ஐ.பி.எல் போட்டியும் இலவச தரிசனமும்

சென்னை சேப்பாக்கத்தில் பிரம்மாண்டமான ஐ.பி.எல் போட்டி இரண்டு நாளுக்கு முன் நடந்தது. முதன் முதலாக போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றேன். நேரில் பார்க்கிறோம் என்ற பிரம்மிப்பு இருந்தாலும், பந்து எங்கே போகிறது, யார் விளையாடுகிறார்கள் என்று அறிவது சிரமமாக இருந்தது.

சரி ஆடும் அழகிகளை பார்க்கலாம் என்று போனால் ஐந்து ஓவரிலேயே அவர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். இரண்டு முன்று ஸ்டெப்ஸ் தவிற வேறு புதிதாக ஆடவில்லை. அதைவிட நாக்கு மூக்க பாட்டிற்கு செத்துபோனவன் கையில் வெத்தலைப் பாக்கு கொடுத்தது போல ஆடவும், மிகவும் நொந்து போனேன்.

என்னுடன் வந்த இரண்டு நண்பர்களும் கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் என்பதால் அவர்கள் முழுவதையும் ரசித்தார்கள். நான் வீட்டிற்குப் போய் பார்த்துக் கொள்ளாலாம் என ரயில் நிலையத்திற்கு வந்தேன்.

உயிரை துச்சமாக மதித்து ஏகப்பட்ட இளைஞர்கள் ரயில் டிராக்கிலிருந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்டேடியத்தில் நான் பார்த்ததை விடவும் அங்கு நன்றாக தெரிந்தது. அப்போது ஒரு பிச்சைக்காரர் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வந்த காவல் துறையினரிடம் ரயில் நிலைய அதிகாரி புகார் சொல்லவும் அவர்கள் இளைஞர்களை விரட்டினர். அந்தப் பிச்சைகாரரையும் விரட்டிவிடுவார்களோ என பயந்தேன். அவர் நிலையத்திற்குள்ளிருந்தே பார்த்ததால் அவரை எதுவும் சொல்லவில்லை.

அந்த சுவாரசியமான புகைப்படங்கள் இங்கே…

One comment on “ஐ.பி.எல் போட்டியும் இலவச தரிசனமும்

 1. puduvaisiva சொல்கிறார்:

  “அந்தப் பிச்சைகாரரையும் விரட்டிவிடுவார்களோ என பயந்தேன்”

  கவலைபடதே சகா
  இவரை போல பிச்சைகாரர்களுக்கும் நிலைய காவலர்க்கும் எப்பொழுதும் 50 : 50 உடன்பாடு உண்டு
  இவர்களுடைய தயவாலே காவலர்கள் இரயில் நிலையத்தில் நடக்கும் திருட்டு , பிட்பாக்கட், மயக்க பிஸ்கட் பார்ட்டி, கஞ்ச பார்ட்டி
  போன்ற நபர்களின் நடவடிக்கையை கவனிக்கும் இவர்கள் பல தகவல்களை காவலருக்கு தருவர்கள் மேலும் பல நேரங்களில் இவர்களிடம் இருந்து வட்டி இல்ல கடனாக காவலர்கள் பணம் பெறுவதும் உண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s