வடதுருவ ஒளி – இயற்கை அதிசயம்

இந்தப் படத்தைப் பார்க்கும் போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது. கைதேர்ந்த கணினி வரைகலை நிபுனர்கள் செய்த வேலை என்றா?. நானும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இது அவர்கள் செய்த வேலை இல்லை. இயற்கை கடவுள் செய்த வேலை. என்ன நம்ப முடியவிலல்லையா?

அந்தி மாலை –

அந்தி வானம் மிகவும் அழகானது. சூரியன் துயில் கொள்ளப்போகும் அந்த நேரத்தில் வானத்தில் நடக்கும் வர்ணஜாலங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள். பல வண்ண ஒளிக் கலவைகளாக இருக்கும் வானத்தைப் பார்க்கும் போதே கவிதைகள் தோன்றும்.

வண்ண ஒளிகள் தெரியும் போதே நமக்குள் மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த வண்ண ஒளிகள் நகர்ந்தால் எப்படியிருக்கும்…. நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் சிலிர்க்கின்றதா…

தென்முனை, வடமுனை ஒளி –

சூரியனின் வளிமண்டலத்திற்கும், பூமியின் காந்தப் புலத்திற்கும் இடையே நிகழும் தொடர்பால் இது ஏற்படுகிறது. பச்சை, சிவப்பு, நீலம், ஊதா போன்ற நிறங்களில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தென் மற்றும் வட துருவங்களிலில் சில பகுதியில் தெரிகின்றது.

எப்படி நிகழ்கிறது –

இந்த பலவண்ண ஒளி நடநத்திற்கு மூல காரணம் சூரியனின் அணுக்கள், இவை மிக அதிகமாக வெளிபடும் சமயங்களில் புவி காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றன. மற்ற இடங்களைவிட புவிகாந்தம் தென் மற்றும் வட துருவங்களில் அதிக சக்தியுடன் காணப்படுவதால் இவை பெரும்பாலும் துருவப் பகுதிகளில் சந்திக்கின்றன.

நம் புவி வளிமண்டலத்தில் இருக்கும் எண்ணற்ற வாயுக்களுடன் இந்த சூரிய அணுக்கள் கலக்கும் போது வர்ண ஜாலம் நிகழ்கிறது.

மற்ற கிரகங்களிலும் –

பூமியின் தோற்றமும் வடதுருவ ஒளிநிகழ்வும்.

பூமியில் மட்டுமல்ல, சனி, ஜூப்பிட்டர் என மற்ற சில கிரகங்களிலும் இந்த அற்புதம் நிகழ்கின்றது.

ஜூப்பிட்டரில் நிகழும் ஒளி அதிசியம்,.

காணோளிகள் –

மேலும் காண –

Secrets of the Polar Aurora

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s