தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள்

சிவனே சீவன்!.
சீவனே சிவன்!!
என்பது சித்தர்களின் கூற்று. உடல் நன்றாக இருந்தால் உலகம் நன்றாக இருக்கும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். அவர்களின் குண்டலி யோகாவும், காயகல்பமும் பலரால் ஆராய்ச்சி செய்யப்பட்டு இன்று பரப்பப்பட்டு வருகிறது. அவர்களில் முக்கியமானவர் வேதாத்திரி மகரிஷி.


தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க வளமுடன் என எல்லோரையும் சொல்ல சொல்கிறார். தமிழகம் மட்டுமல்லாமல் உலகமுழுவதும் இந்த கோசம் இப்போது ஓங்கி ஒலிக்கின்றது.

சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து வீட்டின் முகப்பு வரை இந்த வாசகம் இடம் பெற்றுவிட்டது. உலக சமுதாய சேவா சங்க உறுப்பினர்களும், அறிவுத் திருக்கோவில் யோகா நண்பர்களும் தாங்கள் சந்திக்கும் அனைவரிடமும் வாழ்க வளமுடன் என்று சொல்லியே பேச ஆரமிக்கின்றனர்.

மங்களமாக பேசுவது என்பது இந்துக்களுக்கே உள்ள நற்பண்பு. கெட்டி மேளம் கொட்டுவது முதல், துன்ப காரியத்திற்கு வந்தால் சொல்லாமல் போவது வரை மங்களத்தை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு வாழ்க வளமுடன் என வாழ்த்துவது மிகவும் பிடித்து போனது. “ஆண்டவா எல்லோரையும் காப்பாத்துப்பா” என்று சந்நிதியில் கோரிக்கை வைக்கும் பலரையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்.

எந்த ஒன்றையும் கண்மூடித்தனமாக நம்புவது என்பது அறியாமையாக மாறிவிடும். இந்த “வாழ்க வளமுடன்” எதற்காக என்பதை மகரிசியின் வார்த்தைகளில் அப்படியே உங்களுக்கு.,

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலக முழுவதையும் நினைத்து வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என வாழ்த்த வாழ்த்த, அந்த வாழ்த்து அலை உலக மனித சமூதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலக முழுவதிலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிடச் செய்யும்.

வாழ்த்து வீண் ஆகாது. வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் என சொல்ல உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். நம்மை சுற்றிலும் ஒரு நல்ல அலை இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும்.

நல்லவர்களை வாழ்த்துவதால் நன்றி தெரிவித்து கொள்கிறீர்கள். தீயவர்களை வாழ்த்துவதாலோ இரண்டு பயன்கள் கிடைக்கின்றன. தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம். தீயவர்களை வாழ்த்த வாழ்த்த, காலத்தால் அவர்கள் மனம் திருந்தி நல்லவர்களாகி நன்மை செய்கின்றார்கள்.

காரண காரிய விளக்கத்தையும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளவு அச்செயலிலேயே தொக்கி நிற்கிறது என்ற இயற்கை நியதியும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துடன் நீக்கமறப் பிணைந்திருப்பதையும் உணராது இருப்பதே இன்றய சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகின்றன. இதை உள்ளபடி உணர்வது தான் ஆத்ம ஞானமாகும்.

ஒவ்வொருவரும் உலகில் பிறக்கின்றோம். வளர்கின்றோம். வாழ்கின்றோம். முடிகின்றோம். வாழ்கின்ற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. மக்கள் உறவு அவசியமாகிறது.

எவரும் எதுவும் பிறக்கிற போது கொண்டு வந்ததில்லை. கொண்டு போவதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகிறது. அத்தகைய சமூதாயத்திற்கு தனது அறிவாற்றல் உடலாற்றல் இரண்டின் மூலம் கடனாற்ற வேண்டும்.

எல்லோரும் சமூதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடனாற்றினால் மனித சமூதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும் அதன் கீழ் இன்புற்று வாழலாம்.

4 comments on “தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள்

 1. puduvaisiva சொல்கிறார்:

  சகா நல்ல பதிவு வாழ்த்துகள்
  வேதாத்திரி மகரிஷின் வான்காந்த தத்துவத்தை பற்றியும் எழுதுங்கள்.
  அதுவே ஒவ்வொறுவரின் எண்ண அலையின் முறன்பாண்டை மிக அழகாக அதில் கூறிஇருப்பார்.

  அந்த வெள்ளகார பெண் படம் ரொம்ப ஓவரு 🙂

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி!. தத்துவத்தை விரைவில் தேடி இடுகிறேன். ஓசா முதல் சகல ஞானிகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் போல. வியப்பாக இருக்கிறது.!

   அப்புறம் அந்தப் படம் சென்னையில் வெயில் அதிகம் என்பதால்!. 🙂

 2. பால்பண்டியன் சொல்கிறார்:

  வேதாத்திரி மணிமொழிகள் என்றபெயரில் உங்கள் புலம்பல்களை எழிதி உள்ளிர்கள்
  இப்படிக்கு.
  பால்பண்டியன்

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பால்பாண்டியன். தங்களிடம் 10 ரூபாய் இருந்தால் வேதாத்திரியின் மணிமொழிகள் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்க்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s