சொல்ல சொல்ல இனிக்கும் சொலவடைகள்

எது சொலவடை –

தமிழின் தனி அடையாளமான வட்டார வழி தமிழ்க் கட்டுரைகளை வாசிக்கும் போது கிடைத்த வார்த்தை இது. பொது தமிழில் பழமொழி. சொலவடை என்பது நாட்டார் வழக்கு. (நாட்டார் என்றவுடன் ஏதோ புது ஜாதி என்று நினைத்துவிட வேண்டாம். கிராமத்தார்கள் என்பதன் சரியான தமிழ்ச் சொல் நாட்டார்.)

சொலவடைகளை பலர் விடுகதை என்று பொருள் கொண்டுவிடுகின்றார்கள். அது தவறு. சொலவடைகள் சிந்திக்கவைத்து தெளிவுபெற வைக்கும் பழமொழிகள் என்பதே உண்மை. மேலும் சொன்னால் பழமொழிகளின் மிக சமீபத்திய சொல்லியல் வடிவம் என்று சொல்லலாம்.

பழமொழிகள் அனுபவத்தினால் சொல்லப்படுபவைகள். எனவே பழமொழிகளில் ஒரு மேதாவிதனம் இருக்கும், அத்துடன் அறிவுரை தோனியும் இருக்கும். ஆனால் சொலவடைகளில் கொஞ்சும் கவிதையும், துள்ளும் எள்ளலும் இருக்கும்.

உதாரணத்திற்கு பிறருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் அது உனக்கே கேடாக முடியும் என்பது அறிவுரை .

‘ வினை விதித்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ இது பழமொழி.

‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்பது சொலவடை.

சில சொலவடைகள் –

நான் வியந்த சில சொலவடைகள் இங்கே தொகுத்திருக்கிறேன்.

“ குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டுக்கிட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப்பெத்துக்கிட்டேன்”

“கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும் முடியுவா”

“கோவணத்தில ஒரு காசு இருந்தா
கோழி கூப்பிட பாட்டு வரும்”

“பேச்சுப் பிடிச்ச நாயி
வேட்டைக்கு உதவாது ”

“வண்ணாத்தி மூத்திரம்
தண்ணியில ”

“உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம் ”

‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’

“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”

“எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப்புழுக்கை எதுக்குக் காயுது”

‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’

பேச்சுவழக்கில் கேளுங்கள் –

தமிழ் திரையுலகின் அடிதடி கதைகளுக்கு அடித்தளமாக அமைந்த “தமிழ்” திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை ஊர்வசியின் சொலவடைகளை கேளுங்கள்.

“புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு
பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்”

“படுத்துக்கிட்டு தூங்கும் நாய்
நின்னுக்கிட்டு தூங்குமாம் பேய்”

“ஒடமரத்துல ஓநான் ஏறலாம்
பனமரத்துல பன்னி ஏறலாமா”

நன்றி –

ஜெயமோகன் – பழமொழிகள் ஓர் ஆய்வு

தீராத பக்கங்கள் – “மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்”

4 comments on “சொல்ல சொல்ல இனிக்கும் சொலவடைகள்

 1. Jawahar சொல்கிறார்:

  நல்ல தொகுப்பு.

  ’திருவண்ணாமலையில் திங்கிறதுக்கு திண்டிவனத்தில வாயைத் திறந்த மாதிரி’

  ‘அடியேன்னு கூப்பிட பொஞ்சாதி இல்லை புள்ளைக்குப் பேர் பொன்னுரங்கம்ன்னு வெச்சானாம்’

  இதெல்லாம் நான் கேள்விப்பட்டவை.

  நடிகர் ஹேமா பாஸ்கர் சொன்னது,

  ‘வேண்டா வெறுப்பா புள்ளை பெத்து காண்டா மிருகம்ன்னு பேர் வெச்ச மாதிரி’

  http://kgjawarlal.wordpress.com

 2. K. SUBRAMANIAM , MALAYSIA சொல்கிறார்:

  சொலவடைகள் பற்றியக் கட்டுரை நன்று. மலேசியாவில் இது பற்றிய நூலோ அல்லது கட்டுரையே காண்பது சிர்மம். சொலவடைகள் தொடர்பான நூல் கிடைக்குமா? நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s