இது தான் இந்தியா-ஐபில் vs மானம்.

ஒரு புறம் சொதப்பலாக விளையாடியே பழக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், அபாரமாக கைப்பற்றிய வைரக் கோப்பை. அதற்காக ஆர்ப்பரிக்கும் மக்களும், கொண்டாட்டங்களும். முதன் முதலாவதாக இந்திய கேப்டன் கைப்பற்றிய கோப்பை என்பதால் இன்னும் கூடுதல் உற்சாகம்.

மறுபுறம் பசிக் கொடுமை தாங்க முடியாமல், பூக்களை காய வைத்து தின்று உயிர் வாழும் கூட்டம். என்ன எங்கே என கேட்கின்றீர்களா?. இது சோமாலியாவில் இல்லை. இந்தியாவில்,.

தினமலரில் இன்று வெளிவந்த அந்தக் கட்டுரை இதோ!.

லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், ‘மாகுயா’ எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தூண்களை தூங்க வைக்க புகையிலை போதைமருந்து பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தால் நமக்கு சென்னை சூப்பர் கிங்சின் வெற்றி மறந்து போய்விடும்.

வாழ்க ஜனநாயக இந்தியா!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s