தாய்தமிழ் தாலாட்டு பாடல்கள் தொகுப்பு

தாலாட்டு –

தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆரிரரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு முறைக்காதீங்க,.

பெரும்பாலும் குழந்தைகள் அழும் போது தூங்க வைப்பதற்காகவோ, சமாதானம் செய்யவோ பாடப்படும் இந்தப் பாடல்களில் பல்வேறான சுவாரசியங்களும் இருக்கின்றன. குழந்தையைப் பற்றி எதிர்கால சிந்தனைகள், பெருமைகள் இவற்றை தவிற கிண்டல், கவலை, தன் நிலை சொல்லும்படி பாடல்கள்கூட இருக்கின்றன.

உதாரணமாக தன் ஏழ்மை நிலையை உணர்த்தும் படியாக தாய் பாடும் பாடல்…

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

சரி, இது மட்டும்தானா… இல்லை இன்னும் சுவாரசியங்கள் அதிகமுள்ளவையும் இருக்கின்றன. அவைகள் வரும் நாட்களில்.,

இந்து மதத்தில் இறைவனை சேயாக பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் தான் இன்றும் பல வீடுகளில் கிருஷ்ணன் குழந்தையாகவே இருக்கின்றான். ஆயர் பாடி மாளிகையில் எனும் கவிப்பேரரசர் கண்ணதாசனின் தாலாட்டு கேட்க கேட்க திகட்டாதது.

ஆயர்பாடி மாளிகையில் –

ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)

நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)

கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)

ஆயர்பாடி மாளிகையில் ஒளிச்சித்திரம் –

தாலாட்டுக்கென தனி வலைப்பூ –

மீனாமுத்து அவர்கள் தாலாட்டுக்கென ஒரு தனி வலைப்பூ நடத்தி வருகிறார். இது வரை முப்பத்தி இரண்டு பாடல்களின் வரிகள் பதியப்பட்டிருக்கின்றன. அதிலே எனக்குப் பிடித்த ஒன்று,.

சாலை வழியுறங்க
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் தூங்க
நடுக்கழனி நெல் தூங்க
பாலில் பழந்தூங்க
பாதி நிலா தான்தூங்க

உன்னுறக்கம் நீ கொள்ள
உத்தமியா(ள்) தாலாட்ட
பொற்கொடியா(ள்)தாலாட்ட
புத்திரனே நித்திரை செய்
மங்கையர்கள் தாலாட்ட
மகராசா நித்திரை செய்!
கண்ணே என் கண்மணியே
கற்பகமே நித்திரை செய்
நித்திரையும் போவாயாம்
சித்திரப் பூந்தொட்டிலிலே!(ராராரோ..)

தலாட்டு வலைப்பூ

7 comments on “தாய்தமிழ் தாலாட்டு பாடல்கள் தொகுப்பு

 1. Jawahar சொல்கிறார்:

  ஆயர்பாடி மாளிகையில் என் அபிமானப்பாடல். நான் முதன்முதலில் மெடையேறிப் பாடுகிற வாய்ப்பு கிடைத்த போது அந்தப் பாட்டுத்தான் பாடினேன். (அதுக்கப்புறம் பெரிய பாடகனா ஆயிடல்லைங்கிறது வேறே விஷயம்)

  தாலாட்டுக்கு தனி வலைப்பதிவு இருக்கிறது நல்ல தகவல். நீங்க கோட் பண்ணியிருக்கிற பாட்டும் நல்லா இருக்கு.

  நானே எழுதி இசையைமைத்துப் பாடியிருக்கிற ‘பஞ்சமே இல்லாத தஞ்சாவுர் சீமையின்னு’ பாடல் என் தளத்தில ‘தாலாட்டுக் கேளுங்க’ என்கிற தலைப்பில போட்டிருந்தேன் கேட்டீங்களா?

  http://kgjawarlal.wordpress.com

 2. vairamuthu சொல்கிறார்:

  thangalathu thalattu valaipoovai yenakku anuppavum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s