வீடுகட்டும் போது முதியவர்களுக்காக கவணிக்க வேண்டியவை

என்னுடைய நண்பனின் அப்பாவிற்கு ஒரு சின்ன விபத்து. அவரைப் பார்த்து நலம் விசாரிக்க சென்றிருந்தேன். அவருக்கு முழங்காலில் இருந்த தோல் வெட்டுப்பட்டு நடக்க இயலாமல் இருந்தார். அவர்களின் வீட்டுக் கழிவரை வீட்டை விட்டு தனித்து கட்டப் பட்டிருந்தது பெரிய தொல்லையாகப் போனது. இந்தியன் மாடலில் இருந்த கழிவரை என்பதால் வெஸ்டன் கழிவரையின் மகிமை அப்போது தான் தெரிந்தது.

நமக்கு வீடு என்பது பெரிய கனவு. குழந்தையில் மணலில் வீடுகட்டுவதில் தொடங்கிய அந்த ஆசை சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. ஆனால் கட்டப்படும் சந்தர்ப்பம் கிடைத்தும் நம்மில் எத்தனை பேர் மிக தேவையான விசயங்களைக் கவணத்தில் இருத்துகிறோம் என தெரியவில்லை. கழிவரையுடன் கூடிய வீடுகள் எத்தனை பேர் வீட்டில் இருக்கின்றன.

நடந்து செல்லவே துயரப்படும் காலத்தில் படிக்கட்டுகளில் இறங்கி ஏறி கழிவறைக்கு சென்று வருவது எப்படி முடியும்.

இதோ முதியோர்களுக்காக கவணத்தில் வைக்க வேண்டிய விசயங்கள் –

பெரியவர்களுக்காக ஒதுக்கப்படும் அறைகள் வழவழப்பாக இல்லாது அமைக்க வேண்டும். க்ரிப்புடன் கூடிய தரையாக இருக்க வேண்டும்.

பார்வைத் திறனில் தடுமாற்றம் இருக்கும் என்பதால், “பளிச்” வெளிச்சமுள்ள, அதே சமயம் கண்களை உறுத்தாத “சி.எப்.எல்” ரக விளக்குகளைப் பொருத்தலாம்.

கட்டில்களின் உயரம் சராசரியைவிட சற்றுத் தாழ்வாக இருப்பது நல்லது. கட்டிலின் அருகிலேயே சிறு மேஜை இருந்தால், மீக்கு கண்ணாடி, மாத்திரைகள், தண்ணீர், புத்தகம் போன்றவற்றை அதிலேயே வைத்துக் கொள்வது அவர்களின் சிரமத்தைக் குறைக்கும்.

அறையின் விளக்கு, மின் விசிறி போன்றவற்றை கட்டுப்படுத்தும் சுவிட்சகள் சுவரில் உயரத்தில் ஒன்று இருப்பதுடன், கட்டிலில் இருந்த படியே பயன்படுத்தும் வகையில் கைக்கு எட்டும் தொலைவில் ஒன்று இருப்பது நல்லது.

சுவர்கள் உறுத்தாத நிறுத்திலும், எதிர்எதிர் சுவர்கள் வேறுபட்ட நிறத்திலும், கதவு மற்றும் அலமாறிகள் அடர் நிறத்திலும் வண்ணம் பெற்றிருக்க வேண்டும்.

கழிவரையைப் பொருத்த வரை அங்கு சரிபாதி இடம் உலர் தரையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். தரை எந்த நிலையிலும் பிடி இழக்காத வைகையில் இருக்க வேண்டும். சுவரோரம் கைப்பிடி வைப்பது மிகவும் நல்லது.

இந்தியன் டைப் கழிவரையுடன் வெஸ்டர்ன் டைப் கழிவரையையும் சேர்த்து அமைப்பது சிறந்தது. சிறுநீர் உபாதையில் மற்றவர்களைவிட முதியவர்கள் அதிக முறைகள் இரவில் எழுவார்கள்.

எனவே பாத்ரூமில் ஸ்விட்ச் போட்டதும், அந்தப் பளீர் வெளிச்சம் தூக்கத்தினை தெரித்தோட செய்திடும். தூக்கமிழந்த இரவுகள் எத்தனை கொடுமையானது என சொல்ல தேவையில்லை. எனவே தரைக்கு மட்டும் வெளிச்சம் தரும் விளக்குகளை அமைத்தல் நலம்.

இயற்கையை நேசிக்கும் மூத்த தலைமுறையினருக்கு ஐன்னலை ஒட்டியே வெளிப்புறத்தில் பசுமையான செடி, கொடிகலை வளர்க்கலாம்.

2 comments on “வீடுகட்டும் போது முதியவர்களுக்காக கவணிக்க வேண்டியவை

  1. omvijay007 சொல்கிறார்:

    wonderful suggestions

    -Vijay

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s