சிலிக்கன் சிகிச்சை – காணோளியுடன் பார்வை 18+

முன்னழகை அதிகரிக்க இலியானாவுக்கு சிலிக்கன் சிகிச்சை என்ற செய்தி கண்களில் பட்டது. புதிய சங்கதி என்பதால் என்னவென்று தேடினேன். கிடைத்ததை இங்கே பகிர்கிறேன்.

மார்பழகு –

ஒரு உயிரினத்தின் மிக முக்கியமான செயல்களில் சந்ததி பெருக்கலும் ஒன்று. மனிதன் பாலூட்டி என்பதால் மார்பின் தேவையும், அதை பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல நாகரீக உலகில் மார்பு கவர்ச்சிக்கு உரிய விசயமாகவும், கலவி தூண்டல் உறுப்பாகவும் மாறிப் போனது.

இப்படி கலவி தூண்டல் உறுப்பாக மாறிப்போனதால், பெண்கள் எல்லோரும் தங்கள் அழகிற்காக மார்பை எடுப்பாக காட்ட துவங்கினர். பெரியதாகவும், தொய்வில்லாமல் இருப்பதுவே அழகு என்று ஆனபின். மார்பு படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமான குழந்தைக்கு பால் தருவதையே அழகு கெட்டுப்போகும் என மறுக்க தொடங்கி விட்டனர்.

இது வரை நாம் பார்த்தது கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்கும் முன்னான செய்திகளைத் தான். இப்போது பெண்கள் தங்களுக்கு இது போல மூக்கு வேண்டும், இது போல உதடு வேண்டும் என பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தங்கள் உருவத்தினை மாற்றி, தங்களுக்கு தாங்களே பிரம்மாக்களாக மாறிவிடுகின்றனர். பஞ்சு வைத்து பிரா போடுவது என்றெல்லாம் ஏமாற்றிய பெண்களுக்கு, இப்போது புதிதாக இணைந்திருப்பது சிலிக்கான் சிகிச்சை.

சொன்னது நடந்தது –

என்னுடைய பத்தாம் வகுப்பு ஆசிரியர் மிகவும் வேடிக்கையானவர். அவர் அடிக்கடி “பொட்ட புள்ளைகளைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்கடா. சிலது ஜாக்கெட்டுக்குள்ள கொட்டாங்குச்சி வைத்திருக்கும். ” என்று சொல்லுவார். “சார் எங்கேயோ அடிப்பட்டிருக்கார் போல” என்று நினைத்துக் கொள்வோம். இப்போது நடந்து கொண்டிருப்பதும் அது போல ஒரு விசயம் தான் என்கிறபோது மலைப்பாக இருக்கிறது.

சிலிகான் சிகிச்சை –

மார்பை பெரிதாக்க முதலில் திசுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி ஆகாததால், மருத்துவ துறை மாற்று முறையை தேட வேண்டியதாயிற்று.

இந்த சிலிக்கன் சிகைச்சை முறையில் மார்பின் கீழ்ப் பகுதியில் சிறிதாக கிழித்துவிட்டு சிலிக்கானை உள்ளுக்குள் நுழைத்து விட வேண்டியது. பின்பு சிகிச்சை தழும்பு தெரியாமல் மருத்தவம் செய்துவிட வேண்டியது. அவ்வளவு தான். சிறிய மார்பகப் பிரட்சனை ஓய்ந்தது.

சிலிக்கனை சிலர் சிலிக்கான் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். அழகிற்காக செய்யப்படும் சிகிச்சை என்பதால் காஸ்மடிக் சர்ஜரி என்ற பொதுவான ஆங்கிலத்திலும் குறிப்பிடுகின்றனர்.

சிலிகான் சிகிச்சை காணோளி –

இப்படி அழகிற்காக செய்வது எளிதான சிக்ச்சை என்றாலும், அதிக பணம் தேவைப்படுகிறது. உடல் அழகை மூலதனமாக கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு தானே இதெல்லாம் தேவைப்படும். அதனால் ஏகம் நடிகைளும், மாடல் அழகிகளும் இந்த சிகிச்சையை செய்து கொள்கின்றார்கள். இப்போது பல இளம் பெண்கள் தங்களது பெற்றோர்கள் துணையுடன் இந்த சிகிச்சையை செய்து கொள்வதாகவும் சில இணையதளங்கள் செய்து வெளியிட்டிருக்கின்றன.

மேலும் படிக்க –

மார்பக சிகிச்சை- மருத்துவரை ஏமாற்றிய நடிகை

கொஞ்சம் சிரிக்க –

கிண்டல் செய்வது என்பது நமக்கு கைவந்த கலை என்பதால் சில கார்டூன்கள்.

சப்பை பிகரை கூட சூப்பர் பிகராக மாற்றிடும் என கூடிய விரைவில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வரவிருக்கின்றன. உங்கள் கருத்துகளைச் சொல்லிச் செல்லுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s