வெட்டி வேலையே ஒரு கலைதான்

காகிதங்களை வெட்டி அழகான உருவங்களை செய்து தருவதில் என்னுடைய பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மிகவும் திறமையானவர். பிராமணன் என்ற செருக்கு அவரிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். படிப்பது என்பது பிராமணர்களுக்கே உரியது என்று சொல்லும் அளவிற்கு எங்கள் பள்ளியில் ஏகப்பட்ட பிராமண ஆசிரியர்கள் இருந்தார்கள்.

அவர் அடிக்கடி ஹிந்தியைப் பற்றி கூறுவார். தி.மு.க தலைவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெரும் முன்பு நடந்த கதைகளை சொல்லுவார். சமஸ்கிருதம் ஹிந்தியின் சில இயல்புகளை ஒத்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். சமஸ்கிருதம் அறிந்த அவர்களுக்கும் ஹிந்தி கடுமையாகவே இருந்திருக்கிறது.

பரிச்சையில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளையும், அப்படியே விடைத்தாளில் எழுதினாலே சராசரி மதிப்பெண்களை ஆசிரியர் போட்டு விடுவார் என்று அடிக்கடி சொல்லுவார். படிக்கும் காலங்களில் எனக்கு நல்ல வேளை இப்போது ஹிந்தி படிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என சந்தோசப் பட்டிருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிறகு ஹிந்தி மொழியை அறிந்திருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்குமென தோன்றியது.

இப்போது சென்னையிலேயே தமிழ் மொழி தெரியாத பல ஹிந்திகாரர்கள் கடை வைத்திருக்கின்றார்கள். பெரும்பாலான நவீன விடுதிகள், சிற்றுண்டி கடைகளில் இவர்களே குவிந்திருக்கின்றார்கள். சரி காகித கதைக்கு வருவோம். இப்படி அவர் காகி்தத்தை அழகாக வெட்டி உருவங்களை செய்வதைப் பார்த்தப் பிறகு, அதில் ஆர்வம் ஏற்பட்டு பல நோட்டுகளை வீணடித்திருக்கிறேன்.

இதெல்லாம் இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிறகு எனக்குள் எழுந்த நினைவுகள்.

2 comments on “வெட்டி வேலையே ஒரு கலைதான்

  1. Surendran சொல்கிறார்:

    //இப்படி அவர் காகி்தத்தை அழகாக வெட்டி உருவங்களை செய்வதைப் பார்த்தப் பிறகு, அதில் ஆர்வம் ஏற்பட்டு பல நோட்டுகளை வீணடித்திருக்கிறேன்//

    உண்மைதான். நம்முடைய கற்பனைகளை வெளிக்கொணர காதிதத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தினோம் என்று இப்போது நினைத்தாலும் சுகம்தான். உதாரணம் : கத்திக்கப்பல் செய்வது இப்போது மறந்துவிட்டது,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s