உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்

தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது தூரங்களை குறைத்து குறைத்து இப்போது படுக்கையறை வரை வந்துவிட்டது. அடுத்தவரின் படுக்கை அறையில், கடைகளில் துணி மாற்றும் இடத்தில் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்கும் அபாயம் பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டருக்கிறது.

இப்படிப்பட்ட தருணத்தில் நாம் உடையணிந்திருந்தாலும் நம்மை நிர்வாணமாய் காணோளி பதிவு செய்யும் மென்பொருள்கள் வந்தால் நாம் என்னாவாவோம்?. நம்முடைய சுகந்திரம் எந்தளவு பரிபோகும்?. நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இந்த மென்பொருள்கள் வந்துவிட்டதாக இணையம் பயமுறுத்துகிறது.

அதைப் பற்றிய இடுகைதான் இது.

ஐ போன் –

ஐ போனைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக உங்களுக்கு ஐபோனைப் பற்றி தெரிந்திருக்கும். ஒரு குட்டி கணினியாக கைக்குள் அடங்கி விடும் அதன் வரவேற்பினைக் கண்டு உலகமே பிரமித்திருந்தது.

நிர்வாணமாக காட்டும் மென்பொருள் –

ஐபோனில் இணையத்திலிருந்து அதற்கான மென்பொருள்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் சில நிர்வாணமாக காட்டும் மென்பொருள்களும் அடங்கிவிடும்.

விளம்பரங்களில் இரண்டு மென்பொருள்களை காண முடிந்தது. ஒன்று ஐநேக்கிட், மற்றொன்று நியூட் இட்.

ஐநேக்கிட் ஆப்பில் ஐபோனின் மென்பொருள் என்று விளம்பரம் சொல்லுகிறது. ஆனால் ஆப்பில் ஐபோன் தளத்தில் எஸ்ரே மென்பொருள் மட்டும் கிடைக்கின்றது. இதைக் காணவில்லை.

அடுத்தது நியூட் இட். இந்த மென்பொருள் இணையத்திலேயே இலவசமாய் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். இந்த இணைப்பைக் கொடுக்க காரணம், நீங்கள் பயன்படுத்தி அதன் உண்மைத் தன்மையை நிச்சயம் செய்து கொள்ளத்தான்.

எப்படிச் சாத்தியம் –

உங்கள் புன்னகையின் போது படம் பிடிக்கும் புகைப்படக் கருவிகளைக் கண்டிருக்கின்றீர்களா. அந்தக் கருவி உங்கள் முகத்தினை அறிந்து நீங்கள் சிரிக்கும் போது தானாகவே புகைப்படம் எடுத்துவிடும் தன்மையுடையது. அது போல இந்த மென்பொருளும் உங்களின் முகத்தினை அறிந்து கொண்டு, உங்கள் நிறம், பருமன் போன்றவற்றைக் கணக்கிட்டு போலியான உடலை உங்களின் தலையுடன் இணைத்துவிடலாம் என்கின்றனர் சிலர் பயனாளர்கள்.

அதிரவைக்கும் காணோளிகள் –

உண்மையா –

இந்த மென்பொருள் வெளிவந்தது உண்மைதானா என்று என்னால் உறுதிகூற இயலாது. ஆங்கில வலைப்பூக்கள் சில உண்மை என்றே அடித்துக் கூறுகின்றன. எனினும் வந்திருந்தால் அபாயத்தை நெருங்கிவிட்டோம், வரவில்லையெல்லாம் கொஞ்ச காலம் நிம்மதியாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவைகளை இட்டுவிட்டேன். இனி உங்கள் பங்கு நண்பர்களே!.

மேலும் பார்க்க –

iNaked, another xray application for iPhone

iPhone App Lets You See Naked People, Sort Of

9 comments on “உடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்

 1. படைப்பாளி சொல்கிறார்:

  ////ஆங்கில வலைப்பூக்கள் சில உண்மை என்றே அடித்துக் கூறுகின்றன. எனினும் வந்திருந்தால் அபாயத்தை நெருங்கிவிட்டோம், வரவில்லையெல்லாம் கொஞ்ச காலம் நிம்மதியாக இருக்கலாம்.//////
  சகோதரா..காட்டவேண்டியத படம் போட்டுகாட்டிட்டு அப்புறம் வரலன்னா நிம்மதின்னு…கலாய்க்கிறேள் பாத்தியளா…ஹி..ஹீ

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இப்போது வந்திருப்பது ஏறக்குறைய ஒரு ஏமாற்றுவேலை என்று சில இணையதளங்களில் படித்தேன். ஏற்கனவே இருக்கும் சில உள்ளாடைப்படங்களுடன் நம் தலையை ஒட்ட வைத்துவிட்டு இப்படி ஜொள்ளுகிறார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!.

 2. prabhuram100 சொல்கிறார்:

  இன்னும் இதற்கு மென்பொருள் கண்டுபிடித்து விட்டார்களா என்று எனக்கு தெரியாது . ஆனால் போட்டோ ஷாப் என்னும் மென்பொருள் மூலம் நாம் எடுத்த புகைபடத்தில் உள்ளவரை நாம் நிர்வாணமாக மாற்ற முடியும் என்பது மட்டும் எனக்கு தெரியும்….

 3. Ram சொல்கிறார்:

  இது பொய். software/application வைத்து ஒன்றும் பண்ண முடியது. லென்ஸ் அது போல இருக்க வேண்டும்.

 4. Aravinthan சொல்கிறார்:

  ithu thodarpana thagavalgal kidaithaal, udane theriyapaduthinaal sirappaga irukkum. Thanks for ur information.

 5. நந்தீஸ்வரன் சொல்கிறார்:

  thakavaluku nandri

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s