விவேக் – வெளியே தெரியாத உண்மைகள்

நாத்திகம் பேசுகின்றவர்களும், ஊருக்கு உபதேசம் செய்கின்றவர்களும் உண்மையான வாழ்க்கையில் அதை கடைபிடிப்பதே இல்லை. நாத்திகத்தின் மூச்சாக செயல்ப்ட்டு வந்த பெரியார் தாசன் பல மதங்களுக்கு மாறி மாறி போய்கொண்டிருக்கின்றார். நாத்திக தலைவராக தன்னை முன்நிறுத்திக் கொள்ளும் கருணாநிதியின் பல ஆன்மீக செயல்கள் எல்லோருக்கும் தெரிந்தது. இப்படி பொய்களை மக்களிடம் பேசுபவர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் சின்னக் கலைவானர் விவேக்.

நாத்திகம் –

கல்லை வழிபடும் கிராமத்து மக்கள் முதல் மண் சோறு சாப்பிடும் பெண்கள் வரை எல்லோரையும் அறிவில்லாத மடையர்கள் எனவும், ஆயிரம் பெரியார் வந்தால் கூட திருந்த மாட்டார்கள் எனவும் நாத்திகம் பேசிய ஒரு நடிகர்.

ரஞ்சிதா புகழ் நித்தியானந்தரின் புத்த வெளியிட்டு விழாவில் தன்னுடைய ஆன்மீக பக்தியை வெளிக்காட்டியுள்ளார். அதில் அவர் “கலைஞர் 30 வயதில் பராசக்தி எழுதினார், ஆனால் இங்கு பராசக்தியே 30 புத்தகம் எழுதியுள்ளது” என்று சொல்ல நித்தியனந்தரே வெக்கப்படுகிறார். அந்தக் காணோளியை இங்கே இணைத்துள்ளேன்.

இந்த விழாவில் நடிகர் விஜய் அப்பா சந்திரசேகர், மனோரம்மா, சரத்குமார் என ஏகப்பட்ட திரைத்துறையினர் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் விவேக் அளவிற்கு அவரை புகழ்ந்தது யாரும் இல்லை.

சாதியொழிப்பு –

மதத்தினை பற்றி மட்டுமல்ல, சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியாரின் வரிகளை பயன்படுத்தி மக்களுக்கு அறிவுரை சொல்லவும் தவறவில்லை. ஆனால் தலித் மக்களின் குழந்தைகளை சகிலா படம் பார்க்கும் தவறானவர்களாக, சேரியில் வசிக்கும் பெண்களை ஆபாசமாக, இன்னும் இன்னும் கேவலமான மக்களாகவே மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றார், என்பதை யாரேனும் மறுக்க முடியுமா.

தனக்கென ஒரு பிரட்சனை வந்தவுடன் சாதிச் சங்கத்திடம் சரணடைந்த ஒரு தன்னல மனிதன் தானே விவேக். நக்கிரன் இணையதளம் கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ” மூட்டலுக்கு எதிர்ப்பு! என்று உண்மையை வெளியிட்டுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் முன் தன்னைப் பற்றி அவர் சிந்தித்தாரா?

ஆபாசம் –

புறாவை பிரா என்பதும், சகிலா, பாபிலோனா, மும்தாஜ் என மசாலா மாமிகளுடன் அவர் அடித்த கொட்டங்களை பார்த்து தமிழ் அரங்கம் சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! என ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆபாச, இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடிக்கும் நடிகனாக மட்டுமல்லாமல், பத்திரிக்கை துறையில் பணி செய்யும் அனைத்து மக்களின் மனைவி, மகள்களை அசிங்கமாக பேசியது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கதாநாயகி –

தனக்கு பிடித்த கதாநாயகி தான் வேண்டும் என கேட்டு அவரோடு நடிப்பதே விவேக்கின் பாணி, மாளவிகா வேண்டுமென அவர் ஆசையோடு கேட்டதும், இணைந்து நடித்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது விவேக் கேட்பது பிரேமப்பிரியா என்கிற நடிகையை, தமிழ் சோர்ஸ் இணையதளம் பிரேமப்பிரியாதான் வேண்டும் – விவேக்கின் அடம்! என செய்தி வெளியிட்டுள்ளது.

பதிவுக்கு கொஞ்சம் மாறுபட்ட எண்ணம் –

நண்பர் ஜவகர் விவேக் காமெடியிலிருந்து கொஞ்சம் பொறியியல் என்றொரு புதிய அனுகுமுறையை சொல்லியுள்ளார்.

அடிப்படையான மதநம்பிக்கைகளை கேளியும் கிண்டலும் செய்தாலும், சில நல்ல கருத்துகளை சொல்லியுள்ளார் என்பதால் அவருக்கு இருகக்கும் சில ரசிகர்களையும் அவர் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். சென்னையில் ஒரு பிரபல வானோலி நிலையத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் மக்களை திட்டினார். திரைதுறையின் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட தங்களின் ரசிகர்கள் கொடுக்கும் தொல்லைகளை தங்களுக்கு கிடைத்த வரமாக நினைத்துக் கொள்ளும் இந்த காலத்திலும் இப்படியும் ஒரு மனிதரா என வியப்பாக இருந்தது எனக்கு.

விவேக் ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல், பண்படுததவே இந்த இடுகை.

6 comments on “விவேக் – வெளியே தெரியாத உண்மைகள்

 1. Jawahar சொல்கிறார்:

  சாமியார்களின் வட்டத்தில் நடிகர்களும் வேறு பிரபலஸ்தர்களும் சிக்குவது அவர்களுக்கு சாமியார்கள் பால் இருக்கும் ஈடுபாட்டால் அல்ல என்பது என் துணிவு. சாமியார்த்தனத்தை முனைப்பான வியாபாரமாகச் செய்ய ஆரம்பித்து பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நடிகர்களை அழைப்பது அவர்களின் மார்க்கெட்டிங் டெக்னிக். வேறொரு “குரு” வின் ஆஸ்ரமத்திலும் அவரோடு உட்கார்ந்து விவேக் உரையாடும் காட்சியை விஜய் டிவியில் பார்த்திருக்கிறேன். இது ஒரு பரஸ்பர விளம்பர யுக்தியாகவே எனக்குப் படுகிறது.

  http://kgjawarlal.wordpress.com

 2. Jawahar சொல்கிறார்:

  விவேக் எந்த அட்டகாசமும் செய்வதாகவோ அதை முன் நிறுத்த வேண்டும் என்றோ நான் சொன்னதில்லை, சொல்லப் போவதும் இல்லை. காமெடிக் காட்சிகள் பரவலாக ரசிக்கப் படுபவை. அதை முன் நிறுத்தி பொறியியலைச் சொன்னால் அது எளிய வாசகர்களுக்கு சீக்கிரம் புரியும் என்பதால் சொன்னேன். தயவு செய்து என் இடுகைக்கு தப்பான நிறத்தைத் தர வேண்டாம்.

  http://kgjawarlal.wordpress.com

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   இந்த இடுகைக்கும் உங்கள் இடுகைக்கும் இருக்கும் ஒரே தொடர்பு விவேக் என்பது மட்டுமே. விவேக்கைப் பற்றி படிக்க வருகின்றவர்கள் உங்கள் பொறியியல் இடுகையையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இணைப்பு கொடுத்தேன். மற்றபடி வேறு காரணம் இல்லை.

 3. Jawahar சொல்கிறார்:

  நன்றி ஜகதீஸ்வரன்

  http://kgjawarlal.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s