தலைசிறந்த குறும்படங்கள்

இரண்டு மூன்று மணிநேரம் படம் பார்த்துவந்தாலும் மனதை தொடாத கதைகள் இருக்கின்றன. என்ன சொல்ல வருகின்றார்கள் என புரியாமல் சில நேரங்களில் மண்டை காய்ந்ததுண்டு. தமிழ் படங்கள் என்று மட்டுமல்ல எல்லா மொழிப் படங்களிலும் இந்த பிரட்சனை உண்டு.

ஆனால் குறும்படங்களில் இந்தப் பிரட்சனை இல்லை. ஓடுவது ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ என்றாலும் சொல்ல வந்ததை நச்சென சொல்லிச் செல்லும் படங்கள் இவை. குறும்படங்களை தூர்தசனில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு தமிழனில் பார்த்ததாக ஞாபகம்.

இணையத்தில் இதெல்லாம் கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. தமிழிஸ் இணையதளத்தில் இருந்த
‘கர்ண மோட்சம்’ – விருதுகள் பெற்ற கூத்துக் கலை என்ற தலைப்பில் மறந்து போகாத சில வலைப்பூவையில் எழுதப்பட்ட பதிவைப் படித்தேன், அதில் கொடுக்கப்பட்ட இணைப்பை பயண்படுத்தி யூ டியூபில் பார்த்தேன். அருமை.

அதன் பின் தேடல் அதிகமானது.

மறைபொருள் –

எனக்கு அடுத்து கிடைத்த குறும்படம் இது. ஒரு பெண் குளித்து முடித்து வந்து கூந்தலை துவட்டத் தொடங்குகிறாள். பின்பு ரசித்து ரசி்த்து அலங்காரம் செய்கிறாள். மெல்லிய இசை பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறது. வலையல், தோடு வரை எல்லாவற்றையும் அணிந்து கொண்டப் பின் பீரோவை திறக்கிறாள்.அதிலிருந்து பர்தாவை எடுத்து அணிகிறாள். வெறும் கண்கள் மட்டும் தெரிகின்றன.

மறைபொருள் குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.

வர்ணம் –

இந்துக் கோவில்களில் நடக்கும் பல கொடுமைகளில் ஒன்று தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது, அதைப் பற்றி சித்தரிக்கும் படம் இது. சாக்கடை அல்ல தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் நபர்கள், சாமியை தரிசணம் செய்ய அனுமதிப்பதில்லை. கோவில் பிரகாரத்தில் அனுமதிக்கப்படும் மக்கள், கருவரைக்குள் அனுமதிப்பதில்லை. இது காலம் காலமாக நடந்துவருவது.

இந்துக்கள் ஒன்று சேர்ந்து மொத்த கோவில் அமைப்பையும் மாற்றினால் தான் இதற்கு விடிவு. அதற்கு பிராமணியத்தை ஒழித்தால் மட்டுமே நடக்கும்.

வர்ணம் பாகம் 1 குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.

வர்ணம் பாகம் 2 குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.

13 comments on “தலைசிறந்த குறும்படங்கள்

 1. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  நன்றி ஜெகதீஸ்வரன். உங்கள் தேடல் உற்சாகம் ஊட்டுகிறது. மறைபொருள் பார்த்தேன். மனதைத்தொடுவதாக இருந்தது.

 2. puduvaisiva சொல்கிறார்:

  நல்ல குறும்படங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகா

 3. sakthivel சொல்கிறார்:

  vannakkam JAGADEESH anna , ungal site miga miga arumai vayathuku yatrar pola thgaval ulladthu , ungal padaipu innum athigarikkavum,

  qus:

  kadavul irrukirar ra yenna yennaku santhagam ullathu athi patri ingu villakavum anna ,

  ans : …………………..

 4. sakthivel சொல்கிறார்:

  hiiiiiiiiiiiiiiiiiiiii

 5. கோகிலா சொல்கிறார்:

  நல்ல படங்கள்.

  மறைபொருள் படத்தினை எல்லா பெண்களும் பார்க்க வேண்டும். சிலர் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு போக அறிவுருத்தப்படுகிறார்கள். பாவமாக இருக்கிறது. சுதந்திரம் வழங்கி விட்டால், சிலர் அம்மனமாக சுற்றுகிறார்கள்.

  பார்க்க,….

  http://www.google.co.in/images?q=actress+hot&oe=utf-8&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&um=1&ie=UTF-8&source=univ&ei=hsNRTIKUNJTovQOByNjsBA&sa=X&oi=image_result_group&ct=title&resnum=1&ved=0CC0QsAQwAA&biw=1024&bih=550

 6. பவித்ரா சொல்கிறார்:

  ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.

  இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

 7. கிஅ சொல்கிறார்:

  குறும் பட இயக்குனர்களுக்கு அருமையான வாய்ப்பு
  மேலும் விபரங்களுக்கு

  கி.அ
  குறும் பட இயக்குனர்
  தொடர்புக்கு : +91 95 66 166 066
  kurumpadangal@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s