், கருப்பும் திராவிடத்தின் நிறம். அதே நேரம் சிவனின் நிறம் சிகப்பு, ஐயப்பன் பக்தர்களின் உடை கருப்பு. எதை வைத்துப் பார்த்தாலும் இந்து மதத்தினை மக்களிடமிருந்து பிரிக்க இயலாது.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!…

 2. ♠புதுவை சிவா♠ சொல்கிறார்:

  வாழ்த்துகள் சகா

 3. Jawahar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் ஜகதீஷ். இன்னும் பல லட்சங்கள் வரட்டும்.

  http://kgjawarlal.wordpress.com

 4. படைப்பாளி சொல்கிறார்:

  மேலும் பல ஹிட்ஸ் கள் பெற்று உங்கள் ஆனந்தம் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் சகோதரா..

 5. Ram சொல்கிறார்:

  அருமையான கலை. ஆனால் ஏனோ சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   எல்லாவற்றிக்கும் ஈசன் அருள் வேண்டும். அதுவும் பரதம் போன்ற பெரிய கலைகளுகக்கு நிச்சயம் வேண்டும். அதனால்தான் ஒரு சிலருக்கு மட்டுமே கலை வாய்க்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s