பிரபலங்களின் வலைப்பூக்கள்

தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள் பலரும் இணையத்தில் தங்களுக்கென ஒரு வலைப்பூவை ஆரமித்து இணைய சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கு தெரிந்த சில பிரபலங்களின் வலைப்பூ முகவரியை இங்கு தருகிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் இன்று பலரும் சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதுவதற்கு இவர் எழுத்துகள் ஒரு காரணம். இவரின் கதாவிலாசம் என்ற புத்தகத்தில் ஐம்பது சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்திருப்பார். இதிலிருந்தே இவருக்கு இலக்கிய உலகில் எத்தனை அனுபவம் இருக்கிறது என அறிந்து கொள்ள முடியும்.

இவர் ஒரு தேசாந்திரி. உலகமுழுவதும் சுற்றி சுற்றி ஏகப்பட்ட அனுபவங்களை வைத்திருக்கின்றார். உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றியும் இவருக்கு பரிச்சயம் உண்டு. பாபா, பீமா போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

எஸ்.ராவின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஜெயமோகன்

உங்களுக்கு இலக்கிய உலகம் பரிச்சயம் என்றால் நிச்சயம் ஜெயமோகனைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மதங்களைப் பற்றி பேசத் தயங்குகின்ற எழுத்தாளர்கள் மத்தியில் தன்னுடைய தீர்க்கமான பார்வையை செலுத்துபவர்.

இணையத்தில் மிக அதிகமாக இவருடைய கட்டுரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசகனின் தனிப்பட்ட கேள்விக்கும் அழகாக பதிலளித்துக் கொண்டிருக்கின்றார். நான்கடவுள் படத்தில் இவரின் வசனங்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

ஜெயமோகனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

தமயந்தி

தமயந்தியைப் பற்றி எஸ்.ராவின் புத்தகத்தில் தான் படித்து தெரிந்து கொண்டேன். அக்கக்கா குருவிகள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் எல்லோராலும் அறியப்படுகிறார்.

தமயந்தியின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஞாநி

ஞாநியை எனக்கு ஓ பக்கங்கள் மூலமாகதான் தெரியும். அரசியலில் தன்னுடைய கருத்துகளை தயங்காமல் சொல்பவர். இவர் தீம்தரிகிட என்ற பத்திரிக்கையை நடத்தி வந்துள்ளார். அதில் உள்ள பல கட்டுரைகள் எல்லா காலத்திற்கும் பொருந்துபவை. இவற்றைக்கூட தன்னுடைய வலைப்பூவிலேயே இணைத்துள்ளார்.

ஞாநியின் வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

சாரு நிவேதிதா

தமிழில் குறிப்பிடத் தக்க ஒரு எழுத்தாளர். நித்தியாநந்தரைப் பற்றி இவருடைய வலைப்பூவில் “கடவுளைக் கண்டேன்” என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இப்போது இவர் நித்தியானந்தரின் லீலைகளை குமுதம் ரிப்போட்டரில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சாரு நிவேதிதாவின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மனுஷ்ய புத்திரன்

தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது.

மனுஷ்ய புத்திரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பாலக்குமாரன்

படிக்க படிக்க திகட்டாத நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். இவரின் உடையார் தொகுப்பு மிகவும் பிரபலம்.

பாலக்குமாரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மாலன்

எழுத்தாளர் மாலன் அவர்களின் வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பாமரன்

இவர் கேலியும் கிண்டலும் சேர்ந்த வகையில் சமுதாய அவலங்களைப் பொதுக்கடிதங்கள் (Open Letters) மூலமாக விமர்சிப்பதில் பெயரெடுத்தவர்.

பாமரனின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

அ. முத்துலிங்கம்

எஸ்.ராவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

முத்துலிங்கத்தின் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

இந்த இடுகை மேலும் மேலும் பிரபலங்களின் வலைப்பூகளைச் சந்திக்கும் போது திருத்தப்படும். உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யாராவது வலைப்பூ வைத்திருந்தால் மறுமொழியில் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே.!.

இந்த இடுகைக்கு தமிழிஸில் ஓட்டு போட இங்கு சொடுக்கவும்.

8 comments on “பிரபலங்களின் வலைப்பூக்கள்

 1. Vijay சொல்கிறார்:

  Best wishes for U

 2. MSK சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி !!! சாருவின் நித்யானந்தன் பற்றிய தொடர் கட்டுரை குமுதம் ரிப்போர்டரில் வெளிவருகிறது என்று நினைக்கிறன். ஜூனியர் விகடனில் அல்ல.

  மேலும் சில தமிழ் எழுத்தாளர்களின் வெப் தளங்கள் :
  இரா.முருகன் : http://www.eramurukan.in/tamil/home.html
  பா ராகவன் : http://www.writerpara.com/paper/
  முகில் : http://www.writermugil.com
  ஆர் முத்துக்குமார் : http://rmuthukumar.com/
  என் சொக்கன் : http://nchokkan.wordpress.com/
  சோம வள்ளியப்பன் : http://www.somavalliappan.com/site/
  ச ந கண்ணன் : http://www.sanakannan.com
  மருதன் : http://www.marudhang.blogspot.com

 3. சிரவணன் சொல்கிறார்:

  இணையத்தில் புதிதாக வலம்வரத் தொடங்குவோருக்கு பயனுள்ள தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.

 4. Muthu Nilavan சொல்கிறார்:

  தமிழ் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் உங்கள் முயற்சி மிகவும் பயனுடையதுதான். ஆனால் இதில் நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் இரண்டு பிழையாக உள்ளதே! நீங்கள் கவனிக்கவில்லை சரி. ஓராண்டுக்கும் மேலாக யாரும் இதைச் சுட்டிக்காட்டவில்லையா?
  அன்புகூர்ந்து சரிசெய்யுங்கள்.
  1.கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வலைப்பூ என்று நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கினால் https://sagotharan.wordpress.com/ எனும் உங்களின் வலைதான் திறக்கிறது!
  2.கவிஞர் அ.முத்துலிங்கத்தின் வலைப்பூ என்று நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கினால http://amuttu.com/ எனும் வேறொரு புதிய வலையில் மாட்டிக்கொள்ள வேண்டியதாகிறது.
  அன்புகூர்ந்து சரிசெய்யுங்கள்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன்
  புதுக்கோட்டை -622 004
  19-05-2011
  எனது வலைப்பூ :www.valarumkavithai.blogspot.com

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நாள்பட்ட கவணிப்புகள் இன்மையால் வந்த பிரட்சனை. அடிக்கடி கைப்பேசி எண்ணை மாற்றுவது போல வலைப்பூ முகவரிகளையும் மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள், போல!. எல்லா இணைப்புகளும் முன்பு இயங்கிக் கொண்டிருந்தன.

   http://amuttu.com/index.php?view=pages&id=110 என்பதாகத்தான் முத்துலிங்கத்தின் வலைப்பூ இருந்தது. அது வேறொரு தளமாக மாற்றப்பட்டிருப்பதை இப்போதுதான் காண்கிறேன்.
   டோண்டு அவர்கள் கொடுத்திருக்கும் வலைப்பூ இணைப்பினை பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
   http://dondu.blogspot.com/2010/07/blog-post_26.html
   http://www.amuttu.net/ என்ற இணைப்பில் வலைப்பூ இயங்குகிறது.

   சரி செய்திருக்கிறேன். உங்களின் கணிவான செயலுக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s