பொம்பளைக்கு ஒன்னும் தெரியாது

சென்ற குடியசு தினவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. கொடியேற்றுவதை பார்க்க எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வருவது வழக்கம். இந்த முறையும் அப்படி தான் இருந்தது. அதில் கொடியேற்றத்தை பார்க்க வந்த முதியவர் ஒருவருக்கு முன்னால் இருந்த பள்ளிகள் பெண்கள் மறைத்தபடி இருந்தார்கள்.

பல மைல் தூரம் கடந்துவந்து கொடியேற்றத்தை காண முதியவர் “அம்மா, கொஞ்சம் நகர்ந்து நில்லுமா, கொடி சரியா தெரியல” என்றார். அதற்கு அந்தப் பெண்கள் நகர்ந்து நின்றுருப்பார்கள் என நீங்கள் நினைத்தால், அப்பாவிகள் நீங்கள். அவர்களில் ஒரு பெண் கேட்ட கேள்விதான், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இருந்தது. “யேய் கிழவா, என்னைப் போய் அம்மாங்கிற, உனக்கு நான் அம்மான்னா. உங்கப்பாவுக்கு நான் யாரு?” என்று கூற அந்த மனிதர் ஆடிப் போய்விட்டார். கொஞ்சம் நிதானித்து பின்பு நகர்ந்து சென்றார்.

பெரும்பான்மையான ஆண்கள் இன்னும் பெண்களுக்காக பரிந்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான தகுதியை பெண்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

என்னுடன் வேலை செய்த ஒரு நண்பனுக்கு டேட்டிங் அனுபவம் இருந்தது. அவனுடன் டேட்டிங் சென்றது ஒரு பிரபல கல்லூரி மாணவி. அந்தப் பெண் அவனிடம் கேட்டது மூன்றே மூன்று விசயங்கள் மட்டுமே.

1. பயணத்திற்காக பைக்.
2. ஒரு சுடிதார்.
3. சாப்பாட்டிற்கும் போக்குவரத்திற்கும் பணம்.

கல்லூரிப் பெண்களின் கற்பை வெளிநாடுகளில் ஏலம் விடுவதாக செய்தியை படித்திருப்பீர்கள். ஆனால் இது நடந்தது சிங்காரச் சென்னையில்தான்.

கட்டிய மனைவியை கைநீட்டி அடித்தல் கூடாது என்ற சட்டம் வந்தவுடன் ஏகப்பட்ட வழக்குகள் ஆண்கள் மீது தொடுக்கப்பட்டது. இதற்கு குடும்ப வன்முறை மட்டுமல்லாமல், கணவன் மீதான பகையும் ஒரு காரணம் என்று சொன்னார்கள் வழக்கறிஞர்கள். கள்ளக் காதலுக்கு இடையூராக இருக்கும் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்யும் அளவிற்கு முன்னேறி விட்ட தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இது ஒரு பெரிய காரியமே இல்லை.

ஆண்கள் பெண்களை போற்றுவதற்கு தாய்மைதான் முதல் காரணம். ஆனால் சில பெண்கள் தங்கள் சுகத்திற்காக பிஞ்சுகளை கொன்று விடும் கொடூரமும் பரவிக்கொண்டு வருகிறது. சின்னத்திரையும், பெரிய திரையும் கள்ளக்காதலை ஆதரித்து சமூக புரட்சி செய்து கொண்டிருக்கின்றன.

பெண்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இது தெரியாத ஆண்கள் “பொம்பளைக்கு ஒன்னும் தெரியாது” என்று சொல்லி முட்டாள்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

11 comments on “பொம்பளைக்கு ஒன்னும் தெரியாது

 1. puduvaisiva சொல்கிறார்:

  சகா சிந்திக்க வேண்டிய பதிவு
  இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் நம்மை சுற்றி உள்ள மகா மட்டமான மீடியாக்கள் தரும் நஞ்சு சீரியல்.

  ஆனால் இன்றளவும் கூட்டு குடும்பத்தில் வாழ்பவர்கள் சிரியவர்களுக்கு ஒரு முன்மாதிரியான வாழ்கை கற்றுதரவும் தவறான பாதையை செல்லும் போது அதன் விளைவுகளை சொல்லி நம்மை நன் வழிப்படுத்துவர்கள். இது பல குடும்பகளில் இல்லததால் இவர்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும்.

  இதில் ஆண் & பெண் வேறுபாடு இல்லை.

 2. James Arputha Raj சொல்கிறார்:

  I don’t really agree with you on this….

  though you have given some examples, women are victimized more then 90% of the times. Men should give more respect to women rights in a country like India, where they are easily exploited and most of them are not independent enough to fight against it. they are not asking you to treat them special, just don’t treat them less…

  p.s.: even in the cases where women did wrong things, their is some guy who had influenced her. worst cases about women I’ve read on the paper happening in distance places, are still not as bad as cases I’ve seen in my real life about guys near me.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   சிறந்த முறையில் பெண்ணைப் போற்றக் காரணம். அவர்கள் புகழ் விரும்பிகள் என்பதால்தான். புகழ்ந்து பாருங்கள், புரியும். சில பெண்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் சிலப் பெண்கள் பல பெண்களாகி வருடங்கள் பல ஆகின்றன.

   டிஸ்கோத்தே கிளபுகளிலும், டேட்டிங் இடங்களிலும் இப்போது சாதாரண குடும்பப் பெண்களே வரத் தொடங்கிவிட்டனர். கல்லூரி மாணவர்கள் யாரவது அருகில் இருந்தால், அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், கல்லூரியில் பெண்கள் அடிக்கும் கூத்தை.

 3. Robin சொல்கிறார்:

  சகோதரனே,

  உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை. பெண்கள் என்ன சொன்னாலும்/செய்தாலும் அதை ஆமோதிப்பதுதான் முற்போக்குவாதம் என்று நினைப்பவர்களால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன.

  //சிறந்த முறையில் பெண்ணைப் போற்றக் காரணம். அவர்கள் புகழ் விரும்பிகள் என்பதால்தான். // உண்மை.

 4. Robin சொல்கிறார்:

  இங்கே ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன், காணவில்லை.!
  ஜெகதீஸ்வரன், நீங்களாவது பார்த்தீர்களா?

 5. lankeswaranq சொல்கிறார்:

  //பெரும்பான்மையான ஆண்கள் இன்னும் பெண்களுக்காக பரிந்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் அதற்கான தகுதியை பெண்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.//

  உண்மையிலும் உண்மை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s