வினோதமான வலைப்பூக்கள்


விளையாட

57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.

Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மிகச் சிறிய வலைப்பூ

உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.

guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்

மிக நீளமான வலைப்பூ

18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .

highest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

சொடுக்காமல்

இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.

dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

வித்தியாசமான கூகுள் சர்ச்

இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இங்கு சொடுக்கவும்

சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி

நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.

இங்கு

அனிமேசன்

மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.

அனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஆன்லைன் மியூசியம்

மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.

coudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

குடும்பம்

நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.

familysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

2000 நகைச்சுவைகள்

2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.

jokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பணத்தினை மடிக்கும் கலை

பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.

foldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

Programmer or Killer?

இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.

malevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

PhotoshopDisasters

புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.

photoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

இந்த இடுக்கைக்கு தமிழிஸில் ஓட்டுப் போட்டு அதிக மக்களை சென்றடைய உதவுங்கள்.!.

4 comments on “வினோதமான வலைப்பூக்கள்

  1. akbar சொல்கிறார்:

    பயனுள்ள நல்ல பகிர்வு நன்றி சார்.

  2. ஒன்னும் தெரியாதவன் சொல்கிறார்:

    சில மேட்டர் வலை லிங்கும் கொடுத்திருக்காம்ல

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s