உங்கள் வருங்கால மனைவிக்கு 10-10-10

உங்களுக்கு 20 20 தெரிந்திருக்கும். 10-10-10 தெரியுமா?
இது கிரிக்கெட் இல்லை. முடிவெடுப்பதற்கான ஓர் உத்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் 10-10-10 என்கிற புதிய புத்தகத்தில் இதனை விரிவாக அறிமுகப்படுத்தியிருப்பவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், மேலாண்மை நிபுணர், ஆலோசகர் சூஸி வெல்ஷ்.
சூஸி ஏற்கெனவே சர்வதேச வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். தன்னுடைய கணவர் ஜாக் வெல்ஷûடன் இணைந்து இவர் எழுதிய வின்னிங் புத்தகம் கடந்த பல ஆண்டுகளாக பெஸ்ட்செல்லர்ஸ் வரிசையில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது.

10-10-10 உத்தியின் விசேஷம், அதன் எளிமை.
பொதுவாக முடிவெடுக்கும் உத்திகள் அனைத்தும், அலுவலகச் சூழலில் பிஸினஸ் முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுகிறவை. அதனால்தான் பெரும்பாலான மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் இவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்துச் சொல்லித் தருவார்கள். ஆனால் 10-10-10 அப்படி உச்சியில் ஏறி உட்கார்ந்து கொள்வதில்லை இந்தச் சுலபமான உத்தியை நீங்களும் நானும், இன்னும் சாõரண பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் பயன்படுத்த முடியும்.

முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல, பொதுவாகவே எந்த ஒரு முக்கியமான வேலையையும் தொடங்குவதற்கு முன்னால் இந்த 10-10-10 ஃபார்முல்லாவைச் சில விநாடிகள் சிந்திக்கப் பழகினால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதைத் தவிர்க்கலாம். நிதானமாக எல்லாக் கோணங்களில் இருந்தும் யோசித்துச் செயல்படலாம்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். முதலில் 10-10-10ன் அர்த்தம், 10 நிமிடங்கள், 10 மாதங்கள், 10 வருடங்கள்.
இப்போது உங்களுக்குச் செம பசி. வீட்டில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடுகிறீர்கள். கிச்சன் காலியாகக் கிடக்கிறது. இனிமேல் ஏதாவது சமைத்தால்தான் உண்டு. அதுவரை பசி பொறுக்கமுடியுமா? தெரியவில்லை.

சரி, ஃப்ரிட்ஜைத் திறந்து பார்ப்போம். ஆஹா இதோ ஒரு சாக்லெட் கிடக்கிறது. கடித்தால் உடனடி எனர்ஜி! கொஞ்சம் பொறுங்கள். அதற்கு முன்னால், 10-10-10 ஃபார்முலாவைப் பயன்படுத்தி யோசித்துவிட்டு அதன்பிறகு அந்த சாக்லெட்டைத் கடியுங்கள் என்கிறார் சூஸி வெல்ஷ்.

முதலில் 10 நிமிடங்கள். அதாவது, இந்த சாக்லெட்டைச் சாப்பிடுவதன்மூலம் அடுத்த பத்து நிமிடங்களில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய உடனடிப் பலன்கள் என்ன? பசி தீரும் நிம்மதியாக வேறு வேலையைப் பார்க்கப் போகலாம்!அடுத்த 10 மாதங்கள் இப்போது இந்த சாக்லெட்டைச் சாப்பிட்டுவிட்டால் பத்து மாதம் கழித்து என்ன ஆகும்?சாக்லெட்டில் கொழுப்புச்சத்து மிகுதி என்பது நமக்குத் தெரியும். ஆகவே பத்து மாதங்களில் இந்த சாக்லெட்டினால் நம் உடலில் சில கிராம் கூடுதல் கொழுப்பு சேரும். இது குறுகிய காலக் கண்ணோட்டம்.

கடைசியாக 10 வருடங்கள், இந்த சாக்லெட்டைக் கடிப்பதன் மூலம் பத்து வருடங்களில் (அதாவது நீண்ட கால நோக்கில்) என்ன விளைவுகளை எதிர்பார்க்கலாம்? ஆரோக்கியமாகச் சாப்பிடாமல் எந்நேரமும் சாக்லெட் தின்று கொண்டிருந்தால், அதன் மூலம் நம் வாழ்க்கை முறையே மாறிப்போகலாம். பல வியாதிகள் தேடிவரலாம். நம் வாழ்நாள் குறையலாம். பசிக்கு ஒரு சாக்லெட்டைப் பிரித்துத் தின்பதால் உங்கள் ஆயுள் குறைந்துவிடுமா என்றால் இல்லை. ஆனால், இப்படி ஒவ்வொரு நாளும் சாக்லெட் தின்றுகொண்டிருந்தால் நிச்சயமாக அதற்கு இப்படி ஒரு நீண்ட கால விளைவு இருக்கும்தானே? அதை யோசிக்காமல் இப்போது சாக்லெட்டைக் கடிப்பது புத்திசாலித்தனமில்லையே!

இதைத்தான் சூஸி வெல்ஷின் புத்தகம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலுக்கும் உடனடி குறுகிய கால நீண்ட காலப் பலன்கள் உண்டு. அவற்றை 10-10-10 ஃபார்முலாவின்மூலம் சிந்தித்துப் பார்காமல் எதையும் செய்யாதீர்கள் என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்கிற மையக் கருத்து. முக்கியமான விஷயம் இந்த ஃபார்முலா சாக்லெட்டுக்கு மட்டுமில்லை (வேறு எதற்கும் பொருந்தக்கூடியது உதாரணமாக ஒருவருக்கு கல்யாணத்துக்குப் பெண் பார்க்கிறார்கள், அவர் தன்னுடைய வருங்கால மனைவியை முடிவெடுப்பதற்கு 10-10-10 கோணத்தில் யோசிக்கலாம். இன்னொருவர் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம். இப்படி எங்கேயும் எப்போதும் பொருந்தக்கூடிய பொதுத்தன்மை இதற்கு உண்டு.

ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் 10 நிமிடம், 10 மாதம், 10 வருடம் என்று யோசித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வெட்டி வேலையாகத் தோன்றலாம். ஆனால், இதைத் தொடர்ச்சியாகச் செய்து பழகிவிட்டால், வண்டி ஓட்டுவதுபோல, நீச்சலடிப்பதுபோல இதுவும் நம் மூளையில் ஒரு சிந்தனை உத்தியாகப் பதிந்துவிடும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த உத்தியைப் பழக்கிக் கொடுப்பது முக்கியம் என்கிறார் சூஸி.

ஒரு மாணவர் தன்னுடைய முதல் சிகரெட்டைப் பற்றவைக்கும்போது அல்லது முதன்முறையாக வகுப்புக் கட் அடிக்கும்போது அவர் 10-10-10 ஃபார்முலாவை யோசிக்கப் பழகியவராக இருந்தால் போதும். அதனால் உடனடியாகக் கிடைக்கும் சிகிச்சைவிட நீண்ட கால நோக்கில் தான் இழக்கக்கூடிய ஆரோக்கியம், நல்ல வாய்ப்புகள் போன்ற விஷயங்களை யோசித்துப் பார்த்து அந்த சிகரெட்டைக் கீழே போட வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படையில் 10-10-10 என்பது நம்முடைய ஒவ்வொரு செயலின் விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து செயல்படுவதற்குத் தூண்டும் சிறப்பான சிந்தனை உத்தி. சிக்கலில்லாத இந்த வழிமுறையைச் சரியானபடி பயன்படுத்திப் பழகினால் 10 நிமிடம் 10 மாதம் 10 வருடம், ஏன் 10 தலைமுறைகளுக்குக்கூட பயன்படும்படி வாழலாம்.

10-10-10 பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சொடு்க்குங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s