கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்

சற்குரு மற்ற மத தலைவர்கள் போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமானவர். இறையை மாதவிடாய் காலங்களில் பெண்கள் நினைக்கவே கூடாதென்று சொன்னவர்களை, இறையை வணங்குவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என வெகுன்டு எழுந்தவர். கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் ஆன்மீகம் என அவருடைய சொற்பொழிவில் எப்போதும் ஒரு கலவை இருக்கும். கீழே இருப்பவை அவருடைய ஆன்மீகச் சிந்தனைகள்.

ஆரோக்கியம் தரும் ருத்ராட்சம்

* மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

* ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், அதை சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் தூய்மையடைகிறது. இந்த ஒளிவட்டம் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும்.

* நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால், ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.

* அபூர்வ ஆற்றல் கொண்ட ருத்ராட்சம் பலவகைப்படும். இருமுகம் கொண்ட ருத்ராட்சத்திலிருந்து 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் உள்ளது.

* ஒருமுகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. (சரியான வழிகாட்டுதல் இன்றி இதை அணிவது நல்லதல்ல). துவிமுகி என்னும் இருமுகம் கொண்ட ருத்ராட்சம் பொருள் வளத்தை தரும்.

* ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.

திருநீறு அணிவது ஏன்?

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்

* மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.

* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

* எல்லாவற்றையும் படைத்தவன் உ<ங்களுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

– சத்குரு ஜக்கிவாசுதேவ்

6 comments on “கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்

 1. Rajkumar, TNAU சொல்கிறார்:

  அய்யா, வணக்கம் உங்களுடைய பல பதிவுகள் என் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை, ஆனால் இப்பதிவு எனக்கு நன்றாக புரிகிறது. சற்குரு கோவையில இவரு ரொம்ப பிரபலம். நான் வெளியூர்காரன் நாத்திகம் பேசும் என் அண்ணன் கூட உவருடைய யோகாசணங்களை கற்றுகொள்ள போகும் போது ஆச்சரியபட்டேன். என் நண்பர்கள் அனைவரும் ஒரு கும்பலாக இவருடைய வகுப்புக்கு செல்லும் போது அது தொடர்ந்தது. நான் ஒரு நாத்திகவாதி, தேவையான அளவு பெரியார் புத்தகங்களை, படித்து அவருடைய அறிவை பெற்றுள்ளேன்.

  எனக்கு சற்குரு சொல்லும் பெரியதாக பாதிக்கவில்லை. நமக்கு தெரிந்ததுதானே அது என்றிருக்கீறேன். ஆனால் நண்பர்கள் வற்புரித்தலினால், அவருடைய ஆசிரமம் செல்லும்போது, அனைவரும் ஒரே சிந்தனையில் இருக்கும்போது எனக்கு வேறு சிந்தனை ஏற்பட்டது. அவருடைய ஆசிரமம் எவ்வளவு பெரியது? எத்தனை ஏக்கர் என தெரியவில்லை. அதை கட்ட எவ்வளவு செலவு ஆகீருக்கும்? தேவையில்லாத அளவு கட்டிடங்கள், அழகு வடிவங்கள். Thunder Park, theme parkஒன்றில் நுழைவது போல இருந்தது.
  இராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் பார்த்து இருக்கிறீர்களா? எவ்வளவு பெரிய கட்டிடகலை, ஆனால் அங்கே குப்பை மேட்டில் இருப்பது போல இருக்கும். அதற்கு செலவு பண்ணி அழகு படுத்தாமல், தேவையில்லாத இந்த ஆசிரமத்துக்கு இவ்வளவு அளங்காரம் எதற்கு?
  அங்கே வரும் பெரும்பாலனவர்கள் வசதி படைத்தவர்கள், அவர்களுக்காகதான் இவ்வளவு ஆடம்பரமோ?
  சீமான் வாஸ்து பற்றி ஒரு மேடையிலே சொன்னார்.. வீடு இருக்கரவனுக்குதான்பா, வாஸ்து எல்லாம்… வீடே இல்லாதவனுக்கு வாஸ்து கிடையாது. ஒரு கூரை வீட்டுக்கு வாஸ்து பார்க்க இங்கே யார் இருக்கா? தம்பி…..
  அதுபோலதான், இவர்களுமா?
  நீங்கள் ருத்ராட்சம், முகம் அப்படி அப்படினு நிறைய சொன்னீர்கள், அது பற்றி எனக்கு தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. ஆனால், என் நண்பன் ருத்ராட்சம் என்று ஒன்னு வாங்கிகொண்டு, அதை ஒரு டம்ளர் நெய்யில் நனைத்து வைத்து, அதர்கு சூடம் காட்டி stop this bullshit…. இது தேவையா? நம்மளே நம்முடைய அறிவை வளர்த்துக்கு கொள்ள முடியாதா? அதற்கு ஏன் சற்குரு காலில் போய் விழவேண்டும்…
  நீ இவர் பேச்சை கேள்? நீ அவர் பேச்சை கேள்? என்று என் இளைஞர்களை இன்னொருத்தன் காலிலே போய் விழசொன்னால், அவர்கள் பேச்சை அவர்கள் எப்படி கேட்பார்கள்? இவருடைய விளம்பரமும், வியாபாரமும் நன்றாக நடக்க என் சமுதாயத்தினரை கியூவில் நிக்க சொல்லுகிரீர்களா?
  தன்னம்பிக்கையும், நல்ல அறிவும் உள்ள இளைஞனுக்கு எதற்கு ருத்ராட்சம்? எதற்கு சற்குரு? ஏன் அந்த கடவுளே எதற்கு? தேவையில்லை.

 2. Rajkumar, TNAU சொல்கிறார்:

  அப்புறம் அய்யா, வெயிலுக்காக அப்படி என்று நீங்கள் ஒரு படம் போட்டுள்ளிரே? எதற்கு அது?
  நண்டு கதை போல, ஒருவன் போட்டால் அதயே, அனைவரும் செய்ய வேண்டுமா? எனை போற்றவர்கள் அலுவலகத்தில் கிடைக்கு நேரத்தில், உங்கள் பதிவை படிக்கும் போது, அருகில் இருப்வர்கள் ஏதோ, செக்ஸ் கதை படிக்கிறான் போல என நினைப்பார்கள்???
  பெண் மட்டுமே அழகு கிடையாது…. ஒரு அழகான மலரை போடுங்கள், ஒரு இயற்கை காட்சி… அல்லது ஒரு நாய்குட்டி, பூனைகுட்டி படம் கூட போடலாம்….
  சமுதாய விழிப்புணர்வு படம் போடுங்கள், கருத்து படம் போடுங்கள், இல்லை ஒரு பெண்ணின் கண்களை படமாக போடுங்கள், ஒரு திறமை வாய்ந்த பெண்ணின் படத்தை போடுங்கள்…. கல்பனா சாவ்லா, (ரொம்ப ஓவரா இருக்கோ?) மாத்தி யோசிங்க..

  இது கட்டாயம் இல்லை, வேண்டுகோள் மட்டுமே… ஆனால் பெண்ணின் மார்பை விட, பெண்ணின் கண்கள்தான் அழகு, அவளூடைய திறமைதான் அழகு… என்பதை உணர்த்தும் அளவுக்கு படத்தை போட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். நானும் அலுவலகத்தில் உட்கார்ந்து உங்களை வலைதளத்தை சிரமமில்லாமல் படிக்கலாம்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  “சற்குரு” வைப் பற்றி சில நல்லது
  கெட்டதுகளை என்னால் உணர முடிந்த
  அளவிற்கு வெளிப்படுத்தி இருக்கிறேன்.
  என் வலைப்பதிவில் –

  http://www.vimarisanam.wordpress.com

  தயவுசெய்து வந்து பார்த்து விட்டு
  உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

  வாழ்த்துக்களுடன்

  – காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s