அமில வீ்ச்சு – கனத்த இதயம் படைத்தவர்களுக்கு மட்டும்.

நேற்று சென்னை மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் இதமாக ஒலித்தது. சில நிமிடங்களுக்கு பிறகு தான் அந்தப்பாடல் யாரோ ஒருவரால் பாடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. குரலில் அத்தனை இனிமை. யார் பாடுகிறார் என ஆவலோடு பார்க்க முற்பட்ட போது கொஞ்சம் அதிர்ந்து போனேன். முகமே தெரியாத அளவிற்கு சிதைந்து போயிருந்த பெண்மணி பாடிக்கொண்டிருந்தார்.

எல்லாப் பெண்களைப் போலவும் ஒரு காலத்தில் அவருக்கும் அழகிய முகமுண்டு. ஆனால் இப்போது அழகிய குரலைக் கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். இது ஏன் நடந்தது. யார்க் காரணம்?. உண்மையைச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?. ஒருவகையில் நாமும் இதற்கு காரணம். எப்படி? தொடர்ந்து படியுங்கள்.

ஒரு பெண் (காதலியோ, மனைவியோ) தவறு செய்வதாகத் தோன்றினால், அதற்கு தண்டனையாக ஆண் செய்வது அவளது அழகை குழைப்பதுதான்.அதற்கு காரணம் ஒரு பெண் என்றாலே அவளுக்கு அழகு முக்கியம் என இந்தச் சமூகம் கருதுகிறது. (சமூகம் என்பது நம்மையும் சேர்த்துதானே!)

முடியை வெட்டிவிடுவது, மொட்டை அடிப்பது என தொடங்கும் இந்த தண்டனைகள் பெரும்பாலும் உச்சக்கட்டமாக அமில வீச்சில் போய் முடிவடைகின்றன. மிக சமீபகாலமாக இந்த பழக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

முடியை அறுத்து துன்புருத்துதல்

சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுலட்சனா என்ற மாணவி இரட்டை ஜடை போடாமல் ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஷகீலா சுலட்சணாவின் ஜடையை கத்திரிக்கோலால் கரகரவென அறுத்து கையில் கொடுத்து இனிமேல் ஒற்றை ஜடையில் வந்தால் இதுதான் கதி என்றும் எச்சரித்தார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி மேலும் படிக்க இங்கு சொடுக்கவும்.

மொட்டையடித்து துன்புறுத்துதல்

இந்த சம்பவம் கொஞ்சம் பழையது. கோவையில் இப்ராகிம் என்பவர் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்து மனைவி நதீராபானுவுக்கு மொட்டையடித்து துன்புறுத்திய சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

அமில வீச்சு

காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.

ஏப்ரல் 28ம் தேதி திருச்சியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது’ ஆசிட்’ வீசியுள்ளான் காதலன். அவனுடைய வாக்குமூலத்தில் சொல்லப்பட்டது,.

சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.

அமில வீச்சில் தாக்குதலுக்குண்டான சில பெண்கள்

மேலும் பார்க்க-

எண்ணச் சிதறல்கள்.

The New York Times காணோளி

Acid Violence

இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டு போட்டு அதிக மக்களை சென்றடைய உதவுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s