வாத்தியாரம்மாவின் ஆன்மீக அனுபவம்

எனக்கு எழுத்துகளின் மீது ஆர்வத்தை தூண்டியவர்ளில் சுஜாதாவும் ஒருவர். அவருடைய புத்தகங்களில் ரெங்கநாதனும், திருவரங்கமும் கண்டிப்பாக இருக்கும், கடவுள் மீது அவருக்கு அத்தனை பற்று. அவர் மறைந்த பிறகு நாளிதள்கள் திருமதி சுஜாதாவின் அனுபவங்களை வெளியிடத் தொடங்கின. அத்தகைய கட்டூரைகளின் ஒன்றைப் பற்றி இந்த இடுகை.

தமிழ்கடவுளுக்கு வேல் கொடுத்தார்-

என் பையன்கள் இரண்டு பேரும் அப்பா வழி.
எங்கப்பா முருகன் கோயிலுக்கே வேல் வாங்கி தந்தவர். வேலூரிலுள்ள ரத்னகிரி சாமியார் என் அப்பாவுடன் வேலூர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்தவர். ஒரு நாள் மலைக்கு போனவர் மயக்கமடைந்து பிறகு கீழே இறங்கி வரவில்லை. இறையருளால் சாமியாராகி விட்டார். இன்றைக்கும் ரத்னகிரி கோயிலில் ஆடிக்கிருத்திகையன்று என் அப்பா வாங்கி தந்த வேலைத்தான் வைப்பார்கள். கோயில் வாசலில் இப்போதும் தந்தையின் பெயரை பார்க்க முடியும்.

பிள்ளையாரிடம் பேசுவேன் –

நான் வைணவக்குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் எனக்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார் தான். வீட்டுக்கு பின்னாலேயே பிள்ளையார் கோயில் இருப்பதை பார்த்து தான் இந்த வீட்டையே வாங்கினேன். விடியற்காலை எழுந்தவுடன் மாடியிலிருந்து கோயில் கோபுர தரிசனம் முடித்து விட்டு, அப்புறம் ஹாலில் இருக்கும் பிள்ளையாரிடம் கண்ணை மூடிக்கொண்டு சில ஸ்லோகங்கள் சொல்லுவேன். காலையில் பிள்ளையாரிடம் இன்னி பொழுது எப்படி? போகும் என்று கேட்பது என் நீண்ட நாள் வழக்கம். வினாயகரிடம் அவ்வப்போது பேசுவது எனக்கு பிடித்தமான விஷயம்.

சங்கடம் தீர்த்த சாய்பாபா-

என் பெற்றோர் வழி குடும்பத்தினர் சாய்பாபா பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது புட்டபர்த்தி போய் வருவ்து வழக்கம். அமெரிக்காவில் சான்பிராஸ்ஸிஸ்கோவில் இருக்கும் என் பையன் கேசவ பிரசாத்தின் வீட்டிலிருந்த போது எனக்கு திடீரென்று ஒரு மனக்கஷ்டம் தோன்ற ரொம்பவும் அவஸ்தை பட்டேன். மனதில் சட்டென்று சாய்பாபாவின் உருவம் தோன்ற, அங்குள்ள பாபாவின் கோயிலுக்கு மருமகளை அழைத்து போக சொன்னேன். சொன்னால் உங்களால் நம்ப கூட முடியாது. நான் பாபாவை தரிசித்து விட்டு வந்த மறு நாளே அந்த மனக்கஷ்டம் விலகிவிட்டது.

மரணம் வரை போய் வந்தவர் –

பத்ரிநாத்திற்கு குடும்பத்தோடு ஒரு தடவை சென்றிருந்தோம். டாக்ஸியில் என்னோவு அவரும் என் அம்மா, அப்பாவும் வருகிறார்கள். நாராயணன் என்கிற டிரைவர் வண்டியை ஓட்டினார். மழை பெய்து குளிர் வாட்டியது. ஒரு வளைவில் எதிரே சடாரென்று பஸ் வர நாங்கள் எல்லோரும் ஓ என்று கத்திவிட்டோம். மெதுவா மூடின கண்ணை திறந்து பார்த்தால் மலைப்பாதையில் வண்டி ரோடு ஓரமாக தொங்கி கொண்டு நிற்கிறது.

ஓர் அங்குலம் நகர்ந்திருந்தால் கூட அதாலபாதாளத்திற்கு போயிருப்போம். டிரைவர் ஒண்ணுமே நடக்காத மாதிரி சிரித்தார்.
இதெல்லாம் எனக்கு சகஜம்சார் நாராயணனை கூப்பிட்ட பிறகு எதுக்கு பயப்படறீங்க? என்று சொன்னாரே பார்க்கணும்.

படி பல சமயங்களில் பகவான் கடைசி நிமிஷத்தில் எங்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருகிறார். அவர் இரண்டு தடவை பை பாஸ் செய்தவர் என்பதால் ஒவ்வொரு தடவையும் எனக்கு ஆபரேஷன் பண்ணும்போது எமனிடம் போய் வருகிறேன். ஆக, எனக்கு மரணத்தை பற்றி பயமில்லை என்பார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s